tamilkurinji logo


 

மழையில் பள்ளிக்குச் செல்லும் மாணவி! - -”கவியன்பன்” கலாம்,Tamil kavithai

Tamil,kavithai




மழையில் பள்ளிக்குச் செல்லும் மாணவி! - -”கவியன்பன்” கலாம்

First Published : Monday , 14th January 2013 10:47:01 PM
Last Updated : Monday , 14th January 2013 10:47:01 PM




மழையில் பள்ளிக்குச் செல்லும் மாணவி! - -”கவியன்பன்” கலாம்,Tamil kavithai நடுத்தெருவின்
நடுத்தெருவில்
நற்றளிர் நடை
நடுங்கும் கையில் குடை

பிஞ்சுக் கையில்
மஞ்சள் பையில்
புத்தகம் யாவும்
மொத்தமாய் நனைய
குடையின் பிடிதளர
நடை வேகமாய்
உடை நனைந்த
மழைக்காலம்
மனத்தினில்
கனாக்காலம்

விடாமுயற்சியின் விடியல்
விடாமழையிலும் குடையில்!

தடையிலாப் பயணம்
நடையிலே கவனம்!

படிப்பில் தீவிரம்
துடிப்பில் தெரியும்!

பாடம் படிக்கும்
இச்சிறுமி
பாடம் கற்பிக்கும்
ஆசிரியையாய்

“மழையென்று சொல்லி
மடிதல்;
பிழையென்று சொல்லிப்
படிப்பிக்கும்”

வாழ்த்துகிறேன் உன்னையும்
வளர்த்தெடுத்த பெற்றோரையும்
கற்பித்த ஆசிரியையும்

சோம்பல் என்னும்
சாம்பல் போக்கித்
திறமைத் தீயைத்
திறம்படத் தூண்டும்
வேகம் உன்றன் நடையில்!

இப்படித்தான்


இடியாய்ச் சத்தமும் வாழ்விலே
...இன்னலாய் வந்திடும் போதில்
துடியாய்த் தோல்வியில் துவண்டிடத்
....தோன்றிடும் வேளையில் நீயும்
பிடியாய்க் கொள்வது துணிவுடன்
....பிடித்தவுன் குடையுடன் கூடி
மடியா நோக்கிலே படிப்பினை
...மட்டுமே நினைத்தலைப் போல
 
 
 
-”கவியன்பன்” கலாம்



    Tags :    
மழையில் பள்ளிக்குச் செல்லும் மாணவி! - -”கவியன்பன்” கலாம்,Tamil kavithai மழையில் பள்ளிக்குச் செல்லும் மாணவி! - -”கவியன்பன்” கலாம்,Tamil kavithai மழையில் பள்ளிக்குச் செல்லும் மாணவி! - -”கவியன்பன்” கலாம்,Tamil kavithai
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நினைவுகள்.... - வெ.ஆறுமுகம், உடையம்புளீ
கரைந்து செல்லும் நிமிடங்களிலும் அவள்நினைவுகளை வரைந்துகொண்டு இருக்கிறேன் கவிதையாக‌- வெ.ஆறுமுகம், உடையம்புளீ

மேலும்...

 கண்ணீர்ப்பூக்கள் ..........- ஈஸ்வர் தனிக்காட்டுராஜா.
பூஜையறை செல்லும் பூக்கள் தண்ணீரில் நனைக்கபடுகின்றன, கல்லறை செல்லும் பூக்கள் கண்ணீரில் நனைக்கபடுகிறன, தண்ணீரில் நனையும் பூக்களைவிட கண்ணீரில் நனையும் பூக்களையே நான் நேசிக்கிறேன் ! பிறர் சோகங்களை அது சுமப்பதனால்........- ஈஸ்வர் தனிக்காட்டுராஜா....

மேலும்...

 மிதி வண்டி - முனைவர்.ச.சந்திரா
ஏழைகளின் புஷ்ப வாகனம் நீ சிறார்களின் சொர்க்க வாகனம் நீ எத்தனை முறை மிதித்தாலும் எதிர்த்தே பேசாத மௌன வாகனமும்நீயே! உண்ணாமலேயே உழைக்கும் உன்னத வாகனமும் நீதான் ! இயந்திரம் இல்லாமலேயே சுழலும் இரும்பு வாகனமாம் மிதிவண்டியே 1உன் சிறப்பு இவ்வுலகில் எதற்குண்டு? சுமைகளையெல்லாம் தயங்காமல் சுமந்து

மேலும்...

 மின்னல் மீது - அன்புடன் மலிக்கா
வழக்குத்தொடரப்போகிறேன் வானத்தின் கோர்ட்டில் உத்தரவு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in