tamilkurinji logo


 

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு,Sabarimala

Sabarimala




ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

First Published : Tuesday , 16th October 2012 09:07:29 PM
Last Updated : Tuesday , 16th October 2012 09:07:29 PM


ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு,Sabarimala

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது.

மாலை 5.30 மணியளவில் தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி கோயில் நடையை திறந்தார். இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நேற்று வேறு பூஜைகள் நடைபெறவில்லை. இன்று முதல் 21ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.

இந்த நாட்களில் தினமும் கணபதி ஹோமம், உஷபூஜை ஆகிய வழக்கமான பூஜைகளுடன் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இந்த 5 நாட்களிலும் பக்தர்கள் நெய்யபிஷேகம் செய்யலாம். சபரிமலை, மாளிகைபுரம் கோயில் மேல்சாந்திகள் பதவிக் காலம் இந்த மாதத்துடன் முடிகிறது. எனவே, புதிய மேல்சாந்திகள் தேர்வு இன்று நடக்கிறது.

சபரிமலை கோயிலுக்கு 10 பேரும், மாளிகைபுரம் கோயிலுக்கு 9 பேரும் நேர்முகத் தேர்வு மூலம் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தலா ஒருவர் குலுக்கல் மூலம் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்படுவர். இருவரும் நவம்பர் 15ம் தேதி புதிய மேல்சாந்திகளாக பொறுப்பேற்பார்கள்.

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு,Sabarimala ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு,Sabarimala ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு,Sabarimala
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலபுராணப்படி, சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த இடம் என்பதால்

மேலும்...

 சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்
சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 25ம் தேதி 10 மணி நேரம் ஏழுமலையான் கோயில் நடை  மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி திருமலை தேவஸ்தானம் மற்றும் ஏராளமான கோயில்களில் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் நடக்கும்போது கோயில் நடை சாத்தப்படுவது

மேலும்...

 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா, இன்று (16–ந்தேதி - சனிக்கிழமை) கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2–ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகிறது. அதில் மாசி திருவிழா

மேலும்...

 சபரிமலையில் நாளை மகரவிளக்கு பூஜை
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜை நாளை நடைபெறுகிறது. மாலை 6.30க்கு பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சியளிக்கிறார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை குறிப்பிடத்தக்கதாகும். கடந்த மாதம் 26ம் தேதி மண்டல

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in