கட்சியில் எங்களை சேர்க்கவில்லை என்றால் அதன் விளைவுகளை திமுக சந்திக்க நேரிடும் அழகிரி எச்சரிக்கை

கட்சியில் எங்களை சேர்க்கவில்லை என்றால் அதன் விளைவுகளை திமுக சந்திக்க நேரிடும் அழகிரி எச்சரிக்கை
திமுகவில் தம்மை சேர்த்துக் கொள்ளவில்லை என்றால், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருணாநிதி மறைந்து ஒருவாரம் முடியும் முன்பே சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் குடும்பத்துடன் அஞ்சலி செலுத்திய மு.க.அழகிரி, கட்சி ரீதியாக திமுகவில் தனக்கு ஆதங்கம் இருப்பதாகவும், அதனை நேரம் வரும்போது தெரிவிப்பேன் எனவும் கூறியிருந்தார்.

இதையடுத்து, வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி தம் ஆதரவாளர்களைத் திரட்டி கருணாநிதி நினைவிடம் வரை பேரணி நடத்தப்போவதாக அறிவித்தார். இதையடுத்து, மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் அழகிரி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். தொடர்ந்து திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் எதிரான கருத்துகளையும் கூறி வருகிறார்.

இந்நிலையில், மதுரையில் மு.க.அழகிரி திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எட்டு ஆண்டுகளாக இல்லாமல் இப்போது ஏன் திமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என கூறுகிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.


அதற்கு பதிலளித்த மு.க.அழகிரி, “அப்போது கலைஞர் உயிருடன் இருந்தார். கலைஞர் உயிருடன் இருந்தபோது என்னை திமுகவில் சேர்த்துக் கொள்வதாகக் கூறினார்.


ஆனால், அந்த முடிவை சிலர் தடுத்துள்ளனர். கலைஞர் இப்போது இல்லை. திமுகவை காப்பாற்ற வேண்டும். அவர்கள் என்னை சேர்த்துக் கொள்ளவில்லை என்றால், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” என தெரிவித்தார்.

மேலும், தமது தலைமையில் செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பேரணி குறித்து கூறிய அழகிரி, “தொண்டர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, எனது தலைமையில் செப்டம்பர் 5 ஆம் தேதி அமைதிப் பேரணி நடைபெற இருக்கிறது. அமைதிப் பேரணியில் கலந்துகொள்ள அனைத்து தொண்டர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இது தொண்டர்களின் முயற்சிதான். என் தலைமையில் கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டதற்கிணங்க தான் இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்” என கூறினார்.
https://goo.gl/Yrh2kw






03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி

25 Dec 2018

வாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்

24 Dec 2018

கிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல்

21 Dec 2018

தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 24ந்தேதி கூடுகிறது