tamilkurinji logo


 

கடிதம் எழுதி வைத்து விட்டு பள்ளி மாணவன் தற்கொலை,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

கடிதம் எழுதி வைத்து விட்டு பள்ளி மாணவன் தற்கொலை

First Published : Tuesday , 31st July 2018 01:46:44 PM
Last Updated : Tuesday , 31st July 2018 01:46:44 PM


கடிதம் எழுதி வைத்து விட்டு பள்ளி மாணவன் தற்கொலை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

கரூர் மாவட்டம், க.பரமத்தி பெரியார் நகரை சேர்ந்தவர் சுரேஷ், அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி ரேவதி. இவர்களது மகன் அருள் பிரகாசம் (வயது 12). அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று மாலை பள்ளி முடிந்ததும் அருள் பிரகாசம் வீட்டிற்கு சென்றான். அப்போது வீட்டில் யாரும் இல்லாததையடுத்து திடீரென உத்திரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் இது குறித்து அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டிற்கு விரைந்து சென்றனர். அங்கு அருள் பிரகாசம் பிணமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதனர்.

இதனிடையே இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு க.பரமத்தி போலீசார் சென்றனர். பின்னர் அருள் பிரகாசத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.

அப்போது அருள் பிரகாசம் எழுதிய கடிதம் ஒன்று அவனது சட்டைப்பையில் இருந்தது. அதில், எனது சாவுக்கு பள்ளி தலைமையாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் ஆகியோர்தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து போலீசார் மற்றும் அரவக்குறிச்சி தாசில்தார் பிரபு, க.பரமத்தி வருவாய் ஆய்வாளர் கணேசன் ஆகியோர் பள்ளிக்கு சென்று, மாணவன் அருள்பிரகாசை ஆசிரியர்கள் யாரும் தற்கொலைக்கு தூண்டும் வகையில் திட்டினார்களா? அடித்து துன்புறுத்தினார்களா? என்று விசாரித்தனர்.

அருள்பிரகாசம் கபடி விளையாடுவதில் ஆர்வமுடையவனாக இருந்தான். அந்த வகையில் விளையாடும் போது தகராறு ஏதும் ஏற்பட்டு அதில் மாணவன் மனமுடைந்தானா? எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அருள் பிரகாசம் சாவுக்கான காரணம் என்ன? என்பது பற்றிய உண்மை நிலையை கண்டறிந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவனது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அரசு பள்ளியில் விசாரணை மேற்கொண்ட போது, விளையாட்டின் போது ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக பேசுவதற்கு பெற்றோரை அழைத்து வருமாறு தான் அருள் பிரகாசை அறிவுறுத்தினோம். ஆனால் திடீரென அவன் தற்கொலை செய்தது எதிர்பாராமல் நடந்தது என பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்பிரகாசத்தின் சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடிதம் எழுதி வைத்து விட்டு பள்ளி மாணவன் தற்கொலை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema கடிதம் எழுதி வைத்து விட்டு பள்ளி மாணவன் தற்கொலை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema கடிதம் எழுதி வைத்து விட்டு பள்ளி மாணவன் தற்கொலை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்
தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி. இவர் ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித

மேலும்...

 ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்
ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என கருணாநிதி உடல் வைக்கப்பட்ட சந்தனபெட்டியின் மீது வாசகம் எழுதப்பட்டுள்ளது.5 முறை தமிழக முதல் அமைச்சராகவும் 50 ஆண்டு காலம் திமுக தலைவருமாக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி நேற்று (ஆகஸ்ட் 7) காலமானார். இந்திய

மேலும்...

 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி,

மேலும்...

 முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கருணாநிதி சென்னையில் காலமானார். 95 வயதான கலைஞர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். 25ம் தேதி உடல்நிலை சரியில்லாமல்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in