டிராபிக் ராமசாமி திரைப்படம் விஜய் பிறந்தநாளன்று வெளியீடு

டிராபிக் ராமசாமி திரைப்படம் விஜய் பிறந்தநாளன்று வெளியீடு
டிராபிக் ராமசாமி’ படம், விஜய் பிறந்த நாளில் வெளியாவது பெருமையாக இருக்கிறது படத்தின் டைரக்டர் கூறினார்.சமுதாயத்துக்கும், சட்டத்துக்கும் தீங்கு செய்தவர்களை திரைப்படம் மூலமாக சுட்டிக்காட்டி, ‘புரட்சி இயக்குனர்’ என்று பெயர் எடுத்தவர், எஸ்.ஏ.சந்திரசேகர். இவர், சமூக சேவகர் ‘டிராபிக் ராமசாமி’யாக ஒரு புதிய படத்தில் நடித்து இருக்கிறார்.


இந்த படத்துக்கு, ‘டிராபிக் ராமசாமி’ என்றே பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

சமீபத்தில், டிராபிக் ராமசாமி படத்தை பார்த்த திரைப்பட வினியோகஸ்தர்கள், படம் முடிந்ததும் எழுந்து நின்று கைதட்டினார்கள். இது, படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி படத்தின் டைரக்டர் விக்கி கூறியதாவது:-

“வினியோகஸ்தர்கள் ஒரு படத்தை ‘பிரிவியூ’ அரங்கில் பார்த்து விட்டு கைதட்டி பாராட்டுவது இதுவே முதல் முறை என்று கருதுகிறேன். இந்த பாராட்டு, சுயநலமில்லாத ஒரு உண்மையான போராளியான டிராபிக் ராமசாமியின் துணிச்சலான வாழ்வுக்கு கிடைத்ததாகவே நாங்கள் கருதுகிறோம்.

தயாரிப்பாளர் சங்கம், இந்த பட வெளியீட்டு தேதியாக இம்மாதம் (ஜூன்) 22-ஐ கொடுத்துள்ளதால் கூடுதல் பூரிப்பில் உள்ளோம். “விஜய் அண்ணனுடைய ரசிகன் நான். அவரை அருகில் இருந்து அடிக்கடி பார்க்கலாம் என்பதற்காகவே டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தேன்.

அவர் தந்தையை வைத்து நான் இயக்கியுள்ள ‘டிராபிக் ராமசாமி’ படம், விஜய் பிறந்த நாளில் வெளியாவது பெருமையாக இருக்கிறது. இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதை விட ஒரு ரசிகனுக்கு என்ன வேண்டும்?” இவ்வாறு டைரக்டர் விக்கி கூறினார்.


18 Feb 2019

மகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்

06 Feb 2019

பிரபல நடிகை தற்கொலை; செல்போன் பேச்சுக்கள் குறித்து போலீஸ் விசாரணை

02 Jan 2019

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்” - பிரகாஷ்ராஜ் அறிவிப்பு

27 Dec 2018

ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - சசிகலா வேடத்தில் சாய் பல்லவி

27 Dec 2018

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்

21 Dec 2018

நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்.

18 Dec 2018

மாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்

18 Dec 2018

மகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்

13 Dec 2018

நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி

13 Dec 2018

நடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்