அண்ணா, கலைஞர் பாதையில் ஸ்டாலின் திராவிட முன்னேற்ற கழகத்தை வழிநடத்த வேண்டும்: விஜயகாந்த்

அண்ணா, கலைஞர் பாதையில் ஸ்டாலின் திராவிட முன்னேற்ற கழகத்தை வழிநடத்த வேண்டும்: விஜயகாந்த்
அண்ணா மற்றும் கருணாநிதி பாதையில் ஸ்டாலினும் பயணித்து திமுகவை சீரும் சிறப்புமாக வழிநடத்த வேண்டும் என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

 கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் இதனை அறிவித்தார். தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தேசிய தலைவர்களும், தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகனுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தும் ஸ்டாலினுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் புதன்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “அண்ணா மற்றும் கருணாநிதி பாதையில் ஸ்டாலினும் பயணித்து திமுகவை சீரும் சிறப்புமாக அந்த தலைவர்கள் வழியில் வழிநடத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன். திமுக பொருளாளராக துரைமுருகனும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தேமுதிக சார்பாக மகிழ்ச்சியுடன் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தாங்கள் இயக்கத்திற்கு பெருமையையும் புகழையும் சேர்த்திட எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
https://goo.gl/3aVdTG






03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி

25 Dec 2018

வாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்

24 Dec 2018

கிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல்

21 Dec 2018

தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 24ந்தேதி கூடுகிறது