எந்த தேதியில் வைகுண்ட ஏகாதசி?

எந்த தேதியில் வைகுண்ட ஏகாதசி?
இந்த ஆண்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் 23-ந் தேதியும், மற்ற பெருமாள் கோவில்களில் 24-ந் தேதியும் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் ஏகாதசி திதி வருகிறது. இதில், மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி, ,வைகுண்ட ஏகாதசி, என்ற சிறப்பு பெற்றுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்பட 108 வைணவ திவ்ய தேசங்களிலும் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகளும், அதைத்தொடர்ந்து 'பரமபத வாசல்' (சொர்க்கவாசல்) திறப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.

இந்த வருடம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு நாள் முன்னதாக, 23-ந்தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, 'சாஸ்திர விரோதம்' என்று, சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த 'கருடன் பஞ்சாங்க' ஆசிரியரும், ஜோதிடருமான  டி.முரளி பட்டாச்சாரியார் கூறினார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:-

ஸ்ரீவைகானச க்ருகிய சூத்திரப்படி, ஏகாதசி நிர்ணயப்படி, 'வித்த ஏகாதசி', 'சுத்த ஏகாதசி', 'அதிக ஏகாதசி' என மூன்று வகையாக சொல்வார்கள். இவற்றில், வித்த ஏகாதசி என்பது, தசமியும், ஏகாதசியும் சேர்வதால், இது வேதை தோஷம் ஆகும். இதற்கு எந்தவித பலனும் கிடையாது.

சுத்த ஏகாதசி-சூரிய உதயத்துக்கு முன்பு 6 நாழிகை பூர்த்தியாக உள்ள ஏகாதசியாகும். இது உத்தமம் என்றும், சூரிய உதயத்துக்கு முன்பும் பின்பும் தொடர்ந்து இருக்கக்கூடிய அதிக ஏகாதசி மிகவும் உத்தமம் என்றும் சொல்லப்படுகிறது.

சிறப்புப்பெற்ற வைகுண்ட ஏகாதசி, இந்த ஆண்டு, டிசம்பர் மாதம் 24-ந் தேதி (திங்கட்கிழமை) தான் வருகிறது. அன்றைய தினம் பிரம்ம முகூர்த்த வேளையில், சிறப்பு பூஜைகளும், சொர்க்கவாசல் திறப்பும் அமைகிறது.

ஆனால், திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில், 23-ந்தேதி வித்த ஏகாதசியை வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடுகிறார்கள். இது வேதை தோஷம் கொண்ட ஏகாதசி ஆகும். 23-ந்தேதி அதிகாலை 5.56 மணிக்கு மேல்தான் ஏகாதசி என வாக்கியப்பஞ்சாங்கப்படி இருக்கிறது. எனவே, அன்றைய தினம் ஏகாதசி இல்லை என்றே கொள்ளவேண்டும். அத்துடன் இது, ஸ்மார்த்த ஏகாதசி ஆகும். ஏகதாசி விரதம் மேற்கொள்பவர்களுக்கு உகந்தது அல்ல.

பொதுவாக ஏகாதசியுடன் தசமி சேருவது வேதை தோஷம் ஆகும். 23-ந் தேதி அதிகாலை 5.56 மணிக்கு தசமியும், ஏகாதசியும் சேருகிறது. எனவே, 23-ந் தேதி ஏகாதசி வேதை தோஷமுள்ளதாகும். அன்றைய தினம் வைகுண்ட ஏகாதசியும், சொர்க்க வாசல் திறப்பும் நடத்துவது ஏற்புடையது அல்ல. நாட்டுக்கு நல்லது நல்லதல்ல. எல்லாவற்றுக்கும் மேல், அது சாஸ்திர விரோதம் ஆகும்.

ஏகாதசி என்பது அதிகாலை சூரிய உதயத்துக்கு முன் 4 முதல் 6 நாழிகைவரை (அதாவது 3.36 மணியில் இருந்து 6 மணி வரை) இருக்கவேண்டும். இந்த உத்தமமான நேரத்துடன், 24-ந் தேதிதான், வைகுண்ட ஏகாதசி வருகிறது. இதுவே சரியான வைகுண்ட ஏகாதசியாகும்.

விரதம் மேற்கொள்பவர்கள் 24-ந்தேதி விரதம் இருந்து மறுநாள் துவாதசி அன்று, காலை 9 மணிக்கு முன்பாக கோவிலுக்குச்சென்று சுவாமி தரிசனம் முடித்து தீர்த்த பிரசாதம் அருந்தி, விரதத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.

திருமலா-திருப்பதி தேவஸ்தானம் 23-ந்தேதி ஏகாதசி கொண்டாடுவது தவறு என்று தெரிந்தும், தவறை மறைப்பதற்காக தேதியை மாற்ற முடியாது என்றும், 2 நாட்கள் ஏகாதசி கொண்டாடுகிறோம் என்றும் சொல்கிறார்கள். 24-ந் தேதிதான் வைகுண்ட ஏகாதசியை கொண்டாட வேண்டும் என்று ஜீயர் சுவாமிகளுக்கும், திருமலா-திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரிக்கும் தெரிவித்துள்ளோம். நிச்சயம் மாற்றிக்கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

இவ்வாறு டி.முரளி பட்டாச்சாரியார் கூறினார்.  

https://goo.gl/LhzKgK


28 Oct 2014

இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்

21 Sep 2014

மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு

21 Jul 2014

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

24 Sep 2013

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை

08 Jun 2013

திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

23 Apr 2013

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

17 Apr 2013

ஆன்மீக செய்திகள்

11 Apr 2013

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்

07 Apr 2013

அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்

25 Mar 2013

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு