tamilkurinji logo


 

சிங்களக் கத்தோலிக்க மதவாதிகள்........மதவேடத்திலுள்ள கபடதாரிகள் - முனைவர்.அருள்திரு.பிலிப் சுதாகர்,
சிங்களக் கத்தோலிக்க மதவாதிகள்........மதவேடத்திலுள்ள கபடதாரிகள் - முனைவர்.அருள்திரு.பிலிப் சுதாகர்

First Published : Sunday , 3rd January 2010 09:27:39 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM
Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

சிங்களக் கத்தோலிக்க மதவாதிகள்........மதவேடத்திலுள்ள கபடதாரிகள் - முனைவர்.அருள்திரு.பிலிப் சுதாகர், தமிழக கத்தோலிக்க மத குருவின் உள்ளக்குமுறல்.

‘அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். வலியோரை அரியணையிலிருந்து தூக்கியெறிந்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.’(லூக் 1:49-53)

‘இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும் நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் விடியல் நம்மைத் தேடிவருகிறது’(லூக்1:79)

இயேசு பல நற்செயல்கள் செய்து அவரை யூதர்கள் கல்லால் எறிந்தனர். கொடிய சிலுவையைச் சுமத்திக் கொன்றனர். ரோமைய அரசம் யூத மதமும் கைகோர்த்துக் கொண்டு அவரைத் தீர்த்துக்கட்டின. இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசம் பௌத்த மதமும் கூட்டு சேர்ந்துள்ளன. கத்தோலிக்கர்களை கத்தோலிக்கர்களே கொல்லும் நாடு இலங்கை. இலங்கையில் அதிபர்களாக இருக்கும் அனைவருமே கத்தோலிக்க மதத்திலிருந்து பௌத்த மதத்திற்கு வந்தவர்கள். பண்டாரநாயகா என்ற பெயர் நமக்குத் தெரியும். அவரின் முழுப் பெயர் சாலமன் விக்டர் பண்டாரநாயகா.

அதே போன்று சேனநாயகாவின் முழுப்பெயர் சுடீபன் டட்லி சேனநாயகா. செயவர்த்தனாவின் முழுப் பெயர் ரிச்சர்டு செயவர்த்தனா. இவர்கள் அரசியல் அதிகாரத்தை அடைவதற்காகப் பௌத்தர்களானார்கள். தமிழர்களில் கணிசமானோர் கத்தோலிக்கர்களாக இருப்பதைப் பற்றி எவரும் கவலைப்படவில்லை. அவர்களையும் கூண்டோடு குடும்பம் குடும்பமாகக் குண்டு வீசிக் கொல்லுகிறோமே என்ற உணர்வு கத்தோலிக்கர்களாக இருந்து பௌத்தர்களான அதிபர்களுக்கு இல்லை.

அரசியலுக்குப் போனவர்கள் அவ்வளவு கீழ்தரமான பிறவிகளானார்கள். பதவி வெறியும் அதிகார மமதையும் ஆட்சி சுகங்களும் அவர்களைப் பேயாக ஆட்டிப் படைத்தன. இவர்கள் பெயரளவில் கத்தோலிக்கர்கள். பெயரளவில் பௌத்தர்கள். உண்மையில் இவர்கள் கத்தோலிக்கர்களும் இல்லை. பௌத்தர்களும் இல்லை. மனிதர்களாகவே வாழாதவர்கள். இவர்கள் போலி அரசியல்வாதிகள். போலி மதவாதிகள். இவர்களிடம் வெளிப்படுவது கத்தோலிக்கக் குரலும் அல்ல. பௌத்தக் குரலும் அல்ல. ஏனெனில் எந்த மதமும் மற்றொரு மதத்தவரைக் கொல்லச் சொல்லவில்லை. அதைவிட எந்த மதமும் அதே மதத்தைச் சேர்ந்தவர்களையே கொல்லச் சொல்லவில்லை.

மனித உரிமைகளை அப்பட்டமாக மீறுவோரிடம் நாம் மனிதப் பண்பைக் காண முடியாது. நரகலில் நல்லரிசி இருக்காது. கத்தோலிக்க மதமும் பௌத்தமும் இவர்களை மனிதர்களாக மாற்றுவதில் தோற்றுப்போய்விட்டன. பொறுப்பற்றவர்களும் பொறுப்புகளைத் தட்டிக் கழிப்போரும் பொறுப்புகளை விற்றுப் பிழைப்போருமே பொறுப்புகளுக்கு வருகின்றனர்.

பல இனங்களும் பல சமயங்களும் பல மொழிகளும் பல பண்பாடுகளும் உடைய இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடாக மாற்றப்பட்டதால் அதிபர்களாவோர் தங்களைப் பௌத்தர்களாகக் காட்டிக் கொள்கின்றனர். நடந்த இந்தப் போர் தமிழ் மக்களுக்கு மட்டும் எதிரானதல்ல. கிறித்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் எதிரானது என்பதற்கான ஏராளமான ஆவண ஆதாரங்களும் பதிவுகளும் உள்ளன. மதத்திற்கு மதம் பிடிக்கும் போது அது மதவெறியாகிறது. வெறுப்பையும் பகைமையையும் கக்குகிறது. மதமும் அரசியலும் கூட்டு சேரும் போது சொந்த மக்களுக்கே வேட்டு வைக்கின்றன. நேர்மையற்ற அரசியல் சந்தர்ப்பவாதம் முளைக்கிறது.

இலங்கைக் கத்தோலிக்கத் திருஅவை இப்படித்தான் தனக்கு இழுக்கைத் தேடிக் கொண்டது. எண்ணற்ற சிங்களக் குருக்களும் சிங்கள ஆயர்களும் இலங்கையின் ஒட்டுமொத்த கத்தோலிக்கத் தலைவரான கொழும்பு பேராயரான ஆசுவால்டு கமிசும் சிங்கள அரசுக்குக் கொடிபிடிப்பவர்களாக இருப்பதிலிருந்து இவர்கள் மதவேடத்திலுள்ள கபடதாரிகள் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. தமிழ்க் கத்தோலிக்கக் குருக்கள் படுகொலை செய்யப்படுவதைப் பற்றி இவர்கள் வாய்திறப்பதில்லை. இலங்கை இராணுவம் யாழ்பாணத்திற்கருகிலுள்ள அல்லிப்பட்டி பங்குப் பணியாளர் சிம் பிரவுனைக் கொன்றபோது இவர்கள் வாய்மூடி அமைதி காத்தனர்.

மனித உரிமைகள் அமைப்பின் வடகிழக்குச் செயலகத்தின் தலைவரும் மாபெரும் மனித உரிமைப் போராளியுமான அருள்திரு. எம்.எக்சு.கருணாரத்னம் கொல்லப்பட்ட போதும் இவர்கள் பிலாத்துவைப் போன்று கைகழுவினார்கள். கிறித்தவ மக்களோடு மக்களாகப் பணிபுரியும் எண்ணற்ற குருக்கள் படுகொலை செய்யப்படும் போதெல்லாம் இவர்கள் அமைதி காத்தார்கள். நூற்றுக் கணக்கிலான கிறித்தவக் கோயில்கள் அழிக்கப்பட்டுள்ளன. இன்னும் ஏராளமான கோயில்கள் இடிபாடுகளுடன் நொறுங்கிய நிலையில் உள்ளன. இலங்கை கத்தோலிக்கக் கோயில்களிலேயே மிகவும் புகழ்வாய்ந்த மடு கோயில் தரைமட்டமாகியுள்ளது.

கிறித்தவப் பள்ளிகளும் மருத்துவமனைகளும் வீடுகளும் தகர்க்கப்படுகின்றன. உச்சியில் செஞ்சிலுவைக் கொடியைப் பறக்கவிட்டிருந்தும் உள்ளே குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சையளிக்கபட்டிருந்த நிலையிலும் அந்தக் கத்தோலிக்கச் சிலுவை மடம் குண்டுவீசியழிக்கப்பட்டது. யாழ்ப்பாணக் கத்தோலிக்க மறைமாவட்டத்தால் கிளிநொச்சியில் நடத்தப்படும் அனாதைகள், ஊனமுற்ற குழந்தைகளுக்கான கருணா நிலையமும் கிபிர் வானூர்திகளால் தரைமட்டமானது. அய்நாவும் அனைத்து நாடுகளும் கொடுக்கும் உணவும் மருந்தும் பட்டினியாலும் காயத்தாலும் பேரவதிப்படும் மக்களைச் சென்றடையாமல் தடுக்கப்படுகின்றன.

அப்பாவி மக்களுக்குத் தாங்களும் உதவுவதில்லை. உதவுவோரையும் உள்ளே நுழையவிடுவதில்லை. இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 26 மிகப் பெரும் இனப்படுகொலைகள் நடந்துள்ளன. அனைத்தும் நவ 2005ல், ராசபக்சே அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு நடந்துள்ளன. இது குறித்தெல்லாம் சிங்களக் கத்தோலிக்க மதவாதிகள் ஏன் எப்படி எதற்காக அமைதி காக்கின்றனர்? அக்கறையின்மையாலா? அரசியல்சந்தர்ப்பவாதத்தினாலா?

யேசு விரும்பிய அமைதி இதுதான் என்றெண்ணுகிறார்கள். இதுவல்ல இயேசு காட்டிய அமைதி. இது காட்டிக் கொடுத்த யூதாசும் கூட்டிக் கொடுத்த கைப்பாசும் கைகழுவிய பிலாத்துவும் கடைப்பிடித்த கடைசி நேரத்துக் கல்லறை அமைதி. உண்மைக்காக உயிர்துறந்த இயேசுவை இவர்கள் உதட்டளவில் மட்டுமே உச்சரிக்கிறார்கள். வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே! நீங்கள் கடவுளை வழிபடுவது வீணிலும் வீண் என்று இயேசு இவர்களைப் பற்றித்தான் குறிப்பிடுகிறார். தவறாகவும் தாறுமாறாகவும் தகவல் பரப்பும் சிங்கள அரசிடம் இவர்கள் நற்பெயர் வாங்கத் துடிக்கின்றனர். என்றைக்கு இவர்களின் மனசாட்சி செத்ததோ அன்றைக்கே இவர்களின் நம்பகத்தன்மையும் செத்துப் போனது. கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமையைத் தரைமட்டமாக்குவோர் இவர்களே. கொடிய, கொலைகார அடக்குமுறை அரசோடு இவர்கள் கொஞ்சிக் குலாவுவதால் திருஅவையின் நற்பெயர் வீழ்ச்சியடைகிறது.

இது கிறித்தவர்கள் அனைவருமே கவலைப்பட வேண்டியது. வெட்கப்பட வேண்டியது. மாட்டுத் தொழுவத்தில் பிறந்த இயேசுவை இவர்கள் கைவிட்டுவிட்டார்கள். கொல்லப்படும் குழந்தைகளை இவர்களால் குழந்தை இயேசுவாகக் காணமுடியாது. பிள்ளைகளையும் துணைவர்களையும் இழந்து அபலைகளான அன்னையர்களை இவர்களால் இலங்கையிலுள்ள அனைத்துக் கத்தோலிக்க மக்களின் நல்வாழ்விற்கும் பொறுப்பேற்றுள்ளவர்களின் நடத்தை கடும் கண்டனத்திற்கு ஆளாகிறது. இவர்களின் சிங்கள இனவெறி கிறித்தவ மனிதநேயத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டது.மரியாளாகப் பார்க்க முடியாது. கேவலமான அரசியல் ஆதாயங்களுக்காக யாரோடு கூட்டு சேரக்கூடாதோ அவர்களுடன் கூட்டு வைத்துள்ள இவர்களிடம் நீதியும் நேர்மையும் உண்மையும் தோற்றுப்போய்விட்டன.

மத் 6:5 ல் இயேசு ‘நீங்கள் வெளிவேடக்காரர்களைப் போல இருக்க வேண்டாம்’ என்று கூறியுள்ளதைப் பற்றியெல்லாம் இவர்களுக்குக் கவலையில்லை.

- முனைவர்.அருள்திரு.பிலிப் சுதாகர்,
மக்கள் தொடர்பியல் மையம்,
வளனார் வளாகம்,
திண்டுக்கல்.624001.
கை பேசி: 9442634209    Tags :    
சிங்களக் கத்தோலிக்க மதவாதிகள்........மதவேடத்திலுள்ள கபடதாரிகள் - முனைவர்.அருள்திரு.பிலிப் சுதாகர், சிங்களக் கத்தோலிக்க மதவாதிகள்........மதவேடத்திலுள்ள கபடதாரிகள் - முனைவர்.அருள்திரு.பிலிப் சுதாகர், சிங்களக் கத்தோலிக்க மதவாதிகள்........மதவேடத்திலுள்ள கபடதாரிகள் - முனைவர்.அருள்திரு.பிலிப் சுதாகர்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பணிவோம், உயர்வோம்!
பிறர் தவறு செய்தால், ஏன் இப்படி செய்தார் என்று சிந்தித்து நேரத்தை வீணாடிக்கக் கூடாது.சோர்வடைந்து காணப்படும் எவரையும் பார்த்து ஏன் உடல்நலம் சரியில்லையா? என்ன ஆயிற்று என்றெல்லாம் கேட்கக் கூடாது.பிறர், உங்களுக்குச் செய்யும் உதவிகளை மனதில் வைத்து நன்றி பாராட்டுங்கள்.யாரிடமும் சம்பளம்

மேலும்...

 மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்
எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் சந்தோஷத்தை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்பதைத் தான் நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை. அதனால் தான்  நமக்குள்ளேயே இருக்கிற சந்தோஷத்தை வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்எப்போதும் சந்தோஷமாக, சிரித்துக் கொண்டு

மேலும்...

 திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்
 எப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள் கூட திருமணத்திற்கு பிறகு சதை போட்டு விடுகிறார்கள்.ஏன் ஒரு பெண் திருமணம் ஆன பிறகு மட்டும் குண்டாகிறாள்? இதற்காக ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 10 வருடங்களாக

மேலும்...

 முதுமை பற்றிய பொன் மொழிகள்
மூப்பை வெல்ல உண்மையான வழி, உள்ளத்தின் இளமையை போற்றிப் பாதுகாப்பதே.முதுமை எய்துவது ஒரு கெட்டப் பழக்கம். வேலையில் முனைந்திருக்கும் மனிதனுக்கு அதற்கு அவகாசம் இல்லைஇலக்கியங்கள் இளமையில் உற்சாகத்தையும், முதுமையில் மகிழ்ச்சியும் கொடுக்கின்றன.முதுமையை முன்னிட்டு முன்னதாகச் செய்யும் பாதுகாப்புகளில் சிறந்தது கல்வி.வாழ்நாட்களின் இனிய

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in