tamilkurinji logo


 

போர் அவசியமா? - கே.ஆர்.பி.செந்தில்,




போர் அவசியமா? - கே.ஆர்.பி.செந்தில்

First Published : Saturday , 27th December 2008 08:16:06 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM




Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

போர் அவசியமா? - கே.ஆர்.பி.செந்தில், தற்போது இந்தியாவும் , பாகிஸ்தானும் ஒருவருக்கு ஒருவர் நான் தாக்கப்போகிறேன் என்றும் , தாக்கினால் திருப்பி தாக்குவேன் என்றும் மாறி மாறி அறிக்கை விடுகிறார்கள் , ஆனால் போர் வந்தால் என்ன ஆகும் என்பதை இருவரும் உணர்ந்துதான் பேசுகிறார்களா ?

மும்பை தாக்குதலைபோல இதற்க்கு முன் எத்தனையோ தீவிரவாத தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவத இயக்கங்கள் நடத்தி உள்ளன , அப்போதெல்லாம் கோபப்படாத நாம் இப்போது மட்டும் ஏன் வரிந்து கட்டிக்கொண்டு போருக்கு தயாராகிறோம் ?

அப்போது செத்ததெல்லாம் அப்பாவி ஏழை இந்தியர்கள் மட்டுமே , ஆனால் இப்போதைய தாக்குதலில் செத்தது பணக்கார இந்தியனும் , இஸ்ரேலியர்களும் , இங்கிலாந்துகாரர்களும் , மற்ற வெளிநாட்டவர்களும் , இதில் சத்ரபதி ரயில் நிலையத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவிகளைப்பற்றி எந்த மீடியாவும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை , எனவே இது அப்பட்டமாக அமெரிக்கா மற்றும் நேட்டோ நம்மீது இந்த போரை வலிந்து திணிக்கப்பார்க்கிறது , இதனால் பலியாகப்போகிறது இலட்சக்கணக்கான உயிர்களும் நமது பொருளாதாரமும்தான் .

இதில் உண்மையாகவே நாம் செய்ய வேண்டியது :

பாகிஸ்தான்மீது எல்லா நாடுகளையும் பொருளாதார தடை விதிக்கும்படி வலியுறுத்தலாம் ,நமக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள உறவை துண்டிக்கலாம் ,நம் பாதுகாப்பை வலுப்படுத்தலாம், மேலும் எம் .கே . நாராயணனிடம் உள்ள துறையை வேறு நல்ல துடிப்பான ஒருவரிடம் ஒப்படைக்கலாம் , உளவுத்துறையை எதிர்கட்சிகள் பற்றி துப்பறிய மட்டும் பயன்படுத்தாமல் தேசத்தின் பாதுகாப்புக்கு மட்டும் பயன்படுத்தலாம் , புதிதாக உருவாகும் தேசிய புலனாய்வு பிரிவை சுதந்திரமான அமைப்பாக உருவாக்கலாம்.

மேலும் ,பொதுமக்களுக்கு இந்த போரில் உடன்பாடு உண்டா என்ற கருத்தையும் அவசியம் கேட்க வேண்டும்.

இனி, போர் என்பது வளர்ந்த மானுடத்தின் வெட்கங்கெட்ட செயல் , அது ஈராக் மற்றும் ஆப்கான் மீது அமெரிக்கா தொடுத்த போராக இருக்கட்டும் , பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் தொடுத்த போராகட்டும், தமிழர்கள் மீது இலங்கை நடத்தும் போராகட்டும் எல்லாமே கண்டிக்கப்பட வேண்டிய காட்டுமிராண்டித்தனம்.

மனிதன் அமைதியாக வாழத்தான் விரும்புகிறான் ஆனால் முட்டாள் மத தலைவர்களும் , அரசியல் தலைவர்களும் சுயலாபங்களுக்காக வன்முறைகளை தூண்டுகிறார்கள் அதற்கு அமைதியை உலகுக்கு தொடர்ந்து வலியுறுத்திவரும் நம் தேசம் பலிகடா ஆகிவிடக்கூடாது ..

புத்தன் , வள்ளுவன் , இராமானுஜன் , காந்தி மற்றும் எண்ணற்ற அகிம்சாவாதிகள் பிறந்த மண் இது ...... தயவுசெய்து போர் வேண்டாம் .......

- கே.ஆர்.பி.செந்தில்

**கட்டுரைகளில் இடம் பெறும் கருத்துக்கள் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்தே தவிர தமிழ்குறிஞ்சியின் கருத்தல்ல



    Tags :    
போர் அவசியமா? - கே.ஆர்.பி.செந்தில், போர் அவசியமா? - கே.ஆர்.பி.செந்தில், போர் அவசியமா? - கே.ஆர்.பி.செந்தில்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பணிவோம், உயர்வோம்!
பிறர் தவறு செய்தால், ஏன் இப்படி செய்தார் என்று சிந்தித்து நேரத்தை வீணாடிக்கக் கூடாது.சோர்வடைந்து காணப்படும் எவரையும் பார்த்து ஏன் உடல்நலம் சரியில்லையா? என்ன ஆயிற்று என்றெல்லாம் கேட்கக் கூடாது.பிறர், உங்களுக்குச் செய்யும் உதவிகளை மனதில் வைத்து நன்றி பாராட்டுங்கள்.யாரிடமும் சம்பளம்

மேலும்...

 மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்
எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் சந்தோஷத்தை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்பதைத் தான் நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை. அதனால் தான்  நமக்குள்ளேயே இருக்கிற சந்தோஷத்தை வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்எப்போதும் சந்தோஷமாக, சிரித்துக் கொண்டு

மேலும்...

 திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்
 எப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள் கூட திருமணத்திற்கு பிறகு சதை போட்டு விடுகிறார்கள்.ஏன் ஒரு பெண் திருமணம் ஆன பிறகு மட்டும் குண்டாகிறாள்? இதற்காக ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 10 வருடங்களாக

மேலும்...

 முதுமை பற்றிய பொன் மொழிகள்
மூப்பை வெல்ல உண்மையான வழி, உள்ளத்தின் இளமையை போற்றிப் பாதுகாப்பதே.முதுமை எய்துவது ஒரு கெட்டப் பழக்கம். வேலையில் முனைந்திருக்கும் மனிதனுக்கு அதற்கு அவகாசம் இல்லைஇலக்கியங்கள் இளமையில் உற்சாகத்தையும், முதுமையில் மகிழ்ச்சியும் கொடுக்கின்றன.முதுமையை முன்னிட்டு முன்னதாகச் செய்யும் பாதுகாப்புகளில் சிறந்தது கல்வி.வாழ்நாட்களின் இனிய

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in