கந்தகோட்டம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா

கந்தகோட்டம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா
கந்தகோட்டம் முருகன் கோவிலில் மகா கந்த சஷ்டி விழாவையட்டி கோடி அர்ச்சனையில், நேற்று திரளான பக்தர்கள் விரதமிருந்து முருகப்பெருமானை தரிசித்தனர்.

சென்னை பூங்காநகரில், கந்தகோட்டம் முருகன் கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஐப்பசி மாதம் வரக்கூடிய கந்த சஷ்டி விழா குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா, தீபாவளித்திருநாளில் தொடங்கியது. 18-ந் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

விழா குறித்து, ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம் சீனியர் அறங்காவலர் எஸ்.முத்து கூறியதாவது:-

சஷ்டி விழாவையட்டி, முருகப்பெருமானுக்கு, கோடி அர்ச்சனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோடி அர்ச்சனையில் பங்குகொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துவருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, விரதமிருந்து சுவாமி தரிசனத்துக்கு வரக்கூடிய பக்தர்களின் வசதிக்காக, மூலவர், உற்சவர், ஆறுமுகர், தண்டாயுதபாணி ஆகிய மூர்த்திகளுக்கு 6 நாட்களும் தினசரி காலையிலும், மாலையிலும் கோடி அர்ச்சனை நடைபெறுகிறது.

ஒவ்வொரு காலவழிபாடுகளிலும், 1008 மந்திரங்களுடன் அபிஷேக அலங்காரத்துடன் கோடி அர்ச்சனைக்கான சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

சஷ்டிவிழாவையட்டி தினசரி பக்தி இசை மற்றும் சொற்பொழிவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவின் உச்சகட்டமாக, 18-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு சுவாமி புறப்பாடும், அதைத் தொடர்ந்து 7 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

இவ்வாறு எஸ்.முத்து கூறினார்.

சென்னை, எழும்பூரில், அரசு கண் ஆஸ்பத்திரி அருகே உள்ள திருச்சடை அம்மன் கோவிலில், கந்த சஷ்டி உற்சவத்தையட்டி தினசரி காலையிலும், மாலையிலும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெறுகின்றன.

18-ந் தேதி மாலை 5 மணிக்கு சூரசம்ஹாரமும், 19-ந் தேதி இரவு 7 மணிக்கு திருகல்யாணமும் நடைபெறுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் தக்கார் (கூடுதல் பொறுப்பு) ஆர்.பாரிவள்ளல், அர்ச்சகர் என்.பி.சுரேஷ் சிவாச்சாரியார், கே.தனமுத்து ஆகியோர் செய்துள்ளனர். 
https://goo.gl/tAmJFf


28 Oct 2014

இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்

21 Sep 2014

மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு

21 Jul 2014

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

24 Sep 2013

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை

08 Jun 2013

திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

23 Apr 2013

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

17 Apr 2013

ஆன்மீக செய்திகள்

11 Apr 2013

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்

07 Apr 2013

அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்

25 Mar 2013

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு