tamilkurinji logo


 

"2012" - ஆல்பர்ட,




"2012" - ஆல்பர்ட

First Published : Saturday , 14th November 2009 10:02:37 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM




Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303


அன்பினிய‌ ந‌ண்ப‌ர்க‌ளே,
 
நாளை நவம்பர் 13ம்தேதி. (யாருக்கும் தெரியாத உண்மையைச் சொல்கிறேனே என்று பார்க்கிறீர்களா?) 
 
ஹாலிவுட் திரைப்படம் "2012" வெளியாக உள்ளது.
2012ம் ஆண்டு டிசம்பர் 21ம்தேதி என்ன நடக்கலாம் என்பது கதை.
 
மாயன் காலண்டர் பரபரப்பாக பேசப்பட்ட நிகழ்வின் உச்சமாக இந்த திரைப்படம்!
 
மாயன்கள் காலண்டரில் மூன்று மிகப் பிரபலமானவை. நாம் எப்படி அறுபதாண்டு சுழற்சி முறைக்கு ஒரு பெரும் கதையை வைத்திருக்கிறோமோ அது போல," மத்திய அமெரிக்கா மெக்சிக்கோவில் கிபி 900களில் பயன்படுத்தியிருந்திருக்கிறார்கள். 
 
சிந்துசமவெளி நாகரீகம் சிதைந்தது போல இதுவும் மறைந்திருக்கிறது.
 
1987-லேயே 25-ஆண்டுகள் கவுண்ட்டவுன் தொடக்கிவைத்தவர் "லா ஆப் டைம் நிறுவனர்
ஜோஸ் ஆர்கெல்லாஸ். இவரின் கூற்று படி 2012ம் ஆண்டில் மக்களெல்லாரும் தங்கள்
உணர்வுகளில் முக்திபெற்று ஒரு உயர்ந்த நிலையை அடைவார்கள்.
 
எளிய வாழ்க்கை, சூரிய சக்தி தொழில்நுட்பம், போன்ற‌வற்றில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். அவர்கள் தங்களுக்குள்ளே டெலிபதி முறையில் உரையாடுவார்கள். இப்படியான ஆன்மாவில் உயர்நிலை அடையாத மனிதர்களையெல்லாம் ”வெள்ளிக்கப்பல்கள்” வந்து அள்ளிக்
கொண்டு போய்விடும் என்பது அவருடைய கணிப்பு.
 
இவர்களின் வானியல் ஞானம் நம்மில் மூக்கில் விரல் வைக்க வைக்கிறது.
பூமி தனது அச்சில் ஒவ்வொரு 72 ஆண்டுகளும் ஒருமுறை ஏறத்தாழ ஒரு டிகிரி
நெகிழ்வதைத் துல்லியமாக கணக்கிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். எந்தவிதமான
தொழில் நுட்பமும் இல்லாத காலத்தில் அவர்களால் இது சாத்தியப்பட்டுள்ளதே
நம்மை வியக்கவைக்கிறது.
 
ஒரு சுழற்சிக்கு 5125 ஆண்டுகள் வீதம் மொத்தம் 5 சுழற்சிகளில் ஏறத்தாழ
26000 ஆண்டுகளாக கணக்கிட்டுள்ளனர். 5125 ஆண்டுகள் முடியும் போது பூமியில்
ஒரு மாற்றமோ அழிவோ உண்டாகும் என்பது இந்தமாயன் நாட்காட்டியின் கணிப்பு.
 
இப்போது நாம் ஐந்தாவது சுழற்சி ஆகஸ்ட் 11 கி.மு 3114‍ல் துவ‌ங்கியதாகவும் வரும்
2012 டிசம்பரில் இந்த 5125 ஆண்டுகள் சுழற்சி நிறைவுறப் போவதாகவும் நம்பப்படுகிறது.
இந்த‌ ந‌ம்பிக்கை உள்ள‌வ‌ர்க‌ளால் ப‌ல்வேறு க‌தைக‌ள் உல‌கெங்கும் சித்த‌ரிக்க‌ப்ப‌ட்டும்
உர‌த்து கிசுகிசுக்க‌ப்ப‌டுவ‌தும் இணைய‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் அறிந்த‌ பேருண்மை!
 
2012 படத்தின் முன்னோட்டத்தைப் பார்க்க இங்கே சுட்டுக:-  http://www.whowillsurvive2012.com/

நடப்பது நடந்துதானே ஆகும். இதற்காக கவலைப்பட யாருக்கு நேரமிருக்கிறது இங்கே:-))
 
ஆல்பர்ட்.



    Tags :    
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பணிவோம், உயர்வோம்!
பிறர் தவறு செய்தால், ஏன் இப்படி செய்தார் என்று சிந்தித்து நேரத்தை வீணாடிக்கக் கூடாது.சோர்வடைந்து காணப்படும் எவரையும் பார்த்து ஏன் உடல்நலம் சரியில்லையா? என்ன ஆயிற்று என்றெல்லாம் கேட்கக் கூடாது.பிறர், உங்களுக்குச் செய்யும் உதவிகளை மனதில் வைத்து நன்றி பாராட்டுங்கள்.யாரிடமும் சம்பளம்

மேலும்...

 மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்
எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் சந்தோஷத்தை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்பதைத் தான் நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை. அதனால் தான்  நமக்குள்ளேயே இருக்கிற சந்தோஷத்தை வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்எப்போதும் சந்தோஷமாக, சிரித்துக் கொண்டு

மேலும்...

 திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்
 எப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள் கூட திருமணத்திற்கு பிறகு சதை போட்டு விடுகிறார்கள்.ஏன் ஒரு பெண் திருமணம் ஆன பிறகு மட்டும் குண்டாகிறாள்? இதற்காக ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 10 வருடங்களாக

மேலும்...

 முதுமை பற்றிய பொன் மொழிகள்
மூப்பை வெல்ல உண்மையான வழி, உள்ளத்தின் இளமையை போற்றிப் பாதுகாப்பதே.முதுமை எய்துவது ஒரு கெட்டப் பழக்கம். வேலையில் முனைந்திருக்கும் மனிதனுக்கு அதற்கு அவகாசம் இல்லைஇலக்கியங்கள் இளமையில் உற்சாகத்தையும், முதுமையில் மகிழ்ச்சியும் கொடுக்கின்றன.முதுமையை முன்னிட்டு முன்னதாகச் செய்யும் பாதுகாப்புகளில் சிறந்தது கல்வி.வாழ்நாட்களின் இனிய

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in