tamilkurinji logo
 

இடிந்தகரையில் மீன் சுவையாக இருக்கும் சட்டசபையில் கலகலப்பு,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

இடிந்தகரையில் மீன் சுவையாக இருக்கும் சட்டசபையில் கலகலப்பு

First Published : Friday , 16th June 2017 12:56:13 PM
Last Updated : Friday , 16th June 2017 12:56:13 PM


இடிந்தகரையில் மீன் சுவையாக இருக்கும் சட்டசபையில்   கலகலப்பு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

இடிந்தகரை மீன்கள் ருசியாக இருக்கும் என்று ராதாபுரம் எம்எல்ஏ கூறியதால், அந்த மீன்களை சபாநாயகர் கேட்டதால் சட்டப்பேரவையில் கலகலப்பு ஏற்பட்டது.

தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் உள்ளாட்சித்துறை மற்றும் மீன்வளத்துறை குறித்த மானியக்கோரிக்கை நடைபெற்றது. அப்போது, ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை பேசுகையில், நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் மீன் பதப்படுத்தும் பூங்கா அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும் அவர் பேசுகையில், இடிந்தகரை மீன்கள் சுவையாக இருக்கும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், இடிந்தகரை மீன்களை எம்எல்ஏ-க்களுக்கு அளிக்கலாமே என்றதும் சட்டப்பேரவை கலகலப்புடன் காணப்பட்டது. உடனே எழுந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மீன்வனத்துறை மானிய கோரிக்கையின்போது மீன்கள் வழங்கப்படும் என பதில் அளித்தார். மேலும், இடிந்தகரையில் மீன் பதப்படுத்தும் பூங்கா அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

இதனிடையே, எம்எல்ஏ தங்கபாண்டியன் கேள்விக்குப் பதில் அளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ராஜபாளையத்தில் பாதாள சாக்கடைத் திட்டம் நிதி ஆதாரம் பெற்று விரைவில் செயல்படுத்தப்படும் என்றும், தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

மேலும், நிதி ஆதாரத்தை கருத்தில் கொண்டு படிப்படியாக பாதாள சாக்கடைகள் கட்டப்படும் என்று கூறிய அமைச்சர், பவானி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கதவணைகளை கட்டும் பணி இந்தாண்டு தொடங்கப்படும் என்றார்.  Tags :  
இடிந்தகரையில் மீன் சுவையாக இருக்கும் சட்டசபையில்   கலகலப்பு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

இடிந்தகரையில் மீன் சுவையாக இருக்கும் சட்டசபையில்   கலகலப்பு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

இடிந்தகரையில் மீன் சுவையாக இருக்கும் சட்டசபையில்   கலகலப்பு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குட்கா விற்க அமைச்சர் அதிகாரிகளுக்கு ரூ.40 கோடி லஞ்சம் வருமான வரி சோதனையில் அம்பலம்
 குட்கா’ விற்பனையை அனுமதிக்க அமைச்சர், அதிகாரிகள் ரூ.40 கோடி லஞ்சமாக பெற்றது வருமான வரி சோதனையில் அம்பலமாகி உள்ளது.தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.என்றாலும் தமிழ்நாடு முழுவதும் சிறு கடைகளில் ரகசியமாக குட்கா, பான் மசாலா விற்பனை

மேலும்...

 2 வது மனைவியின் மகளை பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை கைது
கருங்கல் அருகேயுள்ள  ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரன் என்ற தாஸ் (57) பில்லி, சூனியம் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவரது 2வது மனைவிக்கு 20 வயதில் மகள் உள்ளார். இவர் அப்பகுதியில்

மேலும்...

 ஜனாதிபதி தேர்தலுக்கு பின் தமிழகத்தில் நிச்சயம் சட்ட சபை தேர்தல் வரும் : ஸ்டாலின்
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பின் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் அருகே திமுக சார்பில் குளம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதனை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மேலும்...

 சென்னை சில்க்ஸ் கட்டிட இடிபாட்டில் 400 கிலோ நகையுடன் 2 பெட்டகங்கள் மீட்பு
சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், கட்டடம் முழுவதும் சேதம் அடைந்ததால், கட்டடத்தை இடித்து அகற்ற அரசு உத்தரவிட்டது. அதன்படி, அந்த கட்டடத்தை தனியார் நிறுவனம் மூலம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in