tamilkurinji logo


 

ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்,Kalaignar Karunanidhi epitaph finds place on casket

Kalaignar,Karunanidhi,epitaph,finds,place,on,casket
செய்திகள் >>> தமிழகம்

ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்

First Published : Wednesday , 8th August 2018 08:56:25 PM
Last Updated : Wednesday , 8th August 2018 08:56:25 PM


ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்,Kalaignar Karunanidhi epitaph finds place on casket

ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என கருணாநிதி உடல் வைக்கப்பட்ட சந்தனபெட்டியின் மீது வாசகம் எழுதப்பட்டுள்ளது.

5 முறை தமிழக முதல் அமைச்சராகவும் 50 ஆண்டு காலம் திமுக தலைவருமாக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி நேற்று (ஆகஸ்ட் 7) காலமானார்.


இந்திய அரசியலின் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டு இருந்தது.

பிரதமர் மோடி, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி  உள்பட தேசியக்கட்சிகளின் தலைவர்கள் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து, மாலை 4 மணியளவில் இருந்து  ராஜாஜி அரங்கில் இருந்து, ராணுவ வாகனத்தின் மூலமாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட கருணாநிதியின் உடல், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியின் உடல் சந்தனப்பேழையில் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியின் உடல் வைக்கப்பட்ட சந்தனப்பேழையில்,


‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என்ற வாசகம் ஒரு புறமும், மறுபுறம் கலைஞர். மு.கருணாநிதி- திமுக தலைவர் ஜூன் 03- 1924- ஆகஸ்டு 07- 2018 என எழுதப்பட்டுள்ளது.

ஓய்வுக்கே ஓய்வு கொடுத்தவர் என்று திமுகவினரால் அழைக்கப்பட்டவர் கருணாநிதி. தனது கடுமையான உழைப்பால் திருவாரூர் குக்கிராமத்தில் பின்புலம் இல்லாத குடும்பத்தில் பிறந்து பள்ளிப்படிப்பு மட்டுமே முடித்த கருணாநிதி மாநில  முதல்வராக உயர்ந்ததன் பின்னால் அவரது கடுமையான உழைப்பை யாரும் மறுக்க முடியாது. அதேபோல், அவரது சாதனைகளையும் யாராலும் மறைக்க முடியாது.
ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்,Kalaignar Karunanidhi epitaph finds place on casket ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்,Kalaignar Karunanidhi epitaph finds place on casket ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்,Kalaignar Karunanidhi epitaph finds place on casket
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி,

மேலும்...

 போலீசாருடன் வாக்குவாதம் - அடையாறு ஆற்றில் குதித்த வாலிபர் உடல் மீட்பு
சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற வாலிபர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் போலீசில் சிக்கினார்.குடிபோதையில் அவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அவரை மடக்கி பிடித்த போக்குவரத்து போலீசார் வண்டிக்குரிய ஆவணங்களை கேட்டனர். குடிபோதையில்

மேலும்...

 திமுக நிர்வாகி தாக்குதல் நடத்திய பிரியாணி ஹோட்டலுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்
திமுக நிர்வாகி தாக்குதல் நடத்திய பிரியாணி ஹோட்டலுக்கு நேரில் சென்று ஆறுதல்  கூறிய மு.க.ஸ்டாலின்தாக்குதலுக்குள்ளான விருகம்பாக்கம் பிரியாணி கடைக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்று ஊழியர்களிடம் நலம் விசாரித்தார்.சென்னை விருகம்பாக்கத்தில் பிரியாணி கடை நடத்தி வருபவர் தமிழ்ச்செல்வன். இவரது தம்பி

மேலும்...

 மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கோவை விடுதி வார்டன் புனிதா சரண்
கோவை சேரன்மாநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 45). தொழில் அதிபரான இவர் கோவை ஹோப் காலேஜ் அருகே உள்ள பாலரங்கநாதபுரம் ஜீவா வீதியில் ‘தர்‌ஷனா’ என்ற பெயரில் மகளிர் விடுதி நடத்தி வந்தார். இங்கு கல்லூரி மாணவிகள் மற்றும் தனியார்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in