tamilkurinji logo


 

ஹஜ் எனும் அரும்பேறு ஓர் அருட்பேறுஹஜ் எனும் அரும்பேறு ஓர் அருட்பேறு,
ஹஜ் எனும் அரும்பேறு ஓர் அருட்பேறுஹஜ் எனும் அரும்பேறு ஓர் அருட்பேறு

First Published : Thursday , 25th October 2012 12:10:08 AM
Last Updated : Thursday , 25th October 2012 12:10:08 AM
ஹஜ் எனும் அரும்பேறு ஓர் அருட்பேறுஹஜ் எனும் அரும்பேறு ஓர் அருட்பேறு, இப்ராஹீம்(அலை) மூலம் விடுத்த அழைப்புக்கு

“லப்பைக்” திருச்சொல்லால் லட்சக் கணக்கானோர்

ஒப்பிலா னில்லத்தில் ஓதும் மறுமொழி

இப்புவி யெங்குமே ஈர்ப்பு.


சாந்தம் பொழியச் சமத்துவம் காணவே

காந்தமாய் ஈர்க்கும் கருவான பள்ளி

துருவான பாவம் துடைக்கும் பணிகள்

இரும்பு மனமே இலகு.


குழந்தையாம் இஸ்மாயில்(அலை) குத்திய பாதம்

உழன்றதால் பாலையில் உண்டான நீரை

அருந்துவோ ரெண்ணம் அடையும் பலன்கள்

மருந்தாம் பிணிக்கு மகிழ்ந்து.


மறுமையாம் தீர்ப்புநாள் மஹ்ஷரின் தோற்றம்

பொறுமையாய் நிற்கும் பொழுதில ரங்கேற்றம்

நீண்ட இறைஞ்சுதல் நெஞ்சை உருக்கிட

மீண்டு வருவோம் மிளிர்ந்து.

 
பிறக்கும் நிலையில் பிழைக ளறியா(து)

பிறக்கும் குழந்தைப் பிறத்தலைப் போல்

புடமிடும் தங்கமாய்ப் பூமியில் வாழ

திடமுடன் மாற்றும் திறன்,

 

அறுக்கத் துணிந்தார் அருமை மகனை

பொறுத்தே பணிந்தார் புதல்வர் மகிழ்வுடன்

ஐயம் களைந்த அடியாரின் அன்பினை

மெய்பிக்கச் செய்திடும் மாண்பு.

 

இறைச்சி இரத்த மெதுவுமே நம்மை

இறைவனும் வேண்டு மியல்பில் கிடையாது

அன்பு நிலைக்க அறமாய் வறியோர்கள்

இன்பம் பெறுவதற் கீந்து.

- ”கவியன்பன்” கலாம்    Tags :    
ஹஜ் எனும் அரும்பேறு ஓர் அருட்பேறுஹஜ் எனும் அரும்பேறு ஓர் அருட்பேறு, ஹஜ் எனும் அரும்பேறு ஓர் அருட்பேறுஹஜ் எனும் அரும்பேறு ஓர் அருட்பேறு, ஹஜ் எனும் அரும்பேறு ஓர் அருட்பேறுஹஜ் எனும் அரும்பேறு ஓர் அருட்பேறு,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கறுப்பும் வெள்ளையும் - ”கவியன்பன்” கலாம்
கருவறை இருட்டெனும் கறுப்பு;பயணிக்கும் உயிரணுவோ வெள்ளை!இருட்டும் வெள்ளையும் கலந்துபிறப்பது குழந்தை எனும் கவிதை!கரும்பலகையில்வெள்ளைக் கட்டியால்எழுதினாற்றானேபழுதின்றிப் பாடம் கற்கலாம்!கருமையையும் வெண்மையையும்பிரித்துக் காட்டும் வைகறைப்பொழுதில் எனக்கு ஓர் ஈர்ப்பு!இருட்டு அறியாமையைவெளிச்ச அறிவு வென்ற பின்னரும்அறியாமையும் அறிவும் கலந்துஐயமும் தெளிவும்ஐக்கியமாய் இருப்பதும் கண்கூடு!கல்லறையெனும் இருட்டறைக்குஅமல்கள் எனும்

மேலும்...

 ஏழு படிகள் ஏறு!
ஏழு படிகள் ஏறு! வாழும் கலைகள் கூறும் ஏழு படிகள் ஏறு! சூழும் வெற்றி ஓங்கும் தாழ்வு மனப்பான்மை நீங்கும் உடல் எனும் வீடு உன்னிடம் தூய்மை தேடும் அடித்தாலும் பிடித்தாலும் குடும்பம் நடித்தாலும் நகைத்தாலும் குடும்பம் மடித்தாலும் மடங்காத மரமே குடும்பம் வெடித்தாலும் விலகாத வேரே குடும்பம் கல்வி எனும் ஒளிச்சுடரும் பல்விதமாய் எங்கும் படரும் ஒருவர் பின்

மேலும்...

 குழந்தை எனும் கவிதை- ”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்
உயிரும் மெய்யும்கலந்திருக்கும்உன் புன்னகை மொழி ...!இசைக்கருவிகள்மழலை ஒலி முன்னேமண்டியிடுகின்றன!மலர்கள்இதழ்களை விரிக்கின்றனஉன் சுவாசத்தைஅவைகளின் வாசமாக்கிவசப்படுத்திக் கொள்ள..!அல்லும் பகலும்அழகூட்டும் உன் விழிகளால்விண்மீன்கள் வெட்கித்துத்தோல்வியை ஒப்புக்கொள்கின்றன..!கருவறையில் நீ பெற்றக்கதகதப்பை உன்னிடம்காற்றும் கடன் கேட்கும்விஞ்சும் பட்டு மேனியைக்கொஞ்சம் தொட்டுப் பார்க்கக்கெஞ்சும் மலர்த்தோட்ட்ம்!ப்ரசவத்தில் கதறினாள்உன் தாய்நீ பிறந்ததும் அவள்மீதுபட்ட

மேலும்...

 விடை தெரியாத வினா ! - ஸ்ரவாணி
மலர் முகம் துடைக்க வெண்பனி திவலைகளை சேகரம் செய்து தவலைகளில் கொணர்ந்தாய், தளிர்மேனி நீராட குற்றால ஐந்தருவி தன்னை களவாடி வந்து பொழிந்தாய் , அழகுடல் உடுத்த பட்டாடையில் உன் தங்க மனதை சேர்த்து தைத்து தந்தாய், அங்கம் முழுதும் மின்னும் தங்க அணிகலன்களாலே அலங்கரித்து அழகு பார்த்தாய் , பசி என்றதும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in