tamilkurinji logo


 

இரண்டு மாதமாகப் பேசாத காதலியை கழுத்தை அறுக்க முயன்ற காதலன் கைது ,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

இரண்டு மாதமாகப் பேசாத காதலியை கழுத்தை அறுக்க முயன்ற காதலன் கைது

First Published : Tuesday , 17th April 2018 08:18:03 PM
Last Updated : Tuesday , 17th April 2018 08:18:03 PM


இரண்டு மாதமாகப் பேசாத காதலியை கழுத்தை அறுக்க முயன்ற காதலன் கைது ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

அயனாவரத்தில், கோபத்தில் காதலி கழுத்தை அறுக்க காதலன் முயன்றதில் காதலிக்கு கையில் காயம் ஏற்பட்டது, தப்பி ஓட முயன்ற காதலனை போலீஸார் கைது செய்தனர்.

அயனாவரத்தில் வசிப்பவர் ரேணுகா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவர் எழும்பூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும்போது அயனாவரம் சோலைத்தெருவைச் சேர்ந்த சாலமன் ராஜா (23) என்பவர் பழக்கமாக, நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

சாலமன் ராஜா தனது நண்பன் வீட்டில் தங்கி எலக்ட்ரீஷியன் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாகக்  காதலித்து வந்த நிலையில் சாலமன் ராஜாவின் நடத்தை சரியில்லாததால், ரேணுகா  பல முறை சுட்டிக்காட்டியும் அவர் திருந்தாததால் கடந்த இரண்டு மாத காலமாக சாலமன் ராஜாவை ரேணுகா தவிர்க்க ஆரம்பித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சாலமன் ராஜா, ரேணுகாவை பலமுறை வழி மறித்துக் காரணம் கேட்டுள்ளார். 'உன் நடத்தை சரியில்லை தயவு செய்து என் வாழ்க்கையில் குறுக்கிடாதே' என்று ரேணுகா மறுத்துவிட்டார்.

இதனால் சாலமன் ராஜா கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் ரேணுகாவை கடைசியாகக் கேட்பது அல்லது கொலை செய்வது என்ற திட்டத்துடன் சாலமன் ராஜா இன்று காலை கல்லூரிக்கு புறப்பட்ட ரேணுகாவை மறித்து, 'என்னை ஏன் வெறுக்கிறாய்?' என்று கேட்டுள்ளார்.

'உன் நடத்தை சரியில்லை, உனக்கும் எனக்கும் ஒத்துவராது என்னைப் படிக்கவிடு' என்று ரேணுகா கூற, 'எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது' என்று கையில் வைத்திருந்த பேப்பர் கட்டரால் ரேணுகாவின் கழுத்தை அறுக்க முயன்றுள்ளார்.

அப்போது திடீரென ரேணுகா தடுக்கும் வகையில் கையை குறுக்கே வைத்து தடுக்க பிளேடு அவர் வலது கையை கடுமையாக வெட்டியுள்ளது. நடு சாலையில் நடந்த இந்த சம்பவத்தால் ரேணுகா கூச்சலிட பொதுமக்கள் ஓடிவர இதைப்பார்த்து பயந்துபோன சாலமன் ராஜா அங்கிருந்து தப்பி ஓடினார்.

காயம்பட்ட ரேணுகா அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ரேணுகா அளித்த புகாரின் பேரில் போலீஸார் சாலமன் ராஜாவைத் தேடினர். தலைமறைவாக இருந்த சாலமன் ராஜாவை மடக்கிப் பிடித்ததோடு,  காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



இரண்டு மாதமாகப் பேசாத காதலியை கழுத்தை அறுக்க முயன்ற காதலன் கைது ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema இரண்டு மாதமாகப் பேசாத காதலியை கழுத்தை அறுக்க முயன்ற காதலன் கைது ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema இரண்டு மாதமாகப் பேசாத காதலியை கழுத்தை அறுக்க முயன்ற காதலன் கைது ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்
தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி. இவர் ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித

மேலும்...

 ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்
ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என கருணாநிதி உடல் வைக்கப்பட்ட சந்தனபெட்டியின் மீது வாசகம் எழுதப்பட்டுள்ளது.5 முறை தமிழக முதல் அமைச்சராகவும் 50 ஆண்டு காலம் திமுக தலைவருமாக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி நேற்று (ஆகஸ்ட் 7) காலமானார். இந்திய

மேலும்...

 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி,

மேலும்...

 முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கருணாநிதி சென்னையில் காலமானார். 95 வயதான கலைஞர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். 25ம் தேதி உடல்நிலை சரியில்லாமல்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in