tamilkurinji logo
 

முதல் முறையாய் - தாரணி பிரியா,


முதல் முறையாய் - தாரணி பிரியா

First Published : Monday , 9th February 2009 11:48:11 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM







பொழுது போகமா என்ன செய்யறதுன்னு நேத்து மதியம் யோசிச்சுகிட்டு இருக்கும்போதுதான் வடிவுக்கிட்ட இருந்து போன் வந்தது. நமக்குதான் போன் எடுத்தா கீழ வெக்கற பழக்கமே கிடையாது. அரசியல் பொது கூட்டம் மாதிரி விஷயமே இல்லாம பேசி முடிச்சுட்டு போனை வெச்சப்ப முழுசா மூணு மணி நேரம் முடிஞ்சு போய் இருந்தது.. நாங்க முணு பேரும் முதல் முதலா காலேஜ்க்கு போனது பத்தி எல்லாம் பேசினோம்.

நான், உஷா, வடிவு மூணுபேருமே நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவங்கதான். அதனால நிறைய மார்க் எல்லாம் எடுத்து டாக்டர் சீட் எல்லாம் வாங்கி அதுக்கு பீஸ் எல்லாம் கட்டி எங்களை பெத்தவங்களை எல்லாம் சிரமப்படுத்த கூடாதுன்னு முடிவு செஞ்சு அளவா எல்லாத்திலும் பாஸ் மார்க் மட்டுமே எடுத்து இருந்தோம். நானும் உஷாவும் ஒரே காலேஜ். வடிவை இந்த தடவையாவது திருத்திடணுமின்னு அவங்க வீட்டுல முடிவு செஞ்சதால அவ வேற காலேஜ். நானும் உஷாவும் பி.எஸ்சி. வேதியியல், வடிவு பி.எஸ்சி கணக்கு.

மொத நாள் காலேஜ்க்கு போறோம். புதுசா லாங்சைஸ் நோட்டு எல்லாம் வாங்கி அதுல பேர் கிளாஸ் எல்லாம் எழுதியாச்சு. மொத நாளு காலேஜ் மதியமே விட்டுட்டாங்க. திரும்ப வரும்போது வடிவு வீட்டுக்கு போனோம். அங்க அவ பேப்பர்ல B.Sc., அப்படின்னு திரும்ப திரும்ப எழுதிகிட்டு இருந்தா.

“ஏன்டி இந்த பொழப்பு கெட்ட பொழப்பு, இதைத்தானே அடுத்த மூணு வருசமும் படிக்க போற. அப்ப ஆசை தீர எல்லா நோட்டு புக்லயும் எழுத வேண்டியதுதானே", அப்படின்னு கேட்டதுக்கு என்னையும் உஷாவையும் முறைச்சுகிட்டே அவளோட லாங்சைஸ் நோட்டை எடுத்து காட்டினா.

அதுல நாந்தான் அவளுக்கு பேர் எழுதிக்குடுத்து இருந்தேன். S.Vadivukkarasi,B.S.C Mathematics அப்படின்னு என்னோட பொன்னான கையெழுத்துல எழுதி இருந்ததை காட்டி இதனாலதான் அப்படின்னா. இதுக்கும் நீ இப்படி நிறைய‌ தடவை எழுதறதுக்கும் என்னடி சம்பந்தம் நான் கேட்க, பி.எஸ்சி அப்படின்றதை B.Sc., இப்படித்தான் எழுதணுமாம். B.S.C இப்படி பேட்டா செருப்புலதான் எழுதுவாங்க. இது கூட தெரியாம நீ என்னத்தை படிச்சு கிழிக்க போறேன்னு அப்படின்னு என்னோட சீனியர்ஸ் எல்லாம் கேள்வி கேட்டுட்டு B.Sc., இதை 1000 தடவை எழுதிகிட்டு வர சொல்லி இருக்காங்க அப்படின்னு சொன்னா.

பாத்தா பாவமாதான் இருந்தது. நானும் முன்ன பின்ன என்ன காலேஜ்கா போயி இருக்கேன். இப்படித்தான் எழுதணுமின்னு நினைச்சேன். சாரிடி சொல்லிட்டு உடனே எங்க வீட்டுக்கு கிளம்பினவதான். அடுத்த ஒரு வாரம் அவ வீட்டு பக்கம் தலை வெச்சு கூட படுக்கலை :). அப்புறம் என்னோட நோட்டுலயும் உஷா நோட்டுலயும் B.Sc.,அப்படின்னு கரெக்டா மாத்திகிட்டோமில்ல :)

டிஸ்கி : வழக்கம் போல என்ன தலைப்பு வெக்கறதுன்னு தெரியாம வெச்ச தலைப்பு. அதனால தலைப்புக்கும் பதிவுக்கும் இன்னா சம்பந்தமுன்னு யாரும் கேட்காதீங்க

இவரது மற்ற பதிவுகளைக் காண :ஊஞ்சல்



    Tags :    
முதல் முறையாய்  - தாரணி பிரியா, முதல் முறையாய்  - தாரணி பிரியா, முதல் முறையாய்  - தாரணி பிரியா,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கேமரா முன்பு குழந்தை பெற்ற ஸ்வேதா மேனன் - வீடியோ
கேமரா முன்பு குழந்தை பெற்ற ஸ்வேதா மேனன் - வீடியோ பார்க்க இங்கே கிளிக்கவும்

மேலும்...

 ஹிந்து பத்திரிக்கையில் என்னை பாராட்டி வந்தக்கட்டுரை
இன்று ஹிந்து பத்திரிக்கையில் என்னைப்பற்றி ஒரு கட்டுரை வந்துள்ளது. காரணம் உலகசினிமா. ஆயிரக்கணக்கான சதுர அடியில் ஆடம்பரமான உள் அலங்காரங்கள் எதுவுமின்றி ஒரு பொட்டிக்கடை போன்று பத்துக்கு பத்தில் கடை நடத்தி வரும் எனக்கு இவ்வளவு பெரிய பாராட்டா !!!!!!!!!!!!!!!!! நான் ஒரு கதை சொல்லி. என்னிடம்

மேலும்...

 அன்புள்ள இயக்குனர் பாலா அவர்களுக்கு…
அன்புள்ள இயக்குனர் பாலா அவர்களுக்கு, உங்களின் படங்களை எப்போதும் ஆவலுடன் எதிர்பார்த்து ரசிக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவன். நான் அதிகம் ரசிக்கும் தலைவர் படத்திற்கு அடுத்த படியாக இருக்கும் படங்கள் உங்கள் படங்கள் தான். எப்போது உங்கள் படம் அறிவிப்பு வந்தாலும்

மேலும்...

 விந்துக்குள் விந்தை - நிலா மலர்கள்
இறைவனுடைய படைப்பில் எல்லாமே அதிஅற்புதமும் விந்தைகளும் நிறைந்தது, அதில் விந்து ஒரு விந்தையானது, இதைத்தான் இறைவன் கூறுகிறான் உன் பிறப்பை பற்றி நீ சிந்தித்தால் என்னைப் பற்றி அறிந்துக் கொள்வாய் என்று கூறுகிறான். இதில் ஆழமான அர்த்தம் உள்ளது.மனிதன் செழுத்தும் ஒரு சொட்டு விந்தில் பல்லாயிரக் கணக்கான

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in