tamilkurinji logo


 

மாற்றத்தை உணராத மடையர்களா ஆண்கள்?,




மாற்றத்தை உணராத மடையர்களா ஆண்கள்?

First Published : Monday , 13th February 2012 09:35:18 PM
Last Updated : Monday , 13th February 2012 09:35:18 PM




மாற்றத்தை உணராத மடையர்களா ஆண்கள்?, மாற்றத்தை உணராத மடையர்களா ஆண்கள்? ஆம் என்கிறது ஒரு சர்வே ரிப்போர்ட்.

உலகம் தோன்றிய நாள் முதலாக, ஆண்களிடம் குற்றங்கண்டுபிடிப்பதே பெண்களின் வேலை என்றாகிவிட்டது. இதை லண்டனில் ஒரு நிறுவனம் 2 ஆயிரம் பெண்களைப் பேட்டி கண்டு அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது.

அப்படி என்ன புதிய குறையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்?
 
வீட்டின் உள் அலங்காரத்திலோ அறைகலன்களிலோ (Furniture), சுவர் சித்திரங்களிலோ ஏதாவது மாற்றம் செய்தால் அதை ஆண்கள் கண்டுபிடிப்பதே இல்லையாம்!
 
அப்படியே கண்டுகொண்டாலும் அதை வெளிக்காட்டிக்கொள்வதில்லையாம்; அப்படியே மாற்றத்தைச் சுட்டிக்காட்டி கேட்டாலும், பாராட்டி 4 வார்த்தை பேசுவதில்லையாம்.
 
குற்றப்பத்திரிகை இத்தோடு முடிந்ததா என்றால் இல்லை - அப்படியே ஒரு வேளை மாற்றத்தைத் தெரிந்துகொண்டாலும் எரிந்து விழுகிறார்களாம் சிடுமூஞ்சி ஆண்கள்.
 
சரி, இந்த சர்வேயில் பாராட்டே கிடையாதா என்றால் உண்டு. ஆனால் பாராட்டு அம்மணிகளின் அம்மாக்களுக்குத்தான்.
 
ஆம், எந்த வீட்டில் என்ன மாற்றம் செய்தாலும் அந்தப் பெண்ணுடைய அம்மாக்கள் வீட்டுக்குள் நுழைந்ததுமே கண்டுபிடித்துவிடுகிறார்களாம். (மாமியார்களும் கண்டுபிடிப்பார்கள், ஆனால் அது மிகப்பெரிய சண்டையில் முடியும் என்பதால் சர்வே நிறுவனம் எச்சரிக்கையாக அதைக் கேட்கவேயில்லை.)
 
"இந்த மஜந்தா கலர் திரைச்சீலை வாங்கினாயா? அல்லது உங்க வீட்டுக்காரருடைய பழைய வேட்டியா?" (மஜந்தா கலர் - மருமகன் வேட்டி அவ்வளோ அழுக்கு) என்று அம்மாக்கள் சட்டென்று கேட்டுவிடுகிறார்களாம். அதோடு நிற்பதில்லை; ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய புடவையை பழைய பாத்திரக்காரரிடம் 40 ரூபாய்க்கு போட்டு, கூடவே 300 கொடுத்து கை துடைக்கிற டவல் வாங்கிய சாமர்த்தியத்தையும் பாராட்டி விடுகிறார்களாம்.
 
பாவம் ஆண்கள் - அசடு, அசமஞ்சம், மாற்றத்தை உணரத் தெரியாத ஜடம், ரசிக்கத் தெரியாத ஜந்து, சிரிக்க மறந்த பிராணி, பாராட்டும் பரந்த மனதில்லாத ஜென்மம் என்றெல்லாம் பட்டம் வேறு வாங்க வேண்டியிருக்கிறது.
 
காலம் பூராவும் பெண்களிடம் ஏச்சு வாங்கவே பிறந்ததுதான் ஆண்களின் தலைவிதிபோலும்!



    Tags :    
மாற்றத்தை உணராத மடையர்களா ஆண்கள்?, மாற்றத்தை உணராத மடையர்களா ஆண்கள்?, மாற்றத்தை உணராத மடையர்களா ஆண்கள்?,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in