அமர்நாத் யாத்திரை: 67 பேர் பலி

அமர்நாத் யாத்திரை: 67 பேர் பலி
அமர்நாத் யாத்திரை தொடங்கி 17 நாட்களில் 67 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளது நிர்வாகத்தை கவலைகொள்ளச் செய்துள்ளது. யாத்ரீகர்களின் உடல்நலம் சம்பந்தமான விவகாரங்களை கையாள போதுமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமர்நாத் கோவில் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு 45 நாட்கள் நடைபெற்ற யாத்திரை காலத்தில் 105 பேர் உயிரிழந்தனர். இதுதான் அதிக எண்ணிக்கை என்று அப்போது கூறப்பட்டது. ஆனால் தற்போது 17 நாட்களிலேயே 67 பேர் உயிரிழந்துள்ளதால் அமர்நாத் கோவில் வாரியம் கவலை அடைந்துள்ளது. இந்த வாரியத்துக்கு ஆளுநர் வோரா தலைமை வகிக்கிறார்.
மலைப்பகுதியில் போதுமான ஆக்சிஜன் கிடைக்காததால் மாரடைப்பு ஏற்பட்டு இந்த உயிரிழப்புகள் நிகழ்வதாக கூறப்படுகிறது.

2 யாத்திரை வழித்தடங்களிலும் மருத்துவ முகாம்களை நடத்திவரும் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், யாத்திரை செல்பவர்களில் பலர் போலியான மருத்துவ சான்றிதழ்களை வைத்துள்ளது தெரியவந்துள்ளது. சிலர் நீரிழிவு மற்றும் மூச்சுக் கோளாறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
 
அவர்களுக்கு இது உகந்த இடம் அல்ல. ஆனால் அவர்கள் மருத்துவ சான்றிதழ் வைத்திருப்பதால் நாங்கள் அவர்களை தடுக்க முடியாது எனத் தெரிவித்தனர்.
https://goo.gl/5rUv6X


28 Oct 2014

இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்

21 Sep 2014

மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு

21 Jul 2014

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

24 Sep 2013

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை

08 Jun 2013

திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

23 Apr 2013

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

17 Apr 2013

ஆன்மீக செய்திகள்

11 Apr 2013

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்

07 Apr 2013

அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்

25 Mar 2013

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு