tamilkurinji logo


 

ஓணப்பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு,
ஓணப்பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு

First Published : Sunday , 26th August 2012 10:31:47 PM
Last Updated : Sunday , 26th August 2012 10:31:47 PM


ஓணப்பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு,

கேரளாவில் வருகிற 29-ந் தேதி கொண்டாடப்படும் ஓணப்பண்டிகையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பசாமி கோவில் திருநடை இன்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில், மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றுகிறார். அதைத்தொடர்ந்து சாமிக்கு தீபாராதனை நடைபெறும். நடை திறப்பதையட்டி இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும்.
 
நாளை முதல் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்அபிஷேகம், உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழபூஜை உள்பட பல்வேறு பூஜை மற்றும் வழிபாடுகள் நடக்கிறது. களபாபிஷேகம், கலசாபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படிபூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், பக்தர்களுக்கு ஓண விருந்து வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்காக, உப்பேரி, ஊறுகாய்கள், பலவகை பாயசங்கள் உள்பட 20 வகை உணவுகளுடன் ஓண விருந்து தயாரிக்கப்படுகிறது.
 
நாளை பகல் 11.30 மணிக்கு உச்ச பூஜையை தொடர்ந்து சபரிகிரீசனின் படம் வைத்து அதன்முன் குத்துவிளக்கு ஏற்றி, தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் இணைந்து முதலில் சாமிக்கு ஓணவிருந்து படைப்பார்கள். அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அறுசுவை ஓண விருந்து வழங்கப்படும். திருவோண தினமான 29-ந் தேதி ஓண விருந்து வழங்கப்படுகிறது. அன்றைய தினம் 3 ஆயிரத்து 500 பேருக்கான அறுசுவை உணவு தயாரிக்கப்பட உள்ளது. காலை 9 மணிக்கு தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் பூஜை செய்து திருவோண விருந்தை தொடங்கி வைக்கிறார்கள். இந்த விருந்தில் அனைவரும் பங்கேற்கும் வகையில் நடைப்பந்தலில் உணவு பரிமாறப்படுகிறது.
 
தொடர்ந்து, 30 மற்றும் 31-ந் தேதியும் பக்தர்களின் வழிபாடாக ஓண விருந்து வழங்கப்படுகிறது. 31-ந் தேதி அத்தாழபூஜைக்கு பின்னர், இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும். பின்னர், புரட்டாசி மாத பூஜைகளுக்காக அடுத்த மாதம் (செப்டம்பர்) 16-ந் தேதி மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது.

ஓணப்பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு, ஓணப்பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு, ஓணப்பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலபுராணப்படி, சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த இடம் என்பதால்

மேலும்...

 மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு
ஒவ்வொரு புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும்  புனிதமான அமாவாசை ஆகும். தட்சனாயத்தில் வரும் முதல் அமாவாசையான  ஆடி அமாவாசை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைவிட பல மடங்கு முக்கியத்துவம் பெறும் அமாவாசை புரட்டாசி அமாவாசை ஆகும். இந்த அமாவாசை நாள்

மேலும்...

 மகிமை நிறைந்த மகாளய அமாவாசை
சூரியன் கன்னி ராசிக்குள் செல்லும்போது, அதாவது புரட்டாசி மாதம், எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் நமது முன்னோர்களும் இறந்து போன ரத்தசம்பந்த உறவுகளும் அந்தந்த உறவினரைகுடும்பத்தினரை காண ஆசையுடனும், மகிழ்ச்சியுடனும் நம்மை காணவருவார்கள். அந்த நேரத்தில் அவர்களை

மேலும்...

 மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்
மதுரை சித்திரை திருவிழாவில் வேதமந்திரங்கள் முழங்க மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. இன்று காலை நான்கு மாசிவீதிகளில் தோரோட்டம் நடைபெறுகிறது.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று  முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்திற்காக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in