tamilkurinji logo
 

விரதம் என்றால் என்ன?விரதம் இருப்பதற்கான காரணம் என்ன?,

விரதம் என்றால் என்ன?விரதம் இருப்பதற்கான காரணம் என்ன?

First Published : Friday , 24th January 2014 01:02:05 AM
Last Updated : Friday , 24th January 2014 01:15:57 AM







விரதம் என்றால் என்ன?

ஒவ்வொரு மாதமும் நம் இந்து சமயத்தில் ஏதாவது ஒரு விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
விரதம் என்றால் நாம் நம் கடமைகளைக் குறைத்துக் கொண்டு, இன்றைக்கு இதைச் சாப்பிட மாட்டேன் – அதைச் சாப்பிட மாட்டேன் என்று கூறி மற்றவர்களை கஷ்டப்படுத்திக் கொண்டு, நமது ஆத்ம பலத்தை வீணாக்கிக் கொண்டு அவஸ்தைப்படுவது விரதம் இல்லை.

இந்திரியங்களை அடக்குவதே விரதத்தின் சிறப்பு. சோம்பேறியாக இருப்பவன் சதா படுத்துக் கொண்டே இருந்துவிட்டு நான் விரதம் இருக்கிறேன் என்று சொல்வதும் விரதம் இல்லை.
சிலர் முன்கோபிகளாக இருப்பார்கள். விரதம் இருக்கும் காலங்களில் “இங்கே ஒருத்தன் விரதம் இருக்கிறேன். கவனித்துப் பால், பழம் கொடுக்க யாருமில்லை” என்று கத்துவார்கள்.


கோபப்படுவதால் நம் ரத்தம் கொதிப்படைகிறது. அதை அடக்கவே நாம் விரதம் இருக்கிறோம்.
கோபப்பட்டு கத்திவிட்டு பால், பழம் அருந்துவது விரதம் இல்லை. அளவில்லாமல் எப்பொழுது வேண்டுமானாலும் உண்ணலாம். என்று உண்ணுபவர்களின் நலங்களைக் கருதியே உபவாசங்களும், விரதங்களும் ஏற்படுத்தப்பட்டன.

நாம் உண்ணும் உணவு நம் உடலுக்குச் சக்தியைக் கொடுக்கிறது. மனத்தையும் பண்படுத்தும் வகையில் உண்ண வேண்டும் என்றே நம் சாஸ்திரங்களும், மருத்துவமும் விஞ்ஞான சான்றுகளும் எடுத்துரைக்கின்றன.

நம்முடைய குண விஷேங்களை ரஜஸ்,ஸத்வம்,தமஸ் என்று மூன்று விதமாக பிரித்துப் சொல்லப்பட்டிருக்கிறது.


அதிகமான கோபத்தை உண்டு பண்ணும் குணம் ரஜோ குணம். சோம்பேறித்தனத்தை ஊக்குவிக்கும் குணம் தமோ குணம். இவை இரண்டையும் ஊக்குவிக்கும் ஆகாரங்களையும் நாம் ஒதுக்க வேண்டும்.


விரதம் என்று சொல்லப்படும் காலங்களில் சில உணவு வகைகளை நாம் ஒதுக்கிவிட வேண்டும். கொழுப்புச் சத்துக்கள் நிறைந்த மாமிசம், வெங்காயம், பூண்டு, மசாலா காரம் நிறைந்துள்ள உணவு வகைகளை நாம் விலக்கிவிட வேண்டும். இவை ரஜோ குணத்தைத் தூண்டி விடும்.
புளித்துப் போன நாட்பட்ட உணவு வகைகள் தமோ குணத்தையும் தூண்டுகின்றன.


மூன்றாவதாகச் சொல்லப்படுவது சாத்வீக உணவு வகைகள் ஆகும். சாத்வீக உணவு வகைகளுக்கு மாமிச கலப்பே ஆகாது. இந்த உணவு வகைகளை உட்கொள்பவர்களுக்கு எந்தெந்த குணங்கள் இருக்கும்?

ரஜோ, தமோ குணத்தையும் தூண்டாத உணவுகள் சாத்வீக உணவுகள் தான். வேகத்திற்கு பதிலாக விவேகத்தையும், கோப குணத்திற்கு பதிலாக சிந்தனையும் சோம்பலுக்குப் பதிலாக சுறுசுறுப்பான செயலாற்றும் திறனையும் கொடுக்கும் என்பது நிச்சயம்.




    Tags :    
விரதம் என்றால் என்ன?விரதம் இருப்பதற்கான காரணம் என்ன?, விரதம் என்றால் என்ன?விரதம் இருப்பதற்கான காரணம் என்ன?, விரதம் என்றால் என்ன?விரதம் இருப்பதற்கான காரணம் என்ன?,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்
 எப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள் கூட திருமணத்திற்கு பிறகு சதை போட்டு விடுகிறார்கள்.ஏன் ஒரு பெண் திருமணம் ஆன பிறகு மட்டும் குண்டாகிறாள்? இதற்காக ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 10 வருடங்களாக

மேலும்...

 தீபாவளி --- சிந்தனைக்குச் சில வினாக்கள்!!
இரண்யாட்சதன் பூமியை பாயாகச் சுருட்டினான் என்றால், பக்தத் தமிழா! அந்தப் பூமி தமிழ்நாடு மட்டுமா? அல்லது ஆந்திரா, கேரளா, கருநாடகம் இணைந்த திராவிட நாடு மட்டுமா? அல்லது அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இணைந்த பாரத புண்ணிய பூமியாம் இந்திய நாடு

மேலும்...

 வீட்டு மனை வாங்குபவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டியவை
தற்போது கிராமப்புறங்களில் விளைநிலங்கள் அழிக்கப்பட்டு வீட்டுமனைகளாக  மாற்றப்படுகின்றன. ஆனால், எந்த வீட்டு மனையாக இருந்தாலும் ஆரம்பத்திலேயே உள்ளூர் திட்டக்குழுமம் அல்லது நகரமைப்பு  விதிமுறைகளுக்குட்பட்டும், அனுமதி பெற்றும் கட்டப்பட்டுள்ளதாக என்பதை உறுதி செய்து கொண்டால் எதிர்காலத்தில் எந்த சிக்கலும் ஏற்படாது.பஞ்சாயத்தில் போடப்படும் எந்த

மேலும்...

 தம்பதிகள் விவாகரத்துக்கு முக்கிய காரணமாக இருப்பது எது?
இனிமையாக வாழ்க்கையை தொடங்கும் தம்பதியர் கொஞ்ச நாளிலேயே திருமணத்தை முறித்து விவாகரத்து பெறுகிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது என்ன? என்பது குறித்து இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அமைப்பு ஆராய்ந்தது. இதற்கு 3 முக்கிய காரணங்கள் இருப்பது தெரியவந்தது. இதில் வெளியான

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in