சபரிமலை நடை 26ம் தேதி அடைப்பு

சபரிமலை நடை 26ம் தேதி அடைப்பு
மண்டல பூஜை முடிந்து, சபரிமலை நடை, வரும், 26ம் தேதி இரவு, 10:00 மணிக்கு அடைக்கப்படும். மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக, 30ம் தேதி மாலை திறக்கப்படும்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில், நவ., 16ம் தேதி துவங்கிய மண்டல காலம், நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. ஆரன்முளாவில் இருந்து, இம்மாதம், 22ம் தேதி புறப்பட்ட தங்க அங்கி பவனி, நாளை நண்பகலில், பம்பை வந்தடையும்.மாலை, 3:00 மணிக்கு, பெட்டியில் அங்கியை வைத்து, பக்தர்கள் சன்னிதானம் கொண்டு வருவர். சன்னிதானம் வந்தடையும் தங்க அங்கியை, மாலையில், கோவிலின் தலைமை பூசாரி பெற்று, அய்யப்பனின் விக்ரகத்தில் அணிவித்து தீபாராதனை நடத்துவார்.வரும், 26ம் தேதி பகல், 12:30 மணிக்கு மண்டல பூஜை நடக்கிறது. அன்று காலை, 11:00 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெறும். மண்டல பூஜை நிறைவடைந்ததும், மதியம் மூடப்படும்

கோவிலின் நடை, மீண்டும் மாலை, 5:00 மணிக்கு திறக்கப்பட்டு, தீபாராதனை, அத்தாழ பூஜைக்கு பின், இரவு, 10:00 மணிக்கு மூடப்படும்.அதன்பின், பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். மகர விளக்குக்கான ஏற்பாடுகளும் நடைபெறும். மகர விளக்கு பூஜைக்காக, வரும், 30ம் தேதி மாலை நடை திறக்கப்படும்.
https://goo.gl/SsdQQv






28 Oct 2014

இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்

21 Sep 2014

மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு

21 Jul 2014

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

24 Sep 2013

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை

08 Jun 2013

திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

23 Apr 2013

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

17 Apr 2013

ஆன்மீக செய்திகள்

11 Apr 2013

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்

07 Apr 2013

அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்

25 Mar 2013

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு