ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் தான் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது: ஸ்டாலின்

ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் தான் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது: ஸ்டாலின்

ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தான் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும், 21 மாதமாக நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் அமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சென்னை எழிலகத்தில் திங்கள்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இரண்டாவது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், “பல கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அவர்களது போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசு உடனடியாக அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிமுக ஆட்சி இருக்கும் வரை அரசு ஆசிரியர்கள், ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற போவதில்லை. விரைவில் ஆட்சியமைக்க இருக்கும் திமுக அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றும். உண்ணாவிரத போராட்டத்தை இன்றுடன் முடித்துக் கொள்ளுமாறு அவர்களிடம் வலியுறுத்தியுள்ளேன். இந்த பிரச்சினையை நிச்சயமாக சட்டப்பேரவையில் எழுப்புவேன்.

மக்கள் பிரச்சினைகளை தமிழக அரசு கண்டு கொள்வதில்லை. அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள், விவசாயிகள், பொதுமக்கள் யாருடைய பிரச்சினைகள் குறித்தும் கவனம் கொள்வதில்லை. ஆட்சியை எப்படி தக்க வைத்துக் கொள்வது என்பது குறித்து தான் தமிழக அரசு சிந்திக்கிறது. எம்எல்ஏக்களுக்கு மாமுல் தந்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தான் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துகின்றனர்” என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
https://goo.gl/4gLZoH


18 Dec 2018

வீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா?- அதிகாரியிடம் போனில் பேசிய கமல்

14 Dec 2018

நான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்

14 Dec 2018

புயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

14 Dec 2018

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்

13 Dec 2018

பள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

13 Dec 2018

கழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்

13 Dec 2018

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் : வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

13 Dec 2018

தினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் - முதல்வர் பகிரங்க அழைப்பு

11 Dec 2018

குடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை

11 Dec 2018

கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்