tamilkurinji logo


 

ஓடும் ரெயிலில் இருந்து டி.டி.ஆரை தள்ளிவிட்ட வாலிபர் கைது,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

ஓடும் ரெயிலில் இருந்து டி.டி.ஆரை தள்ளிவிட்ட வாலிபர் கைது

First Published : Saturday , 14th April 2018 12:00:01 PM
Last Updated : Saturday , 14th April 2018 12:00:01 PM


ஓடும் ரெயிலில் இருந்து டி.டி.ஆரை தள்ளிவிட்ட வாலிபர் கைது,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

காட்பாடி அருகே டிக்கெட் பரிசோதகரை, ஓடும் ரெயிலில் இருந்து வடமாநில கும்பலை சேர்ந்த 6 பேர் கீழே தள்ளிவிட்டனர்.

அவர்களை பிடிக்க ரெயில்வே போலீசார் திருப்பதிக்கு சென்றுள்ளனர்.


யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், நேற்று காலை வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை வழியாக காட்பாடிக்கு வந்து கொண்டிருந்தது. இந்த ரெயிலில் டிக்கெட் பரிசோதகராக பெங்களூருவை சேர்ந்த சந்தோஷ்குமார் பணியில் இருந்தார்.

பயணிகளிடம் அவர் டிக்கெட் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். காட்பாடி- லத்தேரி இடையே ரெயில் வந்தபோது ஒரு முன்பதிவு பெட்டியில் வடமாநிலத்தை சேர்ந்த 6 பேர் பயணம் செய்தனர். அவர்களின் டிக்கெட்டுகளை காட்டுமாறு சந்தோஷ்குமார் கேட்டுள்ளார்.

அவர்களிடம் டிக்கெட் இல்லை. முன்பதிவு பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த பயணிகளின் பட்டியலிலும் அந்த 6 பேரின் பெயர்கள் இல்லை.


இதுகுறித்து, சந்தோஷ்குமார் கேட்டபோது, வடமாநில கும்பல் அவருடன் வாக்குவாதம் செய்து  சந்தோஷ்குமாரை தாக்கி உள்ளனர். இந்த நிலையில் ரெயில் சிக்னலுக்காக மெதுவாக வந்துகொண்டிருந்தது.

ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்ததை பயன்படுத்தி வடமாநில கும்பல், சந்தோஷ்குமாரை ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இதில் அவர் கீழே விழுந்து லேசான காயமடைந்தார். அதற்குள் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு ரெயில் சென்றது.

உடனே அந்த கும்பலை சேர்ந்த 6 பேரும் அந்தபெட்டியில் இருந்து இறங்கி வேறு பெட்டிக்கு மாறிச் சென்றுவிட்டனர். கீழே விழுந்ததில் காயமடைந்த சந்தோஷ்குமார் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு சென்று ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.

காட்பாடி ரெயில்வே போலீஸ் இதுபற்றி திருப்பதி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு அங்கு புறப்பட்டு சென்றனர்.

திருப்பதி போலீசார் உதவியுடன் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய ஒருவரை மடக்கி பிடித்தனர். அவர் ஒடிசா மாநிலம் கண்டகாடா பகுதியை சேர்ந்த பிஷ்வாஷ்மாலிக் (வயது 19) என்பது தெரியவந்தது. அவருடன் வந்த மேலும் 5 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

பிஷ்வாஷ் மாலிக்கை காட்பாடி ரெயில்வே போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். அவரிடம் தப்பி ஓடிய 5 பேர் விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓடும் ரெயிலில் இருந்து டி.டி.ஆரை தள்ளிவிட்ட வாலிபர் கைது,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema ஓடும் ரெயிலில் இருந்து டி.டி.ஆரை தள்ளிவிட்ட வாலிபர் கைது,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema ஓடும் ரெயிலில் இருந்து டி.டி.ஆரை தள்ளிவிட்ட வாலிபர் கைது,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்
தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி. இவர் ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித

மேலும்...

 ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்
ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என கருணாநிதி உடல் வைக்கப்பட்ட சந்தனபெட்டியின் மீது வாசகம் எழுதப்பட்டுள்ளது.5 முறை தமிழக முதல் அமைச்சராகவும் 50 ஆண்டு காலம் திமுக தலைவருமாக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி நேற்று (ஆகஸ்ட் 7) காலமானார். இந்திய

மேலும்...

 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி,

மேலும்...

 முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கருணாநிதி சென்னையில் காலமானார். 95 வயதான கலைஞர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். 25ம் தேதி உடல்நிலை சரியில்லாமல்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in