tamilkurinji logo


 

ஆவணி மாத மலையாளப் புத்தாண்டு: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு,




ஆவணி மாத மலையாளப் புத்தாண்டு: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

First Published : Tuesday , 17th August 2010 07:20:32 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

ஆவணி மாத மலையாளப் புத்தாண்டு: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு,

ஆவணி மாதத்தில் பிறக்கும் மலையாளப் புத்தாண்டை முன்னிட்டு, திங்கள்கிழமை மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.

இதையொட்டி, மாலை 5.30 மணிக்கு கோயிலின் நடையை திறந்து, மேல்சாந்தி விஷ்ணுநம்பூதிரி நெய்விளக்கு ஏற்றி வைத்தார்.

மலையாளப் புத்தாண்டில் ஐயப்பனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் திங்கள்கிழமை காலை முதலே சபரிமலை, பம்பை பகுதியில் தங்கியிருந்தனர். பம்பை நதியில் தற்போது அதிகளவில் தண்ணீர் செல்வதால், பக்தர்கள் ஆனந்தமாகப் புனித நீராடினர்.

ஆண்டுதோறும், ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மலையாளப் புத்தாண்டு பூஜையில் கலந்துகொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால், பலத்த போலீஸ் பாதுகாப்பும், பக்தர்களுக்கு பம்பை நீலிமலை ஏற்றம், அப்பாச்சிமேடு சபரிமலை ஆகிய இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, 24 மணி நேரமும் மருத்துவர்கள், உதவியாளர்கள், தேவையான மருந்துகள் கையிருப்பு வைத்திருக்க, கேரள சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

சபரிமலை ஐயப்பனுக்கு செவ்வாய்க்கிழமை முதல் வரும் 21-ம் தேதி வரை ஆவணி மாத பூஜையும், வரும் 22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை திருவோணம் பண்டிகை பூஜைகளும், நெய்அபிஷேகம், அஷ்டாபிஷேகம், புஷ்பாஞ்சலி வழிபாடும் நடைபெறும். வரும் 25-ம் தேதி இரவு கோயில் நடை அடைக்கப்படும். நடை திறந்திருக்கும் அனைத்து நாள்களிலும் தேவசம் போர்டு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

ஆகஸ்ட் 22, 23-ல் மேல்சாந்தி மற்றும் தேவசம் போர்டு சார்பில், பக்தர்களுக்கு திருவோணம் விருந்தும் வழங்கப்படும்.

ஆவணி மாத மலையாளப் புத்தாண்டு: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு, ஆவணி மாத மலையாளப் புத்தாண்டு: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு, ஆவணி மாத மலையாளப் புத்தாண்டு: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலபுராணப்படி, சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த இடம் என்பதால்

மேலும்...

 மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு
ஒவ்வொரு புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும்  புனிதமான அமாவாசை ஆகும். தட்சனாயத்தில் வரும் முதல் அமாவாசையான  ஆடி அமாவாசை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைவிட பல மடங்கு முக்கியத்துவம் பெறும் அமாவாசை புரட்டாசி அமாவாசை ஆகும். இந்த அமாவாசை நாள்

மேலும்...

 அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை
மதாந்தோறும் வரும் அமாவாசை தினமானது இறந்த நமது முன்னோர்களுக்கு  விரதம் இருக்க ஏற்ற நாளாகும்இவற்றில் ஆடி அமாவாசை தை அமாவாசை மகாளய அமாவாசை  முக்கியமானவை.  முன்றில் ஆடி அமாவாசை மிகவும் விசேஷமானது.ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்;

மேலும்...

 மகிமை நிறைந்த மகாளய அமாவாசை
சூரியன் கன்னி ராசிக்குள் செல்லும்போது, அதாவது புரட்டாசி மாதம், எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் நமது முன்னோர்களும் இறந்து போன ரத்தசம்பந்த உறவுகளும் அந்தந்த உறவினரைகுடும்பத்தினரை காண ஆசையுடனும், மகிழ்ச்சியுடனும் நம்மை காணவருவார்கள். அந்த நேரத்தில் அவர்களை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in