tamilkurinji logo


 

SUN TV செய்தது சரியா ...?,
SUN TV செய்தது சரியா ...?

First Published : Monday , 14th November 2011 12:31:16 PM
Last Updated : Monday , 14th November 2011 02:53:03 PM
SUN TV செய்தது சரியா ...?, இன்றைய SUN தொலைகாட்சியின் செய்திகள் நேரத்தில் ATM இருக்குமிடங்களில் உள்ள பாதுகாப்பு நிலைகள் குறித்து ஒளிபரப்பபட்டது .   தொடர்ந்து வரும் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் விதத்திலும் , உண்மை நிலையை மக்கள் அறியும் விதத்திலும் இந்த செய்திகள் ஒளி பரப்ப பட்டது வரவேற்க தகுந்தது . 

கிட்ட தட்ட இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 2 மணி வரையிலும் சென்னை பட்டணத்தின் பெரும்பாலான ATM இருக்கும் இடங்களை SUN TV யின் தொலைகாட்சி பதிவு செய்தது .  அதில் இரவு 9 மணிக்கு ஒரு ATM ல் காவலாளி இல்லை என்றும் அதிகாலை 1  மணிக்கு ஒரு காவலாளி தூங்கி கொண்டு இருப்பதையும் ,  அதிகாலை 1 . 30 மணிக்கு தூங்கி கொண்டிருந்த ஒரு காவலாளியை எழுப்பியும் அற்புதமான ஒளி பரப்பை செய்து முடித்தது SUN TV யின் செய்திகள் .

அண்ணா சிலையின் முன் உள்ள ATM ல் இரவு 9 மணிக்கு காவலாளி இல்லை என்று ரிப்போர்ட்டர் பேசினார் .  அந்த இரவில் விழித்திருக்கும் சக்திக்காக ஏன் அவர் ஒரு தேநீர் அருந்த சென்றிருக்க கூடாது ....?

ICICI வங்கியின் ATM ஒன்றில் தூங்க கொண்டிருந்த ஒரு காவலாளியை எழுப்பி அவரது முகம் திரையில் நன்கு விழும் படி காண்பித்து அவரிடம் தூங்கி கொண்டிருக்கிறீர்களா என்று கேட்க அவர் மிகுந்த தர்ம சங்கடத்துடன் இப்பொழுது தான் என்று தலை குனிந்து சொல்ல ,  நான் ரொம்பவே நொந்து தான் போனேன் .

அந்த காவலாளி தூங்கினதை  நான் நியாயப்படுத்தவில்லை .  இருந்தாலும்   அவர் என்ன மாதிரி சூழ்நிலையில் அந்த இரவு வேலையை தேர்ந்து எடுத்தாரோ .. அநேக இரவு நேர காவலாளிகள் பகல் நேரம் வேறு வேலை செய்கிறதை நான் அறிந்திருக்கிறேன் .  எல்லாம் குடும்பத்தை காப்பாற்ற தான் .  நீங்கள் ஒரு வார்த்தை அவரிடம் பேசியிருக்கலாம் ( TV யில் காண்பிக்காமல் ) ,   இல்லை என்றால் ஒரு பொதுவான ரிப்போர்ட் கொடுத்திருக்கலாம் .  எதுவும் செய்யாமல் ஒரு அப்பாவியின் முகத்தை அழகாக காட்டி விட்டீர்கள் .   இனி மேல் அவருக்கு எப்படி அந்த வேலை நீடிக்கும் ..?
இப்படி அப்பாவி மக்களை முன்னால் நிறுத்தி , பிரபலமாகும் அநேகர் இந்த நாட்களில் எழும்புகிறார்கள் .  அதனால் பாதிக்கப்படுவது என்னவோ ... மக்கள் தான்

என்னடா ... இந்த இருதயம் இப்படி எழுதுகிறார் என நினைக்கலாம் ...!  ஆம் ... வேறென்ன செய்ய ... பகலில் எல்லாரும் விழித்திருக்கும் போதே கோடி கோடியாய் கொள்ளை அடித்து ஊரை ஏமாற்றும் கயவர்களை விட்டு அப்பாவி மக்களை முன் நிறுத்தி பிரபலமான இந்த செய்கை சரி தானா ..?  என்பதை  இப்பொழுதும் சிந்தித்து கொண்டு தான் இருக்கிறேன் .    Tags :    
SUN TV செய்தது சரியா ...?, SUN TV செய்தது சரியா ...?, SUN TV செய்தது சரியா ...?,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கூடங்குளம் - ஒரு புரியாத புதிரா ..?
இந்த தலைப்பை பார்த்தவுடன் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது அல்லவா ...? ஆம் ... கூடங்குளத்தில் நிகழும் சில செய்திகளை பார்க்கும் போது எனக்கும் கொஞ்சம் வித்தியாசமாக தான் இருக்கிறது ...!  பிரதமர் அவர்களின் ரஷிய பயணத்தை கண்டித்து கூடங்குளம் மற்றும்

மேலும்...

 ரத்தசரித்திரம் - ரத்தம் தெறிக்கும் உண்மைக் கதை..! - உண்மைத்தமிழன்
என் இனிய வலைத்தமிழ் மக்களே..! சமீபத்தில் வெளியாகியுள்ள 'ரத்தசரித்திரம்' என்னும் தமிழ் டப்பிங் திரைப்படம் உண்மையாகவே ஆந்திர தேசத்தில் நடந்த கதைதான் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அந்தக் கதையை முழுமையாகத் தெரிந்து கொள்ள கூகிளாண்டவர் துணையை நாடியபோது எனது ரத்தமே உறைந்து

மேலும்...

 தஞ்சை பெரிய கோயில் 1000 ஆண்டுகள் - - பாலகுமாரன், நாவலாசிரியர்
அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின்

மேலும்...

 ஆன்மிக வெங்காயத்தை உறிக்கலாமா? - Dr.ருத்ரன்
இன்று ஒரு பதிவைப்படிக்க நேரிட்டது, அதில், சாமியார்களும் சைக்யாட்ரிஸ்ட்களும் ஒன்றுதான், இரண்டில் எங்குபோனாலும் பரவாயில்லை, வாழ்வுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று எழுதியிருந்தது.இரண்டு நாட்களுக்கு முன்தான் யாரையும் திட்டாமல், கோபப்படாமல் பதிவு எழுத வேண்டும் என்று தீர்மானித்தேன், அதற்குள் இது கண்ணில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in