tamilkurinji logo
 

அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்,Agastheeswarar Temple Vinnampalli

Agastheeswarar,Temple,Vinnampalli


அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்

First Published : Sunday , 7th April 2013 08:17:32 PM
Last Updated : Sunday , 7th April 2013 08:17:32 PM


அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்,Agastheeswarar Temple Vinnampalli

விண்ணம்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரிய ஒளி விழுந்தது. அப்போது பக்தர்கள் ‘நமச்சிவாய’ என்று கோஷமிட்டனர்.

வேலூர் மாவட்டம், சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கும், வள்ளிமலை கோவிலுக்கும் மத்தியில் அமைந்துள்ளது விண்ணம்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் தான் 12–வது நூற்றாண்டில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் சுமார் 850 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது.

ஈசான்ய வாயில் படியை கொண்ட இந்த கோவிலில் அகத்திய முனிவர் வழிபட்டுள்ளார் என தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த கோவிலில் ஆண்டுக்கொருமுறை பங்குனி உத்திரம் உத்திராயாண காலத்தில் (ஏப்ரல் மாதம்) பங்குனி 23 முதல் 29–ந் தேதி வரை காலை 6.15 மணி முதல் காலை 6.45 மணி வரை இங்குள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவது சிறப்பானதாகும்.

இந்த கோவிலை தரிசனம் செய்தால் ஏழு பிறவிகளில் செய்த வினைகள் தீரும் என கூறப்படுவதால் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த சூரிய ஒளி விழும் நிகழ்ச்சி காண வருகை தருகின்றனர்.

பொதுவாக தமிழர்கள் கட்டிடக்கலையில் வல்லுநர்கள் என கூறுவார்கள் ஆனால் எந்த வித அறிவியல் தொழில் நுட்பங்களோ, நவீன உபகரணங்களோ இல்லாத ஆதி காலங்களில் வான சாஸ்திரத்தை துல்லியமாக ஆராய்ந்து வருடத்தில் பங்குனிமாதம் 7 நாட்களில் மட்டும் சூரிய ஒளி லிங்கத்தின் மீது படியும் விதத்தில் இந்த கோவிலை கட்டியிருப்பது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு கட்டியங்கூறுவது போல் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் லிங்கத்தின் மீது விழும் சூரிய ஒளியானது முதலில் கோவிலின் முன்புள்ள நந்தி மண்டபத்தின் உள் நுழைந்து பின்னர் கோவிலில் உள்ள மூன்று பிரகாரங்களை கடந்து பின்னர் லிங்கத்தின் மீது விழுகிறது.

முதலில் லிங்கத்தின் மேல்புறத்தில் விழுந்த ஒளி பின்னர் படிப்படியாக லிங்கத்தின் மையப்பகுதியை அடைகிறது. பின்னர் கீழே இறங்கி மறைந்து விடுகிறது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் 15 நிமிடங்களில் நடந்து விடுகிறது. நேற்று காலை 6.30 மணிக்கு சூரிய ஒளி விழுந்து பின்னர் காலை 6.45 மணிக்கு மறைந்து விட்டது. இந்த அரிய நிகழ்ச்சியை பார்த்த திரளான பக்தர்கள் உணர்ச்சி பெருக்கில் நமச்சிவாய என கோஷமிட்டனர்.

வேலூரில் இருந்து சுமார் 22 கி.மீட்டர் தொலைவிலும், காட்பாடியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும், சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திலிருந்து சுமார் 2½ கி.மீ. தொலைவிலும் இந்த கோவில் அமைந்துள்ளது.
 



  Tags :  
அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்,Agastheeswarar Temple Vinnampalli அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்,Agastheeswarar Temple Vinnampalli அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்,Agastheeswarar Temple Vinnampalli
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருவனந்தபுரம் பகவதி அம்மன் கோவிலில் 40 லட்சம் பெண்கள் பொங்கலிட்டனர்
திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதியம்மன் கோயிலில் நடந்த பொங்கல் விழாவில் 40 லட்சம் பெண்கள் பொங்கலிட்டனர்.திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதியம்மன் கோயில் கேரளாவில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலில் வருடந்தோறும் மாசி மாதத்தில் 10 நாட்கள் பொங்கல் திருவிழா நடைபெறும்.திருவிழாவின் 9ம் நாளன்று

மேலும்...

 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா, இன்று (16–ந்தேதி - சனிக்கிழமை) கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2–ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகிறது. அதில் மாசி திருவிழா

மேலும்...

 மகரவிளக்கு பூஜை - சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை திருவிழா மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்திபெற்றவை. இந்த திருவிழா நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து

மேலும்...

 காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த ஆபரண பெட்டகம் திறப்பு
காஞ்சீபுரம் ஆதிகாமாட்சி அம்மன் கோவிலில் பல ஆண்டு காலமாக திறக்கப்படாமல் இருந்த ஆபரண பெட்டகம் திறக்கப்பட்டது. இதில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள பழங்கால நகைகள் மீட்கப்பட்டன.காஞ்சீபுரத்தில் புகழ்பெற்ற ஆதி காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள ஆபரணப்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in