அடையாறு, வேளச்சேரி,பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட திருடன் கைது

அடையாறு, வேளச்சேரி,பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட   திருடன் கைது
அடையாறு, வேளச்சேரி, கிண்டி பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த பிரபல திருடனை போலீசார்  கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.2 கிலோ தங்கம், ரூ.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


சென்னை அடையாறு காவல் மாவட்டங்களான  அடையாறு, வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் பூட்டி கிடக்கும் வீடுகளை குறிவைத்து தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தது. 


குறிப்பாக, வேளச்சேரி பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த தொடர்  திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.

 இதையடுத்து, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் அடையாறு போலீஸ் துணை கமிஷனர் சஷாங் சாய் தலைமையில்  வேளச்சேரி இன்ஸ்பெக்டர் வேலு உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,  கொள்ளையடிக்கப்பட்ட வீட்டின் பூட்டுகள் அனைத்து ஒரே மாதிரியாக உடைக்கப்பட்டிந்ததை கண்டுபிடித்தனர்.

அனைத்து இடங்களிலும் பதிவான  சிசிடிவி கேமரா காட்சிகளிலும் ஒரே வாலிபரின் உருவம் பதிவாகி இருந்தது.

விசாரணையில், எடைப்பாளையம் பெரியார் நகர் சத்யா கார்டனை சேர்ந்த  பிரபல கொள்ளையன் அனுப்குமார் (32) என தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அனுப்குமாரை நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார்  பிடித்து விசாரணை நடத்தினர்.

 அதில், அனுப்குமார் பகல் நேரத்தில் ரயில்களில் வந்து அடையாறு, வேள்சேரி, கிண்டி பகுதிகளில் பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு குறித்து  கொள்வார். பிறகு இரவு நேரத்தில் அந்த வீடுகளுக்கு சென்று பூட்டை உடைத்து கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது.

அந்த வகையில் அடையாறு,  வேளச்சேரி, கிண்டி ஆகிய பகுதிகளில் கடந்த 8 மாதத்தில் 17 வீடுகளில் திருடியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் பிரபல திருடன்  அனுப்குமாரை கைது செய்தனர். அவனிடம் இருந்து 1.2 கிலோ தங்க நகைகள், ரூ.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
https://goo.gl/GUzVUb






03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி

25 Dec 2018

வாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்

24 Dec 2018

கிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல்

21 Dec 2018

தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 24ந்தேதி கூடுகிறது