எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது
பிளஸ்-2 தேர்வு முடிவடையும் நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10½ லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

பிளஸ்-2 தேர்வு கடந்த 1-ந் தேதி தொடங்கியது. 8 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வில் கலந்துகொண்டுள்ளனர். தேர்வு நாளை (புதன்கிழமை) முடிவடைகிறது. இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் மாதம் 12-ந் தேதி வரை நடைபெறுகிறது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3012 மையங்களில் 10 லட்சத்து 68 ஆயிரத்து 838 பேர் எழுதுகிறார்கள். இவர்களில் 5 லட்சத்து 43 ஆயிரத்து 152 பேர் மாணவர்கள். 5 லட்சத்து 25 ஆயிரத்து 686 பேர் மாணவிகள். இவர்கள் அனைவரும் பள்ளிகளில் படித்து தேர்வு எழுதுபவர்கள். இவர்கள் தவிர 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனித்தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வு தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12.45 மணி வரை நடைபெறும். காலை 10 மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்படும். வினாத்தாளை படிக்க 10 நிமிடம் வழங்கப்படும். அதன்பிறகு விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்ய 5 நிமிடம் கொடுக்கப்படும். தேர்வு மையங்களில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கவும், முறைகேடுகளை தடுத்திடவும் தலைமை ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

மேலும், வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் தனியாக சிறப்பு பறக்கும் படைகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. பறக்கும் படையினர் தேர்வு மையங்களுக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபடுவார்கள்.

வினாத்தாள் கட்டுகள் மாவட்டங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டு மாவட்ட கல்வி அதிகாரிகளின் பராமரிப்பில் உள்ளன. வினாத்தாள் கட்டுகள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்தார்.

தேர்வு அட்டவணை

மார்ச் 27-ந் தேதி - மொழித்தாள்-1
மார்ச் 28-ந் தேதி - மொழித்தாள்-2
மார்ச் 29, 30, 31-ந் தேதி -விடுமுறை
ஏப்ரல் 1-ந் தேதி - ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 2-ந் தேதி - ஆங்கிலம் 2-ம் தாள்
ஏப்ரல் 3, 4 தேதிகள் -தேர்வு இல்லை
ஏப்ரல் 5-ந் தேதி - கணிதம்
ஏப்ரல் 6, 7-ந் தேதிகள் -விடுமுறை
ஏப்ரல் 8-ந் தேதி - அறிவியல்
ஏப்ரல் 9, 10, 11-ந் தேதிகள் -தேர்வு இல்லை
ஏப்ரல் 12-ந் தேதி - சமூக அறிவியல்  

https://goo.gl/PWFVp1


05 Nov 2013

குழந்தைகளுக்கு படிப்பு வரவில்லையா?

04 Jun 2013

பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் நம்பர் வெளியீடு

03 May 2013

பொறியியல் சேர்க்கை விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகம்

28 Apr 2013

டெல்லி பல்கலையில் சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

22 Apr 2013

பொறியியல் விண்ணாப்பங்கள் மே 4 முதல் வினியோகம்

25 Mar 2013

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது

19 Mar 2013

சில பள்ளிகளால் பெற்றோர் குழப்பம் முப்பருவ பாடத்திட்டத்தில் ஆண்டு இறுதித்தேர்வு எப்படி?

20 Feb 2013

ஆன்லைனில் செய்முறை பயிற்சி: சிபிஎஸ்இ அறிமுகம்

18 Feb 2013

நாளை பொது வேலைநிறுத்தம்: 10-ம் வகுப்பு செய்முறைத்தேர்வில் மாற்றம் இல்லை

11 Feb 2013

பிளஸ் 2 தேர்வை கண்காணிக்க 5000 பேர் கொண்ட பறக்கும் படை தயார்