tamilkurinji logo
 

இந்தியாவிலேயே மிகவும் வசதியான முதல்வர் சந்திர பாபு நாயுடு : ஆய்வறிக்கையில் தகவல்,Chandrababu Naidu is richest CM, Manik Sarkar the pooresttamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Chandrababu,Naidu,is,richest,CM,,Manik,Sarkar,the,pooresttamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> இந்தியா

இந்தியாவிலேயே மிகவும் வசதியான முதல்வர் சந்திர பாபு நாயுடு : ஆய்வறிக்கையில் தகவல்

First Published : Tuesday , 13th February 2018 12:03:29 PM
Last Updated : Tuesday , 13th February 2018 12:03:29 PM


இந்தியாவிலேயே மிகவும் வசதியான முதல்வர்  சந்திர பாபு நாயுடு : ஆய்வறிக்கையில் தகவல்,Chandrababu Naidu is richest CM, Manik Sarkar the pooresttamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிக சொத்துகள் கொண்ட முதல்வராக முதலிடத்தில் உள்ளார். அதேசமயம் சொத்துப் பட்டியலில் கடைசி இடத்தில் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் இருக்கிறார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி குறித்து ஆய்வு செய்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு, பல்வேறு மாநில முதல்வர்களின் பின்னணி குறித்து ஆய்வு நடத்தியுள்ளது.

இதன்படி, நாட்டிலேயே அதிக சொத்து மதிப்புள்ள மாநில முதல்வர்களின் பட்டியலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளார். அவரது சொத்து மதிப்பு 177 கோடி ரூபாயாகும். அதேசமயம் சொத்து மதிப்பு பட்டியலில் மிக குறைவாக உள்ள மாநில முதல்வராக, திரிபுராவைச் சேர்ந்த மாணிக் சர்க்கார் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 26 லட்சம் ரூபாயாகும்.

அதிக சொத்து மதிப்பு கொண்ட முதல்வர்களில் சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு 129 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். பஞ்சாபை சேர்ந்த காங்கிரஸ் முதல்வர் அம்ரீந்தர் சிங் 48 கோடி ரூபாய் சொத்துகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.


இதுபோலவே குறைவான சொத்துகள் கொண்டவர்களில் மாணிக் சர்க்காருக்கு அடுத்தபடியாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி 30 லட்சம் ரூபாய் சொத்துகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஜம்மு - காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி 55 லட்சம் ரூபாய் சொத்துகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இதுபோலேவே மொத்தமுள்ள 31 முதல்வர்களில் 11 முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மொத்தத்தில் 26 சதவீத முதல்வர்கள் மீது கொலை, மோசடி உள்ளிட்ட மிக கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கல்வியறிவைப் பொருத்தவரை 10 சதவீத முதல்வர்கள் 12-ம் வகுப்பு படித்துள்ளனர். 39 சதவீதம் பேர் பட்டதாரிகளாகவும், 32 சதவீதம் பேர் இன்ஜினியரிங் உள்ளிட்ட புரபஷனல் கல்வி பெற்ற பட்டதாரிகளாக உள்ளனர். 16 சதவீதம் பேர் முதுநிலை பட்டதாரிகளாகவும், 3 சதவீதம் பேர் பிஎச்டி முடித்தவர்களாக உள்ளனர். இவ்வாறு ஏடிஆர் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.


இந்தியாவிலேயே மிகவும் வசதியான முதல்வர்  சந்திர பாபு நாயுடு : ஆய்வறிக்கையில் தகவல்,Chandrababu Naidu is richest CM, Manik Sarkar the pooresttamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

இந்தியாவிலேயே மிகவும் வசதியான முதல்வர்  சந்திர பாபு நாயுடு : ஆய்வறிக்கையில் தகவல்,Chandrababu Naidu is richest CM, Manik Sarkar the pooresttamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

இந்தியாவிலேயே மிகவும் வசதியான முதல்வர்  சந்திர பாபு நாயுடு : ஆய்வறிக்கையில் தகவல்,Chandrababu Naidu is richest CM, Manik Sarkar the pooresttamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நிரவ் மோடியின் ரூ.5,100 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் பறிமுதல்
குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரியான நிரவ் மோடி உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் தனது நகை ஷோரூம்களை வைத்துள்ளார். இதற்கிடையே, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து சுமார் 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம்

மேலும்...

 லஞ்சம் வாங்கிய பணத்தை விழுங்கிய பெண் போலீஸ் அதிகாரி
 மகாராஷ்ட்ராவில் கோலாபூரின் சந்த்காத் காவல் நிலையத்தில் லஞ்ச பணத்தை பெண் போலீஸ் அதிகாரி விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.லஞ்ச ஒழிப்பு துறையிடம் இருந்து தப்பிக்க தான் வாங்கிய 300 ரூபாய் லஞ்ச பணத்தை வாயில் விழுங்க முயற்சி செய்த பெண்

மேலும்...

 ரூ.11,600 கோடி மோசடி: யார் இந்த நிரவ் மோடி
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.280 கோடி மோசடியும், ரூ.11 ஆயிரத்து 600 கோடி சட்டவிரோத பரிவர்த்தனையும் செய்த வகையில் இன்று நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படும் நபராக வைர வியாபாரி நிரவ் மோடி(வயது47) மாறியுள்ளார்.ரூ.11 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உடையவர்,

மேலும்...

 தன்னை கருணைக் கொலை செய்ய கோரி திருநங்கை உருக்கமாக கடிதம்
தன்னை கருணைக் கொலை செய்ய உத்தரவிடக் கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.ஏர் இந்தியா விமான நிறுவனம் பணி வழங்க மறுத்ததால் தன்னை கருணைக் கொலை செய்ய உத்தரவிடக் கோரி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in