tamilkurinji logo


 

முல்லை பெரியாறு...நமக்குத் தெரிய வேண்டிய சில செய்திகள்.. ,
முல்லை பெரியாறு...நமக்குத் தெரிய வேண்டிய சில செய்திகள்..

First Published : Wednesday , 7th December 2011 02:49:56 PM
Last Updated : Wednesday , 7th December 2011 03:38:41 PM
முல்லை பெரியாறு...நமக்குத் தெரிய வேண்டிய சில செய்திகள்.. , 1800ஆம் ஆண்டு தொடக்கம்.பருவ மழை பொய்த்து..தமிழகத்தில் வறட்சி.இதை ஆங்கில அரசு ஆய்வு செய்தது.நீர் ஆதாரங்களைப் பெருக்க எண்ணியது.கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் பல ஆறுகள் மேற்கு நோக்கி ஓடி கடலில் கலப்பது கண்டறியப்பட்டது.அப்பகுதியில் அணையைக் கட்டி தண்ணீரை தமிழகத்தில் திருப்புவதன் மூலம் தேனி,மதுரை,திண்டுக்கல்,சிவகங்கை,ராமனாதபுரம் மாவட்டங்களில் வறட்சியை விரட்டலாம் என ஆங்கில அரசு முடிவெடுத்தது.

27 ஆண்டுகள் கழித்து திட்ட அறிக்கை தயாரானது.பின்னரும் 23 ஆண்டுகள் கழித்து முல்லை பெரியாறுக்கு இடையே அணை கட்டும் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்தது.

பென்னிகுக் என்னும் ஆங்கில பொறியாளர் 1874ல் அணை கட்டும் பொறுப்பை ஏற்றார்.ஆண்டுக்கு 4290 மி.மீ மழை பெய்யும் அடர்ந்த வனப்பகுதியில், கடும் குளிரில் வன விலங்குகள் நிறைந்த இடத்தில்..பல இன்னல்கள்,உயிர் இழப்புகள் இடையே கட்டுமானப்பணி துவங்கியது.இந்நிலையில் 1890 ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அணையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது.அப்போது ஆங்கில அரசு..இதற்கு மேல் பணம் செலவிட முடியாது என அணை கட்டும் பணியை நிறுத்தச் சொன்னது.ஆனால் பல இழப்புகள் இடையே நடைபெற்ற பணியை பாதியில் நிறுத்த விரும்பவில்லை.உடன் இங்கிலாந்தில் இருந்த தனது மற்றும் மனைவியுடையதுமான சொத்துகளை விற்று பெர்ந்தொகையைத் திரட்டி அணையைக் கட்டி முடித்தார்.

சுட்ட செங்கள்,இஞ்சி,கடுக்காய்,கருப்பட்டி, தேக்கு மரப்பட்டை என்னும் பொருள்களால் அணை கட்டப்பட்டது.165 அடி உயரமுள்ள அணையின் நீளம் 1241 அடி.நீர்த்தேக்க உயரம் 155 அடியாக உயர்த்தப்பட்டு..அலைகளால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக 152 அடியாக உறுதி செய்யப்பட்டது.அணையில் எப்போதும் 104 அடி தண்ணீர் தேங்கியிருக்க வேண்டும்.அதற்கு மேல்..அதாவது 48 அடி தண்ணீர் தமிழகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.(தமிழகத்திற்கு 8080 மில்லியன் கன அடி.)இதன் மூலம் இரண்டு லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெற்றது.கிட்டத்தட்ட ஒரு கோடி மக்கள் பயன் பெற்றனர்..

பெரியாறு அணை 1895 ஆம் ஆண்டு அக்டோபர் பத்தாம் நாள் முதல் 999 ஆண்டுகளுக்கு தமிழகம் அணையை முழுமையாய் பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தம்..இந்திய கவுன்சில் செக்ரட்டரியேட்டும்..திருவாங்கூர் சமஸ்தானமிடையே கையெழுத்தானது.

ஒப்பந்தபடி தமிழகம் நீர் பாசனம்,மின் உற்பத்திக்கான செயல்பாடுகளை செய்து கொள்ளலாம்.போக்குவரத்தின் முழு உரிமையும் தமிழகத்திற்கு சொந்தம்.மேலும் நீர் பிடிப்புப் பகுதிக்கான 597.77 சதுர கிலோமீட்டருக்கு 40000 ரூபாயை ஆண்டொன்றிற்கு கேரளாவிற்கு தமிழகம் கொடுத்து வந்துள்ளது.
1960 ஆம் ஆண்டிலிருந்து இத் தொகை 2 லட்சத்து 57 ஆயிரமாக ஆகி உள்ளது.

1975 ஆம் ஆண்டு 70 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இடுக்கி அணையை கேரளா கட்டியது.இடுக்கி அணைக்கு போதிய தண்ணீர் இல்லாததால் அதன் கவனம் முல்லை பெரியாறு பக்கம் திரும்ப..பெரியாறு அணை பலவீனம் அடைந்து விட்டதாகவும்..நீர்க்கசிவு என்றும்..அணை உடைந்தால் மூன்று மாவட்டங்கள் அழிந்துவிடும் என்றும் பிரச்னை துவக்கப்பட்டது.

1945 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் அணை பலப்படுத்தப் பட்டுள்ளது.கடந்த ஒரு நூற்றாண்டில் 30 முறை நில அதிர்வு ஏற்பட்டது.3.7 ரிக்டர் அளவே..ஆனால் அணையில் விரிசலோ, கசிவோ இல்லை.அப்படியே அவர்களின் கூற்றுபடி..அணை உடைந்தாலும்..அணையிலிருந்து 15 டிஎம்சி தண்ணீரே வெளியேறும்.அது காட்டுப்பாதை வழியாக இடுக்கிக்கு சென்றுவிடும்..70 டிஎம்சி கொள்ளளவு உள்ள இடுக்கி அணை இந் நீரை ஏற்றுக்கொள்ளும்.ஆகவே எந்த பாதிப்பும் இல்லை.

இதைவிட நகைச்சுவையான வாதம்..அணை உடைந்தால் மூன்று மாவட்டங்கள் மூழ்கிவிடும் என்பதும்..பெரியாறு அணையின் கடல்மட்ட உயரம் 2869 அடி.நீரில் மூழ்கிவிடும் என்று சொல்லப்படும் இடங்கள் கடல் மட்டத்திலிருந்து 3500 அடிகளுக்குக்கு மேல் உயரத்தில் உள்ளவை.தண்ணீர் எதிர்திசையில் அல்லது மேல் நோக்கி சென்று பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இயற்பியலுக்கும்,அறிவியலுக்கும் முரணான வாதம்.

152 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கலாம் என தமிழக, கேரள அதிகாரிகளும் உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்தும்..கேரள அரசு அதை ஏற்கவில்லை.இதனால் தமிழகத்திற்கு கடந்த 25 ஆண்டுகளில் 3000 கோடிகளுக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

http://tvrk.blogspot.com/        Tags :    
முல்லை பெரியாறு...நமக்குத் தெரிய வேண்டிய சில செய்திகள்.. , முல்லை பெரியாறு...நமக்குத் தெரிய வேண்டிய சில செய்திகள்.. , முல்லை பெரியாறு...நமக்குத் தெரிய வேண்டிய சில செய்திகள்.. ,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பணிவோம், உயர்வோம்!
பிறர் தவறு செய்தால், ஏன் இப்படி செய்தார் என்று சிந்தித்து நேரத்தை வீணாடிக்கக் கூடாது.சோர்வடைந்து காணப்படும் எவரையும் பார்த்து ஏன் உடல்நலம் சரியில்லையா? என்ன ஆயிற்று என்றெல்லாம் கேட்கக் கூடாது.பிறர், உங்களுக்குச் செய்யும் உதவிகளை மனதில் வைத்து நன்றி பாராட்டுங்கள்.யாரிடமும் சம்பளம்

மேலும்...

 மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்
எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் சந்தோஷத்தை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்பதைத் தான் நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை. அதனால் தான்  நமக்குள்ளேயே இருக்கிற சந்தோஷத்தை வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்எப்போதும் சந்தோஷமாக, சிரித்துக் கொண்டு

மேலும்...

 திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்
 எப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள் கூட திருமணத்திற்கு பிறகு சதை போட்டு விடுகிறார்கள்.ஏன் ஒரு பெண் திருமணம் ஆன பிறகு மட்டும் குண்டாகிறாள்? இதற்காக ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 10 வருடங்களாக

மேலும்...

 முதுமை பற்றிய பொன் மொழிகள்
மூப்பை வெல்ல உண்மையான வழி, உள்ளத்தின் இளமையை போற்றிப் பாதுகாப்பதே.முதுமை எய்துவது ஒரு கெட்டப் பழக்கம். வேலையில் முனைந்திருக்கும் மனிதனுக்கு அதற்கு அவகாசம் இல்லைஇலக்கியங்கள் இளமையில் உற்சாகத்தையும், முதுமையில் மகிழ்ச்சியும் கொடுக்கின்றன.முதுமையை முன்னிட்டு முன்னதாகச் செய்யும் பாதுகாப்புகளில் சிறந்தது கல்வி.வாழ்நாட்களின் இனிய

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in