tamilkurinji logo
 

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை நிறுத்த ஆந்திர முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை நிறுத்த ஆந்திர முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

First Published : Friday , 16th June 2017 12:30:05 PM
Last Updated : Friday , 16th June 2017 12:30:05 PM


கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை நிறுத்த  ஆந்திர முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை நிறுத்த கோரி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.


இது குறித்து அவர் எழுதியுள்ள கடித்தில், தடுப்பணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசுடன் கலந்தாலோசிக்காமல் ஆந்திர அரசு தன்னிச்சயைாக முடிவெடுத்துள்ளது.

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.


எனவே இவ்விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை அறிந்த பி்னரே தடுப்பணை பணி குறித்து முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் தடுப்பணை பணியை நிறுத்த உடனடியாக ஆந்திர அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக, ஆந்திர மாநில எல்லையான பள்ளிப்பட்டு பகுதி கொசஸ்தலை ஆற்றில் 5 இடங்களில் தடுப்பணை கட்ட ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு  தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 நாட்களுக்கு முன் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம்,   ள்ளிப்பட்டு வட்டத்தில் தமிழக பொதுப்பணித்துறையின் கீழ் வெளியகரம் பெரிய பாசன ஏரி உள்ளது.


சுமார் 350 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த ஏரி நீர் மூலம் 2000 ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வருகிறது. இந்த வெளியகரம் ஏரிக்கு ஆந்திர மாநிலம் கொசஸ்தலை ஆற்றில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரம் வரை வரவு கால்வாய் வழியாக தண்ணீர் வருகிறது.


இந்த வரவு கால்வாயை 100 ஆண்டுகளாக வெளியகரம், வெளியகரம் காலனி, ஐவி பட்டடை ஆகிய கிராமங்களை சேர்ந்த தமிழக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.


இந்நிலையில், இந்த வரவு கால்வாயின் குறுக்கே நலவாய் எனும் இடத்தில் ஆந்திர மாநில நீர்வளத்துறை சார்பில்  தடுப்பணை கட்ட முதற்கட்ட பணிகள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கப்பட்டு, பள்ளங்கள் தோண்டப்பட்டது.

மேலும் கால்வாய் வரும் இடங்களில் இதே போன்று 5 தடுப்பணைகள்  கட்ட ஆந்திர அரசு டெண்டரும்  கோரியுள்ளது.  அவ்வாறு கொசஸ்தலை ஆற்றில் இருந்து பிரியும் வெளியகரம் வரவு கால்வாயில் தடுப்பணை கட்டப்பட்டால் வெளியகரம் ஏரிக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது.  2000 ஏக்கர் பயிர் நீரின்றி கருகும். நிலத்தடி நீர் மட்டமும் அதலபாதாளத்துக்கு செல்லும்.

குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும். அத்துடன் பள்ளிப்பட்டு மற்றும்  பூனிமாங்காடு ஏரிக்கும் தண்ணீர் வருவதற்கு வாய்ப்பில்லை.  இதனால் வெளியகரம் வரவு கால்வாயில் தடுப்பணைகள் ஆந்திர மாநில அரசு கட்டுவதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில்  வெளியகரம், வெளியகரம் காலனி, ஐவி பட்டடையை சேர்ந்த பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பி.ரவீந்திரநாத் தலைமையில் கூடினர்.

ஆந்திர அரசு தடுப்பணை கட்டும் நலவாய் எனும் இடத்திற்கு சென்று பணி செய்யக்கூடாது என தடுத்து கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை நிறுத்த கோரி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.




  Tags :  
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை நிறுத்த  ஆந்திர முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை நிறுத்த  ஆந்திர முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை நிறுத்த  ஆந்திர முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 லஞ்சப் புகாரில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்: ஸ்டாலின்
பான் மசாலா, குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக புகாரில் சிக்கிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.உயிரை கொல்லும் பொருட்களை விற்பதற்காக மாமூல் வாங்கி இருக்கிறார். இது

மேலும்...

 குட்கா விற்க அமைச்சர் அதிகாரிகளுக்கு ரூ.40 கோடி லஞ்சம் வருமான வரி சோதனையில் அம்பலம்
 குட்கா’ விற்பனையை அனுமதிக்க அமைச்சர், அதிகாரிகள் ரூ.40 கோடி லஞ்சமாக பெற்றது வருமான வரி சோதனையில் அம்பலமாகி உள்ளது.தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.என்றாலும் தமிழ்நாடு முழுவதும் சிறு கடைகளில் ரகசியமாக குட்கா, பான் மசாலா விற்பனை

மேலும்...

 2 வது மனைவியின் மகளை பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை கைது
கருங்கல் அருகேயுள்ள  ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரன் என்ற தாஸ் (57) பில்லி, சூனியம் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவரது 2வது மனைவிக்கு 20 வயதில் மகள் உள்ளார். இவர் அப்பகுதியில்

மேலும்...

 ஜனாதிபதி தேர்தலுக்கு பின் தமிழகத்தில் நிச்சயம் சட்ட சபை தேர்தல் வரும் : ஸ்டாலின்
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பின் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் அருகே திமுக சார்பில் குளம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதனை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in