சபரிமலை கோயிலில் நாளை நடை திறப்பு

சபரிமலை கோயிலில் நாளை நடை திறப்பு
நிறைபுத்தரிசி பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை  மாலை திறக்கப்படுகிறது.

6ம் தேதி காலை நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடந்தோறும் ஆடி மாதத்தில் நிறைபுத்தரிசி பூஜை நடத்தப்படுவது வழக்கம். நாட்டில் வறுமை நீங்கி வளம் செழிப்பதற்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது. இவ்வருட நிறைபுத்தரிசி பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடைநாளை மாலை 5.30 மணியளவில்  திறக்கப்படுகிறது நாளை மறுநாள் அதிகாலை 5.30க்கும் 6.30 மணிக்கும் இடையே நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும்.

பக்தர்கள் வயல்களில் அறுத்து கொண்டு வரும் புதிய நெற்கதிர்கள் மற்றும் ஐயப்பன் கோயில் சார்பில் கொண்டு வரப்படும் நெற்கதிர்கள் கோயிலுக்குள் வைத்து பூஜை செய்யப்படும். பின்னர், நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இந்த நெற்கதிர்களை தங்கள் வீடுகளில் கட்டி வைத்தால் அடுத்த ஒரு வருடத்திற்கு வளம் செழிக்கும் என்பது ஐதீகம். நிறைபுத்தரிசி பூஜைக்கு பின்னர் அன்றைய தினம் உதயாஸ்தமன பூஜை மற்றும் படிபூஜை நடைபெறும். தொடர்ந்து அன்று இரவு 10 மணியளவில் நடை சாத்தப்படும். பின்னர், ஆவணி மாத பூஜைகளுக்காக 16ம் தேதி மாலை திறக்கப்படும். தொடர்ந்து 21ம் தேதி வரை ஆவணி மாத பூஜைகள் நடைபெறும்.
https://goo.gl/1fLsyJ






28 Oct 2014

இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்

21 Sep 2014

மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு

21 Jul 2014

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

24 Sep 2013

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை

08 Jun 2013

திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

23 Apr 2013

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

17 Apr 2013

ஆன்மீக செய்திகள்

11 Apr 2013

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்

07 Apr 2013

அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்

25 Mar 2013

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு