tamilkurinji logo
 

பிரார்த்தனை (கவிதை),


பிரார்த்தனை (கவிதை)

First Published : Wednesday , 31st July 2013 05:52:20 AM
Last Updated : Wednesday , 31st July 2013 05:52:20 AM




Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

பிரார்த்தனை (கவிதை),




Kalam Kader

மனக்குளத்தில் தூசிகளாய்
.....மடிந்திருக்கும் வேளையிலே
கனக்குமந்தப் பாவமெலாம்
.....கழுவுகின்ற மாதமன்றோ?


உள்ளமென்னும் மணற்பரப்பில்
.....உலர்ந்துநிற்கும் குணச்செடிக்கு
வெள்ளமென்னும் அருளருவி
.....விழுந்திடவே இறைஞ்சுகிறேன்!


பொய்யொழித்துப் புறந்தள்ளிப்
.....பொல்லாங்குப் பேசாமல்
மெய்யடக்கி இருப்பதுதான்
.....மெய்யான நோன்பாகும்!


ஆயிரம் திங்களினும்
…ஆங்கோர் இரவினையே
பாயுமுன் ஆற்றலாகப்

…பாய்ச்சும் இறைவனேநீ!


எரிகின்ற நரகமின்றி
.....எம்மையும் விடுப்பாயா?
சொரிகின்ற அருளதனால்
சொர்க்கமும் தருவாயா?


பசிவந்தால் குணம்பத்தும்
.....பறந்திடுமாம் அத்தருணம்
பசிவந்தும் பக்குவத்தால்
.....பிறந்திடுமாம் நற்குணங்கள்!


ஷைத்தானை விலங்கிட்டுச்
.....சாதகமாய் நமக்காக
வைத்தானே இறைவன்தான்
.....வாழ்த்துகிறேன் அதற்காக!


தொழுகையின் வழியாகத்
.....தூயமனம் பெறுகின்றேன்
அழுகையின் வழியாக
.....ஆசைகளைத் துடைக்கின்றேன்!


கவனித்துப் பிழையறிந்து
...கண்களிடும் துளிகளெலாம்
சுவனத்தின் மரங்களுக்குச்
....சொந்தவிதை ஆகுவன!


அழுகின்றேன் அல்லாஹ்வே
.....அரவணைப்பாய் அர்ரஹீமே
தொழுகின்றேன் தூயோனே
.....துடைத்திடுவாய்த் தீங்குகளை!



    Tags :    
பிரார்த்தனை (கவிதை), பிரார்த்தனை (கவிதை), பிரார்த்தனை (கவிதை),
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 அம்மா.
நம்மை பெற்றெடுத்து பற்று வைத்தவள் நாளும் கண் விழித்து காவல் செய்தவள் அன்பு எனும் உளி கொண்டு அணு அணுவாய் செதுக்கியவள் கருணைக்கு என்றும் சாட்சியாய் அமைந்தவள் ஆரவாரம் ஏதுமின்றி ஆளுமையை காட்டுபவள். இரவுகளில் இன்னிசைத்து இறை உணர்வை ஊட்டியவள் வாழ்க்கை எனும் வானவில்லில் இயற்கையாய் வண்ணம் சேர்த்தவள் ஆனந்தம் மட்டுமே

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in