tamilkurinji logo
 

கர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரகாஷ்ராஜ் பிரச்சாரம்,Prakash Raj - Latest News on Prakash Raj |tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Prakash,Raj,-,Latest,News,on,Prakash,Raj,|tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,



செய்திகள் >>> இந்தியா

கர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரகாஷ்ராஜ் பிரச்சாரம்

First Published : Saturday , 14th April 2018 08:46:22 PM
Last Updated : Saturday , 14th April 2018 08:46:22 PM


கர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரகாஷ்ராஜ் பிரச்சாரம்,Prakash Raj - Latest News on Prakash Raj |tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

கர்நாடக தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இன்று குல்பர்காவில் பாஜகவினர் அவரது காரை முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில மாதங்களாக பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.


 பாஜக பிரமுகர்களுக்கு எதிராகவும், இந்துத்துவ அமைப்பினருக்கு எதிராகவும் அவர் எழுப்பும் கேள்விகளுக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் வருகிற மே 12-ம் தேதி கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், பிரகாஷ்ராஜ் பாஜகவிற்கு எதிராக பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.

கடந்த சில தினங்களாக பீஜப்பூர், குல்பர்கா, பெல்காம் உள்ளிட்ட வட கர்நாடக பகுதிகளில் பிரகாஷ்ராஜ் மேற்கொண்ட பிரச்சாரத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனால் கோபமடைந்த பாஜகவினர் பிரகாஷ்ராஜைக் கண்டித்து சுவரொட்டி மற்றும் சமூக வலைதளங்களில் எதிர்மறை தகவல்களை பரப்பி வருகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு குல்பர்காவில் 20-க்கும் மேற்பட்ட பாஜகவினர் பிரகாஷ்ராஜின் காரை முற்றுகையிட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பிரகாஷ்ராஜை காரை விட்டு இறங்குமாறு மிரட்டியவர்களை அங்கிருந்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் பாஜகவினரை கைது செய்ததைத் தொடர்ந்து, பிரகாஷ்ராஜ் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்.

இது குறித்து பிரகாஷ்ராஜ் கூறுகையில், ''பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவ குண்டர்களின் இத்தகைய அச்சுறுத்தலுக்கு நான் அஞ்ச மாட்டேன். இதனால் நான் இன்னும் வலிமையானவனாக மாறி வருகிறேன். தொடர்ந்து பாஜகவின் அடக்குமுறைக்கு எதிராகப் பேசுவேன்'' என்றார்.

கர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரகாஷ்ராஜ் பிரச்சாரம்,Prakash Raj - Latest News on Prakash Raj |tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema கர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரகாஷ்ராஜ் பிரச்சாரம்,Prakash Raj - Latest News on Prakash Raj |tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema கர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரகாஷ்ராஜ் பிரச்சாரம்,Prakash Raj - Latest News on Prakash Raj |tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 என்னை ஏலம் எடுத்து சேவாக் ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார்: கிறிஸ் கெய்ல்
சன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சு பலத்தைக் குலைத்து அடித்து நொறுக்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாபின் கிங் கிறிஸ் கெய்ல் நேற்று ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் தன்னுடைய ஆட்டம் பற்றி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.கிறிஸ் கெய்லை ஏலம்

மேலும்...

 காதலி திருமணம் செய்ய மறுத்தலால் ரூ.5 லட்சத்தை தீயிட்டு எரித்த வாலிபர்
திருமணம் செய்வதற்காக ரூ. 6.74 லட்சத்தைத் திருடிய இளைஞரைத் திருமணம் செய்யக் காதலி மறுத்ததால், ஆத்திரத்தில் அந்த இளைஞர் ரூ. 5லட்சத்தை தீயிட்டு எரித்தார்.மத்தியப் பிரதேச மாநிலம், செஹோர் மாவட்டத்தில் ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ஜிதேந்திரகோயல்(22வயது). இவர் ஒரு

மேலும்...

 CSK போட்டிக்கு தொடரும் சிக்கல் : மைதான பராமரிப்புக்கு அணையில் நீர் எடுக்க தடை
புனேவில் நடைபெற இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகளுக்கு பவானா அணையில் இருந்து நீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பவானா அணையில் இருந்து நீர் எடுக்க மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்துக்கு தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு அறிவிப்பு

மேலும்...

 பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால்
பெண் நிருபர் கன்னத்தை தட்டிய விவகாரம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருத்தம் தெரிவித்துள்ளார்.கவர்னராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக  நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்  செய்தியாளர்கள் சந்திப்பை நேற்று மாலை நடத்தினார். அப்போது 'தி வீக்' இதழின் செய்தியாளர் லட்சுமி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in