tamilkurinji logo


 

இன்று புரட்டாசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை,




இன்று புரட்டாசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

First Published : Saturday , 18th September 2010 06:30:31 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


இன்று புரட்டாசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை,

இன்று புரட்டாசி சனிக்கிழமை. இதையொட்டி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் உள்பட பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்து உள்ளனர்.

தமிழ் மாதங்களில் புரட்டாசிக்கு ஒரு சிறப்பு உண்டு. பொதுவாக, சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதமிருந்து, பூஜை செய்து சாமி கும்பிடுவது வழக்கத்தில் உள்ளது. இதில் புரட்டாசி மாத சனிக்கிழமைக்கு தனி சிறப்பு அமைந்துள்ளது.

புரட்டாசி சனிக்கிழமை தான் சனி பகவான் அவதரித்தார் என்றும் அன்றைய தினத்தில், காக்கும் கடவுளான திருமாலை வழிபடுவது கூடுதல் சிறப்பு என்றும் சொல்லப்படுகிறது.

சனியைப்போல் கொடுப்பாரும் இல்லை. கெடுப்பாரும் இல்லை என்று சொல்வார்கள். அந்த வகையில் சனீஸ்வரனை, சனிக்கிழமைதோறும் விரதம் இருந்து வழிபடுவதை வழக்கமாகக்கொண்டுள்ளனர். அதிலும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சனீஸ்வரரோடு, பெருமாளுக்கும் சேர்த்து விரதம் இருந்து வழிபட்டால் கூடுதல் சிறப்பு பெறலாம் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக உள்ளது.

புரட்டாசி மாதத்தின் சிறப்பைக்கருத்தில்கொண்டே, திருப்பதி உள்பட அனைத்து பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவம் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது. வைணவ சம்பிரதாயங்களைப் பின்பற்றுபவர்கள், எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனை உள்ளத்தில் நினைத்து மாவிளக்கேற்றுதல் மரபு. புரட்டாசி சனிக்கிழமைகளில், சிலர் அக்கம்பக்கத்து வீடுகளில் மடிப்பிச்சை எடுத்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்து உள்ளனர். இது குறித்து, அறநிலையத்துறை துணை ஆணையரும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் நிர்வாக அதிகாரியும் தக்காருமான பொ.ஜெயராமன் கூறியிருப்பதாவது:-

வைணவத்திருத்தலங்களில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாக கருதப்படுகிறது. திருப்பதி வெங்கடாசலபதி இங்கு வேங்கடகிருஷ்ணனாக சேவை சாதிப்பதால் இங்கு நடைபெறும் புரட்டாசி மாத பூஜைகள் கூடுதல் சிறப்பு பெற்றுள்ளது.

புரட்டாசி சனிக்கிழமைகளில், அதிகாலை 4 மணிக்கு விஸ்வரூபம். காலை 6 மணியில் இருந்து மதியம் ஒரு மணி வரையும், பின்னர் மாலை 3 மணியில் இருந்து இரவு 10.30 மணிவரையும் உற்சவர் பார்த்தசாரதி பெருமாள் திருவாய்மொழி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இவ்வாறு பொ.ஜெயராமன் கூறி உள்ளார்.

இன்று புரட்டாசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, இன்று புரட்டாசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, இன்று புரட்டாசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலபுராணப்படி, சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த இடம் என்பதால்

மேலும்...

 மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு
ஒவ்வொரு புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும்  புனிதமான அமாவாசை ஆகும். தட்சனாயத்தில் வரும் முதல் அமாவாசையான  ஆடி அமாவாசை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைவிட பல மடங்கு முக்கியத்துவம் பெறும் அமாவாசை புரட்டாசி அமாவாசை ஆகும். இந்த அமாவாசை நாள்

மேலும்...

 அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை
மதாந்தோறும் வரும் அமாவாசை தினமானது இறந்த நமது முன்னோர்களுக்கு  விரதம் இருக்க ஏற்ற நாளாகும்இவற்றில் ஆடி அமாவாசை தை அமாவாசை மகாளய அமாவாசை  முக்கியமானவை.  முன்றில் ஆடி அமாவாசை மிகவும் விசேஷமானது.ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்;

மேலும்...

 மகிமை நிறைந்த மகாளய அமாவாசை
சூரியன் கன்னி ராசிக்குள் செல்லும்போது, அதாவது புரட்டாசி மாதம், எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் நமது முன்னோர்களும் இறந்து போன ரத்தசம்பந்த உறவுகளும் அந்தந்த உறவினரைகுடும்பத்தினரை காண ஆசையுடனும், மகிழ்ச்சியுடனும் நம்மை காணவருவார்கள். அந்த நேரத்தில் அவர்களை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in