tamilkurinji logo


 

மண்ணும் மக்களும் - தொகுப்பு: கவிஞர் இரா.ரவி,




மண்ணும் மக்களும் - தொகுப்பு: கவிஞர் இரா.ரவி

First Published : Friday , 23rd October 2009 06:55:31 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM




Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

மண்ணும் மக்களும் - தொகுப்பு: கவிஞர் இரா.ரவி, அறிஞர் முனைவர் தொ.பரமசிவம் உரை அறிஞர் முனைவர் தொ.பரமசிவம் உரை
தலைப்பு : மண்ணும் மக்களும்
தொகுப்பு: கவிஞர் இரா.ரவி

மதுரை புகழ்மிக்க மதுரை.கடவுளையே மண் சுமக்க வைத்த மதுரை.மதுரை மண் சுமந்து என்று பாடலும் உள்ளது.தமிழ் அறிவுலகம் உருவாக்கிய பெருமை மதுரைக்கு உண்டு. உலகத்தையும் மதுரையையும் தராசில் நிறுத்துப் பார்த்தால் உலகம் மேலே போகும்., மதுரை கீழே வரும். அவ்வளவு அறிவாற்றல் மிக்க ஊர் மதுரை.கடவுளின் பாடலையே,பொருட்பிழை உள்ளது என வாதிட்ட பெருமை பெற்றது மதுரை.வயதாகி விட்டதால் மனிதன் மதிக்கப்படுவதில்லை.ஆனால் நூல்கள் வயதானாலும் மதிக்கப்படும்.

நான் சிறுவனாக இருந்த போது,12 வயதில் வீட்டில் சேட்டை செய்து விட்டு நூலகத்தில் ஒளிந்தேன்.அங்கே சிறுவர் பிரிவு இருந்தது.அன்று ஒரு நூலை எடுத்துப் படித்தேன்.அன்று படித்த அந்த நூலின் விதை எனக்குள் முளைத்தது.45 ஆண்டுகள் ஆகியும் இன்னும் மறக்கவில்லை.அந்த நூலைப் படித்ததன் விளைவாகவே மனித உரிமை ஆர்வலராக இருந்து வருகிறேன்.யாருக்கும் உரிமை மறுக்கப்படக்கூடாது என்பது என் எண்ணம்.

மண்ணில் விதைத்த விதை கூட சில சமயம் விளையாமல் போகலாம்.ஆனால் மனித மனத்தில் விழுந்த சிந்தனை முளைக்கத் தவறுவதில்லை.ஒவ்வொரு புத்தகத்திலும் ஒரு மனிதன் வாழ்கிறான்.நம்மை திரும்ப வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும் நுல்கள் நல்ல நூல்கள்.அவ்வகையில் புதுமைப்பித்தனின் நூலை 200 முறை நான் வாசி;த்து இருக்கிறேன்.

கிறித்தவ நண்பர் ஒருவர் சொன்னார்,சாகும் வரை தலைமாட்டில் 2 நூல் இருக்க வேண்டும்.ஒன்று விவிலியம்,மற்றொன்று அகராதி. திருவள்ளுவர்,சாகும் வரை படிக்க வேண்டும் என்றார்.அதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் அறிஞர் அண்ணா.முதல்வராக இருந்த போது,உடல் நலம் குன்றி,மருத்துவமனை செல்லும் போது கூட,படிக்க நூல்களைக் கொண்டு சென்றார் என்று 19 வயதில் நான் செய்தி படித்தேன்.இன்றும் என் நினைவில் உள்ளது.

1832-ம் ஆண்டு முதல் அறிவியல் தமிழ் நூல் வந்தது.ஒரு ஜெர்மானியர் பாளையங்கோட்டையிலிருந்து எழுதினார்.நான் பிறந்த ஊர் பாளையங்கோட்டை.முதன் முதலில் பார்வையற்றோருக்கும்,காது கேளாதோருக்கும் பள்ளி அமைந்த ஊர்.இந்த ஊர் சிறையில் தான் சித்தரஞ்சன் தாஸ்,வ.உ.சிதம்பரம்,கலைஞர் போன்றோர் இருந்தார்கள்.

வாசிப்பு உணர்வை உருவுhக்க இது போன்ற மேடைகள் உருவாக்கி உள்ளனர் பிரேமி எழுத்துக்கள் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது மதுரை மாவட்டத்தில் தான்.

அறிஞர்கள் மட்டும் பயன்படுத்தியதாகத் கூறப்பட்ட எழுத்துக்களை நாட்டார் மக்களும் பயன்படுத்தியதற்கான ஆதாரம் சமீபத்தில் கிடைத்து உள்ளது.மதுரை எழுத்து தந்த ஊர்,எண்ணம் தந்த ஊர்,இலக்கியம் தந்த ஊர்,மதுரையின் பெருமையை சொல்லிக் கொண்டே போகலாம்.

திருக்குறளுக்கு ஸ்காட் என்ற வெள்ளையர் உரை எழுதினார். ஆவர் பெயரில் மதுரையில் ஒரு சாலை உள்ளது.தவறாக உரை எழுதிய நூல்களை,பாண்டித்துரைத் தேவர் கொண்டு வரச் சொல்லி தீயிட்டுக் கொளுத்தினார்.காரணம் வருங்கால சந்ததிக்கு தவறான தகவல் போய் விடக் கூடாது என்பதற்காக.எல்லீசு என்ற ஆங்கிலேயர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.1810-ம் ஆண்டில் பதிப்பித்தார்.தனது பெயரை வள்ளுவதாசன் என்று வைத்துக் கொண்டு,வள்ளுவர் மயிலையில் வாழ்ந்தார் என்று கருதி,மயிலாப்பூரில் ஏழு கிணறுகள் வெட்டினார்.

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினார் வள்ளலார்.வருத்தத்தில் வெற்றி பெற்றார் வடலூர் வள்ளலார்.இளங்கோவடிகள்,மதுரை வைகை ஆற்றில் மிதந்து சென்ற பலவகையான பூக்களை வர்ணிக்கின்றார்.ஒழுக்கம் மிக்க வைகை என்கிறார்.மதுரையில் பெருமை மிக்க நூலகங்கள் பல உள்ளன. மதுரை தமிழ்ச்சங்கத்தில் சென்னையில் கூட கிடைக்காத அரிய பல நூல்கம் உண்டு.பல நூல்கள் வெளிவர உதவிய வள்ளல்,கலைத்தந்தை,கருமுத்து தியாகராசன் அவர்களுக்கு நன்றி கூறி பல நூல்கள் உள்ள பெருமை மதுரைக்கு உண்டு.

ஒவ்வொரு நூலும் நமக்குள் விதைக்கும் விதையை வைத்துள்ளது நாம் நூல்களைப் படிக்கப் படிக்க,நாம் படிக்கவில்லை என்பதை உணருகின்றோம்.தமிழர்கள் அறிவால்,திறமையால்,ஆற்றலால் உயர்ந்தவர்கள்.ஆனால் ஒரு பொருளைத் திட்டமிட்டு பழசாக்கி வழக்கொழிய வைத்து நம்மை முட்டாளாக்கும் வேலையை உலகமயம் செய்து வருகின்றது.அதற்கு எதிராக நாம் கலகக் குரல் கொடுக்க வேண்டும்.

அறிஞர் சாக்ரடீஸ் சொன்னார்,என் அறியாமையை உணர்கின்றேன்.நாம் அறிஞர் அல்ல என்பதை அறிய வைப்பது நூல்கள்.அகங்காரம் அகற்றுவது சைவம்.ஆனால் இன்று,சைவம் படித்து விட்டேன்; என்று அகங்காரமாக இருப்பவர்களும் உண்டு.நண்பர்கள் கூட வருத்தப்படலாம்,சண்டை போடலாம்,நூல்கள் அப்படி அல்ல.ஒரு நண்பர் நூல்களை அடுக்கி வைக்காமல் வீட்டில் கீழே போட்டு இருந்தார்,ஏன் இப்படி? என்று கேட்டதற்கு, நண்பர்கள் இலவசமாக நூல்கள் தான் தருகின்றனர்,அலமாரி தருவதில்லையே என்றார். மிதிவண்டி தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்,ஓய்வு பெற்ற பின் அவரால் மிதிவண்டி தயாரிக்க முடியாது.காரணம் பெல் தயாரிப்பவர் பெல் மட்டுமே தயாரிக்க முடியும்.சக்கரம் தயார் செய்பவர் சக்கரம் மட்டுமே தயார் செய்ய முடியும்.இப்படி திட்டமிட்டு நம்மை முட்டாளாக்கி வைத்தனர் அன்று.உலகமயம் தாராளமயம் என்ற பெயரில் நம்மை முட்டாளாக்கி நமது பண்பாட்டைச் சிதைக்கும் சுரண்டலுக்கு எதிராக உரக்கக் குரல் கொடுப்போம்,நமது பெருமைகளைக் காப்போம்.



    Tags :    
மண்ணும் மக்களும் - தொகுப்பு: கவிஞர் இரா.ரவி, மண்ணும் மக்களும் - தொகுப்பு: கவிஞர் இரா.ரவி, மண்ணும் மக்களும் - தொகுப்பு: கவிஞர் இரா.ரவி,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பணிவோம், உயர்வோம்!
பிறர் தவறு செய்தால், ஏன் இப்படி செய்தார் என்று சிந்தித்து நேரத்தை வீணாடிக்கக் கூடாது.சோர்வடைந்து காணப்படும் எவரையும் பார்த்து ஏன் உடல்நலம் சரியில்லையா? என்ன ஆயிற்று என்றெல்லாம் கேட்கக் கூடாது.பிறர், உங்களுக்குச் செய்யும் உதவிகளை மனதில் வைத்து நன்றி பாராட்டுங்கள்.யாரிடமும் சம்பளம்

மேலும்...

 மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்
எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் சந்தோஷத்தை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்பதைத் தான் நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை. அதனால் தான்  நமக்குள்ளேயே இருக்கிற சந்தோஷத்தை வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்எப்போதும் சந்தோஷமாக, சிரித்துக் கொண்டு

மேலும்...

 திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்
 எப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள் கூட திருமணத்திற்கு பிறகு சதை போட்டு விடுகிறார்கள்.ஏன் ஒரு பெண் திருமணம் ஆன பிறகு மட்டும் குண்டாகிறாள்? இதற்காக ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 10 வருடங்களாக

மேலும்...

 முதுமை பற்றிய பொன் மொழிகள்
மூப்பை வெல்ல உண்மையான வழி, உள்ளத்தின் இளமையை போற்றிப் பாதுகாப்பதே.முதுமை எய்துவது ஒரு கெட்டப் பழக்கம். வேலையில் முனைந்திருக்கும் மனிதனுக்கு அதற்கு அவகாசம் இல்லைஇலக்கியங்கள் இளமையில் உற்சாகத்தையும், முதுமையில் மகிழ்ச்சியும் கொடுக்கின்றன.முதுமையை முன்னிட்டு முன்னதாகச் செய்யும் பாதுகாப்புகளில் சிறந்தது கல்வி.வாழ்நாட்களின் இனிய

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in