குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா

குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா
குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. கடற்கரையில் நடைபெற்ற சூரசம்ஹாரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.

9 நாட்கள் நடந்து முடியும் நவராத்திரி விழாவின் மறுநாள், விஜயதசமி அன்று தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. குலசேகரன்பட்டினத்தில் ஞானமூர்த்தீசுவரர் சமேதராக அன்னை முத்தாரம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். தசரா விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.

கொடுமைகள் பல செய்த மகிஷாசூரனை சம்ஹாரம் செய்து, மகிஷாசூரமர்த்தினி என்ற பெயருக்கு அன்னை முத்தாரம்மன் உரித்தாகிய நிகழ்வு தான் இங்கு தசரா திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் மூலம் உலகில் ஆணவம், அகம்பாவம் போன்ற தீயகுணங்களுக்கு என்றும் அழிவு வரும் என்பதை மக்களுக்கு முத்தாரம்மன் மெய்ப்பித்து காட்டுகிறார் என்பது ஐதீகம்.

இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நள்ளிரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் கடற்கரையில் நடைபெற்றது. இரவு 11 மணிக்கு அன்னையின் சூரசம்ஹார சூலாயுதத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் நீண்ட ஜடா முடி, கையில் சூலாயுதம், வாள் ஏந்தி ஆங்கார கோபத்துடன், தீயசக்திகளை அழிப்பதற்காக அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார்.

அப்போது கோவில் கடற்கரையில் மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் உள்பட லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். காளி வேடம் அணிந்து இருந்த பக்தர்கள் புடைசூழ கடற்கரை நோக்கி அன்னை சிம்ம வாகனத்தில் புறப்பட்டார்.

கடற்கரையில் பக்தர்கள் வெள்ளத்தில் அம்மன் வீற்றிருந்தார். முதலில் மகிஷன் அம்மனை சுற்றி, சுற்றி வந்து கொக்கரித்தான், அடுத்ததாக சிம்மத் தலையுடன் வந்தான். அதன் பின்னர் மகிஷாசூரன் தலையுடன் வந்த சூரன் சற்று நேரத்தில், சம்ஹாரம் செய்யப்பட்டான். அன்னையின் சூலாயுதத்துக்கு சூரன் அழிந்தான். அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் "ஓம் காளி'', "ஜெய் காளி'' என்று பக்தி பரவசத்துடன் கோஷங்கள் எழுப்பினர். பக்தி கோஷம் விண்ணை தொட்டது.

விழாவில், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.

தசரா திருவிழாவின் முக்கிய அம்சமாக மாலை அணிந்து விரதம் கடைப்பிடித்து வேடம் அணிவதாகும். சிவன், விஷ்ணு, பிரம்மா, காளி, கருங்காளி, மீனாட்சி, முத்தாரம்மன், முருகன், விநாயகர், ராமர், லட்சுமணன், அனுமன், கிருஷ்ணர், சிங்கம், புலி, கரடி, முனிவர், முதியவர், மூதாட்டி, டாக்டர், நர்சு, போலீஸ்காரர், பிச்சைக்காரன், குறவன்-குறத்தி, மணப்பெண், மணமகன் என பல்வேறு வேடங்கள் அணிந்த தசரா குழுவினர் பேண்டு வாத்தியம் முழங்க தெருக்களில் குதூகலமாக ஆடிப்பாடி வந்தனர். தசரா குழுவினர் சார்பில் ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விடிய, விடிய பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
https://goo.gl/QHaPV3


28 Oct 2014

இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்

21 Sep 2014

மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு

21 Jul 2014

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

24 Sep 2013

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை

08 Jun 2013

திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

23 Apr 2013

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

17 Apr 2013

ஆன்மீக செய்திகள்

11 Apr 2013

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்

07 Apr 2013

அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்

25 Mar 2013

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு