கூவத்தூர் ரகசியத்தை வெளியிடத் தயார்- கருணாஸ் பேச்சு

கூவத்தூர் ரகசியத்தை வெளியிடத் தயார்- கருணாஸ் பேச்சு
தி.மு.க. சார்பில் அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டசபை கூட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

இப்போதைய அரசு ஜனநாயகத்துக்கு எதிராக உள்ளது. மக்கள் மீது அக்கறை கொள்ளாமல் தங்கள் மீது மட்டும் அக்கறையுடன் செயல்படுகிறார்கள். நான் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அரசியலில் அறிமுகம் செய்யப்பட்டேன். இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட்டு ஜெயித்தேன்.

என்றாலும், இன்று வரை நடுநிலையுடன்தான் செயல்படுகிறேன். மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து எதிர்த்து வருகிறேன். தூத்துக்குடியில் அரசு நடந்து கொண்ட விதம் எனக்கு மிகுந்த மனவருத்தத்தை கொடுத்து இருக்கிறது.

தூத்துக்குடியில் அமைதியாக ஊர்வலம் நடத்திய மக்கள் மீது குறிவைத்து சுட போலீசாருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இது பற்றி சட்டசபையில் பேசுவதற்கு கூட அனுமதி மறுக்கப்படுகிறது. உதவி வட்டாட்சியர் உத்தரவுப்படி துப்பாக்கி சூடு நடந்தது என்கிறார்கள்.

முதல்-அமைச்சர் இது பற்றி பேசும் போது துப்பாக்கி சூடு என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லை. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா என்னுடைய பாதுகாப்புக்காக நியமித்த அதிகாரியை நீக்கி இருக்கிறார்கள். சட்டசபையில் துப்பாக்கி சூட்டை கண்டித்து நான் பேசியதால் அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.

நான் எப்போதும் நியாயத்தின் பக்கம்தான் இருப்பேன். தி.மு.க. தற்போது மக்களுக்காக குரல் கொடுக்கிறது. நானும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறேன். மக்களுக்காக செயல்பட வேண்டும் என்பதே எனது நோக்கம். இந்த ஆட்சி நீக்கப்பட வேண்டும்.

அடுத்து ஜனநாயகத்தை மதிக்கும் ஆட்சி அமைய வேண்டும். இதில், மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சர் ஆக வேண்டும். மக்கள் நலனை மட்டும் சிந்திக்கும் அரசாக அது இருக்க வேண்டும். இன்றைய ஆட்சியாளர்கள் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். சாதாரண சத்துணவு அமைப்பாளர் வேலைக்கு கூட பணம் கேட்கிறார்கள்.

நான் எனது தொகுதி மக்களுக்காக 182 மனுக்களை அரசிடம் கொடுத்து இருக்கிறேன். அதில் 2 மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளது. எனவே அடுத்து மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனநாயகத்தை மதிக்கும் ஆட்சி வரவேண்டும். எனக்கு சீட் வேண்டும் என்பதற்காக இப்படி பேசவில்லை. மக்கள் நலனை கருத்தில் கொண்டே இதை சொல்கிறேன்.

மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்பதற்காகவே நான் எம்.எல்.ஏ. ஆனேன். ஆனால் அவமானங்களை சந்தித்து விட்டேன். இந்த ஆட்சி தொடர என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். தேவைப்பட்டால் கூவத்தூர் சம்பவம் பற்றிய ரகசியத்தை வெளியிடவும் தயாராக இருக்கிறேன்.

இன்றைய அரசு பணத்துக்காக நடைபெறும் அரசாக இருக்கிறது. வியாபாரம் போல நடக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். மக்கள் இந்த அரசை விரும்பவில்லை. எனவே, மக்கள் விரும்பும் அரசு, ஜனநாயகத்தை மதிக்கும் அரசு வர வேண்டும். அதற்கு நானும் துணை நிற்கிறேன். இவ்வாறு கருணாஸ் பேசினார்.
https://goo.gl/CTHdnz


18 Dec 2018

வீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா?- அதிகாரியிடம் போனில் பேசிய கமல்

14 Dec 2018

நான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்

14 Dec 2018

புயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

14 Dec 2018

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்

13 Dec 2018

பள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

13 Dec 2018

கழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்

13 Dec 2018

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் : வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

13 Dec 2018

தினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் - முதல்வர் பகிரங்க அழைப்பு

11 Dec 2018

குடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை

11 Dec 2018

கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்