tamilkurinji logo


 

ரத்தம் சரணம் - K.R.P.செந்தில்,
ரத்தம் சரணம் - K.R.P.செந்தில்

First Published : Saturday , 7th February 2009 06:59:11 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM
Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

ரத்தம் சரணம் - K.R.P.செந்தில், இலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் பவுத்த பிக்குகளை அனுசரிக்காமல் ஆட்சி நடத்த முடியாது. தற்போது நடந்துகொண்டிருக்கும் நான்காம் ஈழப்போரில் கொல்லப்படுவது, விடுதலைப்புலிகளோடு, அப்பாவி தமிழர்கள் மட்டுமல்லாது, பெருமளவில் ராணுவத்தினரும்தான், இதில் உடல் உறுப்புகளை இழந்தவர்கள் கணக்கில் அடங்காதவர்கள்,இந்தியாவில் பிறந்த புத்தரின் கொள்கைகள் இந்தியாவில் பரவவில்லை ஆனால் சீனா, தாய்லாந்து, இலங்கை, கம்போடியா, ஜப்பான் போன்ற நாடுகளில் முழுதுமாக பரவியது, அன்பையும், அஹிம்சையையும் போதித்த புத்தரின் வழிவந்தவர்கள் கொல்லுவதை தர்மமாக செய்கிறார்கள்.மேலும் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானுக்கு ஆதரவாக இலங்கை இருந்ததால் தற்போது ஜப்பான் பெரும் அளவில் பொருளாதார உதவிகளை செய்கிறது, மற்றொரு புவுத்த நாடான சீனாவோ ஆசிய பிராந்திய வல்லரசாக தன்னை காட்டும் முயற்சியில் இந்தியாவிற்கு போட்டியாக ராணுவ உதவிகளை செய்கிறது, கொன்றொழித்தல் சேவை செய்யும் புத்தம் இல்லாது போகட்டும்..

ஈழத்தின் ஐம்பது வருட போராட்டத்தில் இந்தியாவின் பங்கு மாறி மாறி முடிவெடுக்க வைத்திருக்கிறது,புலிகளை வளர்த்துவிட்ட இந்தியாவின் ராவே தற்போது இலங்கை ராணுவத்துக்கு மூளையாக செயல்படுகிறது,இந்தியாவை பொறுத்தவரை ஆட்சியாளர்களை பொறுத்துதான் நிலைமை,

பி.ஜெ.பி யின் சென்ற ஆட்சியின்போது ஜார்ஜ் பெர்னான்டஸ் அமைச்சராக இருந்தார் அவர் புலிகளின் ஆதரவாளர் அதனால் இலங்கை அரசாங்கத்தால் இந்தியாவின் உதவியை முடியவில்லை, அந்த சமயம்தான் இலங்கை அரசாங்கம் சீனா, மற்றும் பாகிஸ்தான் ஆதரவு நிலை எடுத்தது .

தற்சமயம் சோனியாவின் ஆசிர்வாதத்தோடு இந்திய இராணுவம் புலிகளை அழிப்பதாக சொல்லிக்கொண்டு அப்பாவி தமிழர்களையும் சேர்த்தே அழிக்கிறது.இந்தியாவின் வெளியுறவு செயலர் மேனன் மற்றும் ராணுவ அமைச்சர் எ.கே.அந்தோனி இருவரும் மலையாளிகள், அவர்களை பொறுத்தவரை தமிழன் தனி நாடு அடைந்துவிடக்கூடாது என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

தன்மானத்தலைவன் , தமிழின காவலன் என்று அடிவருடிகளால் வர்ணிக்கபடுகிற கருணாநிதி தன் ஆட்சியை காப்பாற்றுவதிலேயே குறியாக இருக்கிறார். மருத்துவர் மகனின் மந்திரிபதவி வேண்டும் அதே சமயம் தமிழனின் ஆதரவும் வேண்டும் என இரட்டை வேடம் போடுகிறார்.

திருமாவும் , வைகோவும் , நெடுமாறன் அய்யாவும் இல்லையென்றால் இங்கே சொரணைகெட்ட எந்த தமிழனும் குரல் கொடுக்கமாட்டான்.

தமிழக கிராமங்களில் இன்னும் வெள்ளநிவாரணம் வழங்கப்படுவதால் . கழக கண்மணிகளுக்கும் மற்றும் மாற்று கட்சியினரும் கவனிக்கபடுவதால் எல்லோருக்கும் அதைப்பற்றித்தான் பேச்சு, நாளிதழ் படிக்கும் வழக்கொழிந்து போன கிராமங்களில், தொலைக்காட்சி மட்டுமே பார்க்கும் கிராம மக்களுக்கு இலங்கையின் உண்மையான நிலவரம் தெரியாமல் போய்விட்டது, எந்த ஊடகமும் தமிழின அழிப்பை மக்களுக்கு எடுத்துசெல்லவில்லை. எந்த மக்களின் பணத்தில் தின்று கொழிக்கிறார்களோ, அதே இன மக்களின்அழித்தொழிப்பிற்கு நாமே உதவுவது எந்த விதத்தில் சரியாகும்?

இதனால் கிராமத்து மக்களுக்கு எதுவுமே சரியாக போய்சேரவில்லை, அவர்களும் அரசாங்கம் சில ஆயிரங்களுக்காக தங்களது பெருத்த மறந்து, அரசாங்க மதுகடைக்களில் வாங்கிய பணத்தை செலவழித்துவிட்டு, அடுத்த கடன் தள்ளுபடிக்கு எதிர்பார்த்துக்கொண்டு, ஒரு ரூபாய் அரிசியில் காலம் தள்ளுகின்றனர். ஆனால் ஆரம்பகட்ட போராளிகளின் பயிற்சிகள் கிராம மக்களாலே முன்னெடுத்து செல்லப்பட்டது, போராளிகளின் பயிற்சிக்கு தேவையான இடம் கொடுத்து , மேலும் உணவு வசதிகளையும் அவர்களே செய்து கொடுத்தனர், ஈழபோராட்டத்தில் ஆரம்பகட்ட நிதி கிராம மக்களிடம் இருந்தே திரட்டப்பட்டது

ஆனால் இப்போதோ முன்னேடுத்துசெல்லக்கூடிய அரசியல் கட்சிகள் சோனியாவின் முந்தானைக்குள் ஒளிந்துகொண்டதால் யாருக்கும் அக்கறை இல்லை, என்னைபோல் இணையத்தில் தன் ஆதங்கத்தை எழுதும் நண்பர்களை, கேலி செய்யும் கூட்டமொன்று இருப்பது இன்னும் வேதனை, எம்மைபொறுத்தவரை உயிர் எல்லோருக்கும் பொதுவானது, அது சிங்களனோ, தமிழனோ, காசா இஸ்லாமியனோ எல்லோருடைய உயிரும் ஒன்றுதான்,

இந்த பரந்த உலகத்தில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும்.

புத்தம் தழைத்த ஊரில் செய்வார்களா?

- K.R.P.செந்தில்

இக்கட்டுரை பற்றிய தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய : வாசகர் கருத்து    Tags :    
ரத்தம் சரணம் - K.R.P.செந்தில், ரத்தம் சரணம் - K.R.P.செந்தில், ரத்தம் சரணம் - K.R.P.செந்தில்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பணிவோம், உயர்வோம்!
பிறர் தவறு செய்தால், ஏன் இப்படி செய்தார் என்று சிந்தித்து நேரத்தை வீணாடிக்கக் கூடாது.சோர்வடைந்து காணப்படும் எவரையும் பார்த்து ஏன் உடல்நலம் சரியில்லையா? என்ன ஆயிற்று என்றெல்லாம் கேட்கக் கூடாது.பிறர், உங்களுக்குச் செய்யும் உதவிகளை மனதில் வைத்து நன்றி பாராட்டுங்கள்.யாரிடமும் சம்பளம்

மேலும்...

 மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்
எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் சந்தோஷத்தை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்பதைத் தான் நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை. அதனால் தான்  நமக்குள்ளேயே இருக்கிற சந்தோஷத்தை வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்எப்போதும் சந்தோஷமாக, சிரித்துக் கொண்டு

மேலும்...

 திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்
 எப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள் கூட திருமணத்திற்கு பிறகு சதை போட்டு விடுகிறார்கள்.ஏன் ஒரு பெண் திருமணம் ஆன பிறகு மட்டும் குண்டாகிறாள்? இதற்காக ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 10 வருடங்களாக

மேலும்...

 முதுமை பற்றிய பொன் மொழிகள்
மூப்பை வெல்ல உண்மையான வழி, உள்ளத்தின் இளமையை போற்றிப் பாதுகாப்பதே.முதுமை எய்துவது ஒரு கெட்டப் பழக்கம். வேலையில் முனைந்திருக்கும் மனிதனுக்கு அதற்கு அவகாசம் இல்லைஇலக்கியங்கள் இளமையில் உற்சாகத்தையும், முதுமையில் மகிழ்ச்சியும் கொடுக்கின்றன.முதுமையை முன்னிட்டு முன்னதாகச் செய்யும் பாதுகாப்புகளில் சிறந்தது கல்வி.வாழ்நாட்களின் இனிய

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in