tamilkurinji logo


 

கேள்வியை பாராட்டும் விதமாக கன்னத்தில் தட்டினேன் என்பதை நான் நம்பவில்லை -பெண் பத்திரிகையாளர்,Tamil Nadu governor apologises for patting woman journalist's cheek ..

Tamil,Nadu,governor,apologises,for,patting,woman,journalist's,cheek,..




செய்திகள் >>> தமிழகம்

கேள்வியை பாராட்டும் விதமாக கன்னத்தில் தட்டினேன் என்பதை நான் நம்பவில்லை -பெண் பத்திரிகையாளர்

First Published : Wednesday , 18th April 2018 06:53:58 PM
Last Updated : Wednesday , 18th April 2018 06:53:58 PM


கேள்வியை பாராட்டும் விதமாக கன்னத்தில் தட்டினேன் என்பதை நான் நம்பவில்லை -பெண் பத்திரிகையாளர்,Tamil Nadu governor apologises for patting woman journalist's cheek ..

கேள்வியை பாராட்டும் விதமாக கன்னத்தில் தட்டினேன் என்பதை நான் நம்பவில்லை என்று கவர்னருக்கு பெண் பத்திரிகையாளர் டுவிட்டரில் பதில் அளித்து உள்ளார்.


கவர்னராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக  நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்  செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது

 'தி வீக்' இதழி
ன் செய்தியாளர் லட்சுமி சுப்ரமணியன் பன்வாரிலால் புரோகித்திடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு பதில் சொல்லாமல் அவரது கன்னத்தை கவர்னர் தட்டிக்கொடுத்தார்.

இது குறித்து  செய்தியாளர் லட்சுமி சுப்ரமணியன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார். இத்தகைய செயலுக்கு தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் பெண் நிருபர் கன்னத்தை தட்டிய விவகாரத்தில்  கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருத்தம் தெரிவித்துள்ளார். கேள்வியை பாராட்டும் விதமாகவே எனது பேத்திபோல் நினைத்து கன்னத்தில் தட்டினேன்.

40  ஆண்டுகளாக  செய்தியாளராக இருந்துள்ளதால் அந்த கேள்வியை பாராட்டும் விதமாக கன்னத்தில் தட்டினேன் என கூறி  உள்ளார்.

பெண் பத்திரிகையாளருக்கு ஆளுநர் மின்னஞ்சல் மூலம் தனது வருத்தத்தை பதிவு செய்து அனுப்பி உள்ளார்.

இது குறித்து பெண் பத்திரிகையாளர் தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

சென்னையிலுள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் என்ன நடந்தது என்பதைப் பற்றி உங்கள் கடிதம் எனக்கு வருத்தம் தெரிவித்தது. உங்கள் மன்னிப்பை ஏற்று கொள்கிறேன்.


நான் உங்களிடம் கேட்ட கேள்விக்கு பாராட்டு  தெரிவித்தேன் என்ற உங்கள் கருத்து பற்றி நான் உறுதியாக நம்பவில்லை என கூறி உள்ளார்.

கேள்வியை பாராட்டும் விதமாக கன்னத்தில் தட்டினேன் என்பதை நான் நம்பவில்லை -பெண் பத்திரிகையாளர்,Tamil Nadu governor apologises for patting woman journalist's cheek .. கேள்வியை பாராட்டும் விதமாக கன்னத்தில் தட்டினேன் என்பதை நான் நம்பவில்லை -பெண் பத்திரிகையாளர்,Tamil Nadu governor apologises for patting woman journalist's cheek .. கேள்வியை பாராட்டும் விதமாக கன்னத்தில் தட்டினேன் என்பதை நான் நம்பவில்லை -பெண் பத்திரிகையாளர்,Tamil Nadu governor apologises for patting woman journalist's cheek ..
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in