tamilkurinji logo


 

ஏழுமலையான் கோயிலில் 3 நாள் பவித்ரோற்சவம் தொடக்கம்,Thiruppathi thirumala

Thiruppathi,thirumala
ஏழுமலையான் கோயிலில் 3 நாள் பவித்ரோற்சவம் தொடக்கம்

First Published : Sunday , 29th July 2012 07:35:21 PM
Last Updated : Sunday , 29th July 2012 07:35:21 PM


ஏழுமலையான் கோயிலில் 3 நாள் பவித்ரோற்சவம் தொடக்கம்,Thiruppathi thirumala

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பவித்ரோற்சவத்தையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு மஞ்சள், குங்குமம் மற்றும் மூலிகை திரவியங்களின் மூலம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கடந்த ஓராண்டாக செய்து வரும் பூஜை வழிபாட்டில் தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவறுகளுக்கு பரிகாரம் செய்யும் வகையில் இந்த பூஜை செய்யப்பட்டது.

தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் இந்த பவித்ரோற்சவத்தையொட்டி, வழக்கமாக நடைபெறும் கட்டண சேவைகளான கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, நேற்று அரசு விடுமுறை என்பதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. இலவச தரிசனமான சர்வ தரிசனத்தில் சுவாமியை தரிசிக்க காத்திருக்கும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் 31 அறைகளும் நிரம்பியது.

இந்த தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மேலும் தாமதம் ஏற்படக் கூடாது என்பதற்காக, 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் மாலை 5 மணியுடன் நிறுத்தப்பட்டது. நேற்று அதிகாலை 3 மணிமுதல் மாலை 6 மணி வரை 50,455 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மாற்றுத்திறனாளிகள் தரிசன நேரத்தில் மாற்றம்

ஏழுமலையான் கோயிலில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தரிசனம் செய்வதற்கு, இதுவரை மகாதுவாரம் வழியாக தினந்தோறும் 4 முறை அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது கூட்டம் அதிகரித்து வருவதால், இது 3 முறையாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் காலை 10 மணி, மதியம் 3 மணி, இரவு 10 மணி ஆகிய நேரங்களில் மட்டும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு அரை மணி நேரம் முன்பாக வந்து உரிய அடையாள அட்டை மற்றும் மருத்துவ சான்றுகளை காட்ட வேண்டும் என்றும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையான் கோயிலில் 3 நாள் பவித்ரோற்சவம் தொடக்கம்,Thiruppathi thirumala ஏழுமலையான் கோயிலில் 3 நாள் பவித்ரோற்சவம் தொடக்கம்,Thiruppathi thirumala ஏழுமலையான் கோயிலில் 3 நாள் பவித்ரோற்சவம் தொடக்கம்,Thiruppathi thirumala
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலபுராணப்படி, சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த இடம் என்பதால்

மேலும்...

 மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு
ஒவ்வொரு புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும்  புனிதமான அமாவாசை ஆகும். தட்சனாயத்தில் வரும் முதல் அமாவாசையான  ஆடி அமாவாசை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைவிட பல மடங்கு முக்கியத்துவம் பெறும் அமாவாசை புரட்டாசி அமாவாசை ஆகும். இந்த அமாவாசை நாள்

மேலும்...

 திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
திருப்பதியில் ஏழுமலை யானை தரிசிக்க கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. நேற்று தர்ம தரிசனம் செய்யும் பக்தர்கள் தரிசனத்துக்கு நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்து நின்றனர். 64 கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி வழிந்த நிலையில் ஏராளமான

மேலும்...

 மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்
மதுரை சித்திரை திருவிழாவில் வேதமந்திரங்கள் முழங்க மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. இன்று காலை நான்கு மாசிவீதிகளில் தோரோட்டம் நடைபெறுகிறது.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று  முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்திற்காக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in