tamilkurinji logo
 

ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் தான் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது: ஸ்டாலின்,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் தான் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது: ஸ்டாலின்

First Published : Tuesday , 12th June 2018 11:00:17 AM
Last Updated : Tuesday , 12th June 2018 11:00:50 AM


ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் தான் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது: ஸ்டாலின்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema


ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தான் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும், 21 மாதமாக நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் அமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சென்னை எழிலகத்தில் திங்கள்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இரண்டாவது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், “பல கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அவர்களது போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசு உடனடியாக அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிமுக ஆட்சி இருக்கும் வரை அரசு ஆசிரியர்கள், ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற போவதில்லை. விரைவில் ஆட்சியமைக்க இருக்கும் திமுக அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றும். உண்ணாவிரத போராட்டத்தை இன்றுடன் முடித்துக் கொள்ளுமாறு அவர்களிடம் வலியுறுத்தியுள்ளேன். இந்த பிரச்சினையை நிச்சயமாக சட்டப்பேரவையில் எழுப்புவேன்.

மக்கள் பிரச்சினைகளை தமிழக அரசு கண்டு கொள்வதில்லை. அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள், விவசாயிகள், பொதுமக்கள் யாருடைய பிரச்சினைகள் குறித்தும் கவனம் கொள்வதில்லை. ஆட்சியை எப்படி தக்க வைத்துக் கொள்வது என்பது குறித்து தான் தமிழக அரசு சிந்திக்கிறது. எம்எல்ஏக்களுக்கு மாமுல் தந்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தான் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துகின்றனர்” என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் தான் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது: ஸ்டாலின்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் தான் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது: ஸ்டாலின்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் தான் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது: ஸ்டாலின்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருமணம் செய்து தருவதாக கூறி ஏமாற்றிய தாய், மகளை கொலை செய்த லாரி டிரைவர்
கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு ஊராட்சி ஜடகொண்டாபுரம் கிராமத்தில் கொண்டம் கொல்லமேடு பகுதியை சேர்ந்தவர் சிவராமன் (வயது 55), விவசாயி. இவர் எலக்ட்ரீசியன் வேலையும் செய்து வருகிறார். இவரது மனைவி சாமுண்டீஸ்வரி (45), மகள் நிர்மலா (24).நிர்மலா திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில்

மேலும்...

 நெல்லையில் திருமணமான ஒரே மாதத்தில் மனைவியை கொலை செய்த சிறை வார்டன்
நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் திருமணமான ஒரே மாதத்தில் மனைவியை கணவர் கொன்றுவிட்டார். நெல்லை மாவட்டம் பாளையம்கோட்டையை சேர்ந்தவர் பாலகுரு. இவர் பாளை சிறை வார்டனாக உள்ளார். இவருக்கும் வேலம்மாள் என்பவருக்கும் கடந்த மாதம் 31-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று

மேலும்...

 அக்கா, மாமாவுக்கு விஷம் கொடுத்து கொலை: கள்ளகாதலனுடன் தங்கை கைது
தவறான உறவைக் கண்டித்த அக்கா மற்றும் அவரது கணவரை மெல்லக்கொல்லும் விஷம் வைத்துக் கொன்ற தங்கையும் அவரது ஆண் நண்பரும் ஒன்றரை ஆண்டுகள் கழித்து போலீஸில் சிக்கினர்.சென்னை மயிலாப்பூர் சித்திரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (47). இவரது மனைவி மீனாட்சி (40)

மேலும்...

 அக்கா, மாமாவுக்கு விஷம் கொடுத்து கொலை: கள்ளகாதலனுடன் தங்கை கைது
தவறான உறவைக் கண்டித்த அக்கா மற்றும் அவரது கணவரை மெல்லக்கொல்லும் விஷம் வைத்துக் கொன்ற தங்கையும் அவரது ஆண் நண்பரும் ஒன்றரை ஆண்டுகள் கழித்து போலீஸில் சிக்கினர்.சென்னை மயிலாப்பூர் சித்திரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (47). இவரது மனைவி மீனாட்சி (40)

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in