tamilkurinji logo


 

தமிழர் புதுவருடத்துக்கு கலைஞர் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகள் ! - வேத்தியன்,




தமிழர் புதுவருடத்துக்கு கலைஞர் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகள் ! - வேத்தியன்

First Published : Sunday , 12th April 2009 01:09:22 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM




Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

தமிழர் புதுவருடத்துக்கு கலைஞர் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகள் ! - வேத்தியன், தை மாதத்தின் முதல் நாளாக தமிழர்களால் கொள்ளப்படுவது தைப்பொங்கல் நாளாகும்.
அதையே தமிழர் புதுவருடமாக சிறு காலத்துக்கு முன் தமிழ்நாட்டு முதல்வர், கலைஞர் என அழைக்கப்படும் கருணாநிதி அறிவித்திருந்தார் என்பது அனைவரும் அறிந்த விடயம்...

நான் பொதுவாக எந்த அரசியல் வாதிகளுக்கும் அவர்கள், இவர்கள் என மரியாதை கொடுப்பதில்லை...
(தற்போதைய அரசியல் வாதிகளுக்கு மட்டும்... :-) )
ஆனால் கருணாநிதி எழுதிய சில எழுத்துகள் எனக்கு உண்மையிலேயே பிடிக்கும்..
அதானால் மட்டும் அவரை கருணாநிதி என பெயர் சொல்லி அழைக்காமல் கலைஞர் என அழைப்பேன்..
:-)

சன் டீ.வியின் உரிமையாளர் கலாநிதி மாறன் மற்றும் அவருடைய குடும்பத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கலைஞர் தொடங்கிய தொலைக்காட்சி தான் கலைஞர் தொலைக்காட்சி..
இது அனைவரும் அறிந்ததே...
அதைத் தொடர்ந்து சிரிப்பொலி, செய்திகளுக்காக தொடங்கப்பட்ட தொலைக்காட்சி என ஏகப்பட்டது இருக்கின்றது...

இப்போ விஷயம் என்னான்னா, தைப்பொங்கல் தினத்தை தமிழர் புதுவருடமாக அறிவித்த கலைஞர் சித்திரை புதுவருட தினத்தை மறந்திருக்க வேண்டும்..



ஆனால் கலைஞர் தொலைக்காட்சிக்கு போட்டியாக உள்ள விஜய் டீ.வி, ஜெயா டீ.வி, சன் டீ.வி போன்றன சித்திரை தமிழ் புத்தாண்டு தினத்துக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் என்று சொல்லி பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பிருப்பதை தத்தமது தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்தி வருகின்றன...

விஜய் டீ.வி ஒரு வித்தியாசமாக சித்திரை புதுவருடம் என சொல்லாமல் "சித்திரை விழா" என கூறி வருகிறது..
புதுவருடம் என சொன்னால் அரசியல் ரீதியாக ஏதும் பிரச்சனை வரும் என பயமோ???
:-)

இப்படி கலைஞர் தொலைக்காட்சிக்கு போட்டியாகவுள்ள தொலைக்காட்சிகள் அனைத்தும் சித்திரைப் புதுவருடத்துக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவது அறிந்த கலைஞர் தொலைக்காட்சி சித்திரை முதல் நாள் என்ற பெயரில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப ஆயத்தமாக இருக்கின்றது...

சரி, அப்படியானால் எல்லா மாத முதல் நாளுக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப வேண்டியது தானே???
அது ஏன் சித்திரை மாதத்தின் முதல் நாளுக்கு மட்டும் சிறப்பு நிகழ்ச்சிகள்???
காரணம் விளங்கவில்லை எனக்கு...
:-)

கலைஞர் தைப்பொங்கல் தினத்தை தமிழர் புதுவருடமாக அறிவித்தால் ஜெயலலிதாவுக்கு சித்திரை மாதம் தான் தமிழர் புதுவருடம் வரும் கட்டாயமாக...
கலைஞர் வடக்கு என்றால் ஜெயலலிதா தெற்கு தானே???
:-)
100 % அரசியல் வாதிகள் இருவரும்...
இப்படி தங்களுக்குள் சணடை பிடிப்பதை நிறுத்தி நாட்டை பற்றி சிந்தித்திருந்தால் இன்னும் கொஞ்சம் தமிழ்நாட்டை முன்னேற்றியிருக்கலாம் அல்லவா???
நான் குறிப்பாக இவர்களை மட்டும் சொல்லவில்லை..
எல்லா அரசியல் வாதிகளும் தான்...

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சிகள் கலைஞரின் அனுமதியோடு தானே ஒளிபரப்பப்படுகிறது???
தைப்பொங்கல் தினத்தை தமிழர் புத்தாண்டாக அறிவித்த கலைஞர் ஏன் இதற்கு அனுமதி அளித்தார்???
நிகழ்ச்சிகளுக்காக விளம்பரம் மூலம் வரும் பணமா காரணம் ???
புரியவில்லை எனக்கு...
ஏதும் நுண்ணரசியல் இருக்குமோ???
:-)

நான் இந்த விடயம் பத்தி அரசியல் நோக்கில் எழுதவில்லை...
அரசியல் எனக்கு பிடிக்காது...

எது எப்படியிருந்தாலும் சித்திரை புதுவருட தினத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதால் நமக்கு தானே ஜாலி...

இவரது மற்ற பதிவுகளைக் காண : வேத்தியன்
இக்கட்டுரை பற்றிய தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய : வாசகர் கருத்து



    Tags :    
தமிழர் புதுவருடத்துக்கு கலைஞர் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகள் ! - வேத்தியன், தமிழர் புதுவருடத்துக்கு கலைஞர் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகள் ! - வேத்தியன், தமிழர் புதுவருடத்துக்கு கலைஞர் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகள் ! - வேத்தியன்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பணிவோம், உயர்வோம்!
பிறர் தவறு செய்தால், ஏன் இப்படி செய்தார் என்று சிந்தித்து நேரத்தை வீணாடிக்கக் கூடாது.சோர்வடைந்து காணப்படும் எவரையும் பார்த்து ஏன் உடல்நலம் சரியில்லையா? என்ன ஆயிற்று என்றெல்லாம் கேட்கக் கூடாது.பிறர், உங்களுக்குச் செய்யும் உதவிகளை மனதில் வைத்து நன்றி பாராட்டுங்கள்.யாரிடமும் சம்பளம்

மேலும்...

 மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்
எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் சந்தோஷத்தை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்பதைத் தான் நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை. அதனால் தான்  நமக்குள்ளேயே இருக்கிற சந்தோஷத்தை வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்எப்போதும் சந்தோஷமாக, சிரித்துக் கொண்டு

மேலும்...

 திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்
 எப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள் கூட திருமணத்திற்கு பிறகு சதை போட்டு விடுகிறார்கள்.ஏன் ஒரு பெண் திருமணம் ஆன பிறகு மட்டும் குண்டாகிறாள்? இதற்காக ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 10 வருடங்களாக

மேலும்...

 முதுமை பற்றிய பொன் மொழிகள்
மூப்பை வெல்ல உண்மையான வழி, உள்ளத்தின் இளமையை போற்றிப் பாதுகாப்பதே.முதுமை எய்துவது ஒரு கெட்டப் பழக்கம். வேலையில் முனைந்திருக்கும் மனிதனுக்கு அதற்கு அவகாசம் இல்லைஇலக்கியங்கள் இளமையில் உற்சாகத்தையும், முதுமையில் மகிழ்ச்சியும் கொடுக்கின்றன.முதுமையை முன்னிட்டு முன்னதாகச் செய்யும் பாதுகாப்புகளில் சிறந்தது கல்வி.வாழ்நாட்களின் இனிய

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in