tamilkurinji logo


 

சபரிமலை வரும் பக்தர்களுக்கு கஞ்சி மட்டுமே வழங்க வேண்டும்,Sabarimala sannithanam

Sabarimala,sannithanam




சபரிமலை வரும் பக்தர்களுக்கு கஞ்சி மட்டுமே வழங்க வேண்டும்

First Published : Thursday , 9th August 2012 08:29:54 PM
Last Updated : Thursday , 9th August 2012 08:29:54 PM


சபரிமலை வரும் பக்தர்களுக்கு கஞ்சி மட்டுமே வழங்க வேண்டும்,Sabarimala sannithanam

சபரிமலை வரும் பக்தர்கள் அனைவருக்கும் கஞ்சி மட்டுமே வழங்கும்படி கேரள உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மண்டல, மகர விளக்கு சீசன்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்கள், சாப்பாடு கழிவுகள், ஓட்டல் கழிவுகள் போன்றவை சபரிமலையில் மலை போல் குவிகின்றன. சீசன் நேரங்களில் இதை அகற்றும் பணியில் 300,க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் 24 மணி நேரமும் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனாலும், குப்பை குவிவதை தடுக்க முடியவில்லை. இது தவிர, பிளாஸ்டிக்  கழிவுகளை யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் சாப்பிடுவதால் அவைகளும் பலியாகின்றன.

இந்நிலையில், குப்பைகள் சேருவதை குறைப்பது குறித்து ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி  தேவசம் போர்டுக்கு கேரள உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
அதன்படி, தேவசம் போர்டு நேற்று தாக்கல் செய்த அறிக்கையில், ‘மலையில் சாப்பாட்டு கழிவுகள் குவிவதுதான் பெரும் பிரச்னையாக உள்ளது. ஓட்டல்கள், அன்னதான மையங்க ளில் இருந்து கொட்டப்படும் கழிவுகள், சுற்றுச் சூழலுக்கும், வன விலங்குகளுக்கும் பெரும் தீங்கை ஏற்படுத்துகின்றன. எனவே, இதற்கு மாற்று ஏற்பாடாக என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்’ என கூறப்பட்டுள்ளது.

இதை பரிசீலித்த நீதிபதிகள் ராதாகிருஷ் ணன், வினோத் சந்திரன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், ‘ஓட்டல்கள், அன்னதான மையங்களில் பக்தர்களுக்கு கஞ்சியை மட்டுமே உணவாக வழங்குவது குறித்து ஆலோசிக்கலாம். நிலைக்கல் முதல் சன்னிதானம் வரையிலும், எருமேலி, பம்பை ஆகிய இடங்களிலும் மற்ற உணவு வகைகளை தவிர்த்து பக்தர்களுக்கு கஞ்சி மட்டும் வழங்கலாம்.

இந்த பகுதிகளில் மற்ற உணவுப் பொருட்களுக்கு தடை விதிப்பது குறித்து கேரள அரசு முடிவு எடுக்கலாம். மேலும், பக்தர்களுக்கு பிளாஸ்டி பாட்டில்களுக்கு பதிலாக வேறு எந்த வகையிலாவது குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினர்.

சபரிமலை வரும் பக்தர்களுக்கு கஞ்சி மட்டுமே வழங்க வேண்டும்,Sabarimala sannithanam சபரிமலை வரும் பக்தர்களுக்கு கஞ்சி மட்டுமே வழங்க வேண்டும்,Sabarimala sannithanam சபரிமலை வரும் பக்தர்களுக்கு கஞ்சி மட்டுமே வழங்க வேண்டும்,Sabarimala sannithanam
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலபுராணப்படி, சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த இடம் என்பதால்

மேலும்...

 மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு
ஒவ்வொரு புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும்  புனிதமான அமாவாசை ஆகும். தட்சனாயத்தில் வரும் முதல் அமாவாசையான  ஆடி அமாவாசை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைவிட பல மடங்கு முக்கியத்துவம் பெறும் அமாவாசை புரட்டாசி அமாவாசை ஆகும். இந்த அமாவாசை நாள்

மேலும்...

 அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை
மதாந்தோறும் வரும் அமாவாசை தினமானது இறந்த நமது முன்னோர்களுக்கு  விரதம் இருக்க ஏற்ற நாளாகும்இவற்றில் ஆடி அமாவாசை தை அமாவாசை மகாளய அமாவாசை  முக்கியமானவை.  முன்றில் ஆடி அமாவாசை மிகவும் விசேஷமானது.ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்;

மேலும்...

 மகிமை நிறைந்த மகாளய அமாவாசை
சூரியன் கன்னி ராசிக்குள் செல்லும்போது, அதாவது புரட்டாசி மாதம், எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் நமது முன்னோர்களும் இறந்து போன ரத்தசம்பந்த உறவுகளும் அந்தந்த உறவினரைகுடும்பத்தினரை காண ஆசையுடனும், மகிழ்ச்சியுடனும் நம்மை காணவருவார்கள். அந்த நேரத்தில் அவர்களை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in