tamilkurinji logo
 

அமெரிக்காவில் மசூதி அருகே இஸ்லாமிய இளம்பெண் படுகொலை,17-year-old Muslim girl assaulted and killed after leaving Virginia mosque tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

17-year-old,Muslim,girl,assaulted,and,killed,after,leaving,Virginia,mosque,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> உலகம்

அமெரிக்காவில் மசூதி அருகே இஸ்லாமிய இளம்பெண் படுகொலை

First Published : Monday , 19th June 2017 07:15:37 PM
Last Updated : Monday , 19th June 2017 07:15:37 PM


அமெரிக்காவில் மசூதி அருகே இஸ்லாமிய இளம்பெண் படுகொலை,17-year-old Muslim girl assaulted and killed after leaving Virginia mosque tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தின் ரெஸ்ட்டான் பகுதியில் வசித்துவரும் சில இஸ்லாமிய பெண்கள் தங்களது இருப்பிடத்தின் அருகேயுள்ள 24 மணிநேர உணவகத்தில் ரம்ஜான் நோன்புக்கான அதிகாலை உணவை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக காரில் அவர்களை கடந்துசென்ற ஒரு வாலிபர் மத துவேஷத்துடன் தகாத வார்த்தைகளை கூறி அந்தப் பெண்களை திட்டினார்.


 இதனால் பீதியடைந்த அவர்கள் உயிர் பயத்துடன் அருகாமையில் உள்ள மசூதி மற்றும் உள்ளூர் மக்களுக்கான அனைத்து டல்லாஸ் பகுதி இஸ்லாமிய சங்கத்துக்கு சொந்தமான கட்டிடத்தை நோக்கி ஓடினர்.

அந்த கட்டிடத்துக்குள் நுழைந்த பின்னர் தங்களுடன் சாப்பிட்டவந்த நப்ரா ஹுசைன்(17) என்பவரை காணாமல் திடுக்கிட்டனர்.


இதுதொடர்பாக, அனைத்து டல்லாஸ் பகுதி இஸ்லாமிய  கிடைத்த தகவலின் அடிப்படையில் விரைந்துவந்த பேர்ஃபேக்ஸ் மற்றும் லவுடன் கவுன்ட்டி போலீசார் மாயமான நப்ரா ஹுசைனை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், அருகாமையில் உள்ள ஸ்டெர்லிங் ரிட்ஜ்டாப் சர்க்கிள் என்ற பகுதியில் ஒரு குட்டையின் அருகே காணாமல்போன நப்ரா ஹுசைன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.


அதேவேளையில், சந்தேகப்படும் வகையில் அவ்வழியாக இருசக்கர காரில் சுற்றிவந்த ஒருவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.


அப்போது, இளம்பெண் நப்ரா ஹுசைனை அவர் காரில் கடத்திச் சென்று பேஸ்பால் மட்டையால் அடித்துக் கொன்ற விபரம் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட நபரின் பெயர் டார்வின் மார்ட்டினெஸ் டோரஸ்(22) என்று தெரியவந்துள்ள நிலையில் மத துவேஷ தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


அமெரிக்காவில் மசூதி அருகே இஸ்லாமிய இளம்பெண் படுகொலை,17-year-old Muslim girl assaulted and killed after leaving Virginia mosque tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

அமெரிக்காவில் மசூதி அருகே இஸ்லாமிய இளம்பெண் படுகொலை,17-year-old Muslim girl assaulted and killed after leaving Virginia mosque tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

அமெரிக்காவில் மசூதி அருகே இஸ்லாமிய இளம்பெண் படுகொலை,17-year-old Muslim girl assaulted and killed after leaving Virginia mosque tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 உலகிலேயே மிக நீளமான கால்களை கொண்ட மாடல் அழகி யார் தெரியுமா?
ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனையும் மாடல் அழகியுமான எக்டேரினா லிஷினா  (வயது 29) (Ekaterina Lisina) உலகிலேயே நீளமான கால்களை கொண்ட மாடல் அழகி என்ற  கின்னஸ் விருதை பெற்று சாதனை படைத்துள்ளார். இவரது வலது கால் 132.3 செமீ,

மேலும்...

 புளூவேல் கேம் பின்னணியில் செயல்பட்ட 17 வயது பெண் ரஷ்யாவில் கைது
ஆன்லைனில் பலரது உயிர்களை பறித்த புளூ வேல் கேமினை உருவாக்க பின்புலமாக செயல்பட்டதாக 17 வயது பெண்மணியை ரஷ்ய போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சர்வதேச அளவில் சுமார் 100-க்கும் அதிகமானோர் தற்கொலை செய்து உயிரிழக்க காரணமாக இருக்கும் புளூ

மேலும்...

 ஹார்வி புயல் - 200 இந்திய மாணவர்கள் கழுத்து அளவு நீரில் சிக்கி தவிப்பு
அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளம் புகுந்ததால், 200 இந்திய மாணவர்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கித்தவித்து வருகிறார்கள்.‘ஹார்வே’ என்ற புயல், அமெரிக்காவை தாக்கி உள்ளது. இதனால் பேய் மழை பெய்து, டெக்சாஸ் மாகாணம் வெள்ளத்தில் மிதக்கிறது. ஏராளமான உயிர்ச்சேதங்களும், பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன.இந்நிலையில்,

மேலும்...

 சவுதி மன்னரின் ஆடம்பர விடுமுறை கொண்டாட்டத்தின் செலவு ரூ 650 கோடி
சவுதி மன்னர் சல்மான் கோடை கால விடுமுறையை தமக்கு மிகவும் பிடித்த மொராக்கோ நாட்டில் உள்ள டேன்ஜியர் பகுதியில் மிகவும் ஆடம்பரமாக கழித்துள்ளார்.மொராக்கோ நாட்டில் ஒரு மாத காலம் விடுமுறையை கழிக்க சவுதி மன்னர் சுமார் ரூ 650 கோடி (100

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in