சபரிமலை அய்யப்பன் கோவிலில் 26-ந் தேதி மண்டல பூஜை

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 26-ந் தேதி மண்டல பூஜை
சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 26-ந் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதனால் இந்த திருவிழா காலங்களில் சபரி மலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டின் மண்டல பூஜை திருவிழா கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் ஒரு மண்டலம் நிறைவடைவதை தொடர்ந்து, விழாவின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை வருகிற 26-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகள் சன்னிதானத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

மண்டல பூஜையை முன்னிட்டு, அய்யனுக்கு அணிவிப்பதற்கான தங்க அங்கி, பத்தனம்திட்டை ஆரன் முளை பார்த்தசாரதி கோவிலில் இருந்து, வருகிற 22-ந் தேதி ஊர்வலமாக சபரிமலை நோக்கி புறப்படுகிறது.

25-ந் தேதி சன்னிதானத்திற்கு வந்து சேரும் தங்க அங்கி, மாலையில் சாமிக்கு அணி விக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

26-ந் தேதி பகல் 12.30 மணிக்கு சாமிக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் உள்பட பிரசித்திபெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது.

இதனால் இனியுள்ள நாட்களில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் தேவசம் போர்டும், போலீசாரும் பல்வேறு முன் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

அப்பம்-அரவணை பிரசாதங்களை தட்டுப்பாடு இன்றி பக்தர்களுக்கு வழங்குவதற்கு தேவையான கை இருப்பு வைப்பதற்கான தீவிர முயற்சியில் தேவசம் போர்டு ஈடுபட்டு வருகிறது.

தற்போது அப்பம் பிரசாதம் போதிய அளவு தயாரிக்கப்பட்டு கையிருப்பு வைக்கப்படாததால், ஒருவருக்கு தலா 4 பொட்டலம் என்ற கணக்கில் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரவணை பிரசாதம் குறைவின்றி தேவையான அளவு வழங்கப்படுகிறது.

பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி சிறப்பான தரிசனத்திற்கு வழிவகை செய்வதற்காக வருகிற 18-ந் தேதி சபரிமலைக்கு கூடுதல் போலீசார் வர உள்ளனர். பம்பை, நிலைக்கல் ஆகிய இடங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மதிப்பிட்டு விவாதிப்பதற்காக ஏ.டி.ஜி.பி. சந்திரசேகரன், சிறப்பு கமிஷனர் கே.பாபு ஆகியோர் தலைமையில் நிலைக்கல் மற்றும் பம்பையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.  

https://goo.gl/pfp5Fq






28 Oct 2014

இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்

21 Sep 2014

மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு

21 Jul 2014

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

24 Sep 2013

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை

08 Jun 2013

திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

23 Apr 2013

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

17 Apr 2013

ஆன்மீக செய்திகள்

11 Apr 2013

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்

07 Apr 2013

அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்

25 Mar 2013

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு