tamilkurinji logo


 

பொங்கல் பொங்குவதெப்போது? - ஆல்ப‌ர்ட், அமெரிக்கா.,Tamil kavithai pongal

Tamil,kavithai,pongal
பொங்கல் பொங்குவதெப்போது? - ஆல்ப‌ர்ட், அமெரிக்கா.

First Published : Monday , 14th January 2013 10:51:59 PM
Last Updated : Monday , 14th January 2013 10:55:20 PM
பொங்கல் பொங்குவதெப்போது? - ஆல்ப‌ர்ட், அமெரிக்கா.,Tamil kavithai pongal நிலை மாடங்கள் நெற்றியில் காப்புக்கட்டல்!
குலை நடுங்கும் மார்கழிக் குளிரில் நீராடல்!
களைந்திட்ட குப்பைகளை உறைவிடத்தில்
பழையன பொசுக்கிப் போகிப் பொங்கல்!

பச்சரிசி மாக் கரைத்து, காவிக்கட்டி வைத்து
கச்சிதமாய் இல்லமெலாம் வண்ணக்கோலமிட்டு
மிச்சமில்லாமல் உறைவிடத்தை நிறைவிடமாக்கி
உச்சி வகிடெடுத்த பெண்களின் கைவண்ணம்
மெச்சி, சூரியப் பொங்கலுக்கு உகந்த நேரத்தைக் கணிப்பர்!

மண் பானை புதுமெருகோடு
வண்ணக் கோலமதில் வாகோடு
தின்னத் திகட்டாத கரும்புக் காவலோடு
தண்டு மஞ்சளிஞ்சிக் குருத்தோலையோடு
பின்னல் போட்ட பொங்கல் பானை!
கண்கள் மகிழ்ச்சிப் பூக்கள் பளிச்சிட‌
அன்னமிடும் கரங்கள் பொங்கும் பொங்கலோ பொங்க‌ல்!

மாடுக‌ள் கொம்பு சீவி
மிடுக்காக‌ வ‌ண்ண‌ம் பூசி
வீடு வாச‌ல் வ‌ண்ண‌க் கோல‌மிட்டு
காடுக‌ள‌மிருந்து வ‌ந்த‌ ப‌ச்சை ம‌ண‌க்க‌
நாடு செழிக்க‌ நோன்பு முடித்த‌
பாடு குயில் பெண்க‌ள் பொங்கும் மாட்டுப் பொங்க‌ல்!

நாவூறும் க‌ரும்புக் கூட்ட‌ங்க‌ள்
பாலூறும் ப‌சுக்க‌ள்,கால்நடைகள் சூழ‌
தாவும் மஞ்சுவிரட்டுக்காளைகள்
காங்கேயம் காளைகள் களைகட்டிநிற்க‌
பாங்காய் சிறிசுகளும் பெரிசுகளும்
வாய் கூவும் பொங்கலோ பொங்கல்!

போகிப் பொங்கல்,
சூரியப் பொங்கல்,
மாட்டுப்பொங்கல்,
காணும் பொங்கல்
காணுமா இந்தப் பொங்கல் திருநாள்?
வேணும் எமக்கு இப் பொங்கல் விழா! - நன்றி நவில‌
வேணும் எமக்கு இப் பொங்கல் திருவிழா!

'பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தை முதல் நாள், பொங்கல் நன்னாள்''
புரட்சிக் கவி உரைத்திட்ட பொங்கலிது!


புத்தாண்டு, தமிழருக்கு தை முதல் நாளே!
இத்தரணியில் நற்றிணை சொன்னதும் அதுவே!
வித்தகமாம் புறநானூறு பிறழாமல் சொன்னதும் அதுவே!
பொத்தாம் பொதுவில் குறுந்தொகை கூறுவதுமதுவே!
சத்தமில்லாமல் கலித்தொகை இயம்புதலுமதுவே!
சத்தியமாய் ஐங்குறுநூறு உரைப்பதுமதுவே!

வரப்புயர நீருயரும்! நீருயர நெல்லுயரும்! நெல்லுயுர குடியுயரும்!
குடியுயர கோனுயர்வான்! - தேனூறும் வைர வரிகள்!

அந்த நாள் நினைவலைகளில் இந்தக் கவிதையூறியது!
இந்த நாளில் அரங்கேறும் அவலக் காட்சிகளில் என்
சிந்தனை சிதறி வேதனையே பொங்குகிறது!

சோற்றில் நாம் கைவைக்க, உழவன் சேற்றில் நிற்க வேண்டும்!
ஆற்றில் தண்ணீர் விட‌மறுக்கும் அரசுகளால் பயிர்கள்
காற்றில் வாடி வதங்கி உயிர் துறக்கும் நிலை
முற்றிலும் மாறுவதெப்போது? மனமகிழ்ந்து
சுற்றமும் சூழமும் சேர்ந்து பொங்கல் பொங்குவதெப்போது?

முள்ளிவாய்க்காலின் இழப்பே இன்னும்
முள்ளு வேலிகளுக்குள் மூச்சடங்கிக் கிடக்குது.
மல்லுக்கட்டயியலாமல் மடிந்துகிடக்கும் எம்மினமங்கு
சொல்லுங்கள் இவர்கள் பொங்கல் பொங்குவதெப்போது?

இடிந்தகரையில் இடியாமல் போராடும் எம் தமிழர்
மடிப்பிச்சையாய் உயிர் பிச்சை கேட்கிறார்களே? இவர்கள்
கூடிக்கூடி நாளும் பொங்குகிறார்கள்; இவர்களுக்கு
அடிதடியும் சிறையும்தானே;இவர்கள் பொங்கல் பொங்குவதெப்போது?

மின்ன‌லாய்த் தோன்றி ம‌றையும்
மின்சார‌மில்லா இருட்டில்
ம‌ண்ணும் வான‌மும் பொய்த்து
உண்ண‌ உண‌வில்லாம‌ல்
த‌ன்னுயிர் போக்கும் உழ‌வ‌ர் குடும்ப‌ப்
புன்ன‌கையைப் ப‌றித்து
இன்ன‌ல்களைப் பரிச‌ளித்துவிட்டு
பொங்க‌லோ பொங்க‌ல் என்று பொங்குவ‌தெப்போது?

பொங்க‌ல் ப‌ரிசை திருப்பிய‌ளித்து
த‌ங்க நிகர் உழவனுக்கு கொடுங்க‌ள்
என்ற தேனூறும் செய்தி கேட்டு
அந்த‌த் திசை நோக்கி வ‌ண‌ங்குகிறேன்.

- ஆல்ப‌ர்ட், அமெரிக்கா.    Tags :    
பொங்கல் பொங்குவதெப்போது? - ஆல்ப‌ர்ட், அமெரிக்கா.,Tamil kavithai pongal பொங்கல் பொங்குவதெப்போது? - ஆல்ப‌ர்ட், அமெரிக்கா.,Tamil kavithai pongal பொங்கல் பொங்குவதெப்போது? - ஆல்ப‌ர்ட், அமெரிக்கா.,Tamil kavithai pongal
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பொங்கல் வாழ்த்து - ”கவியன்பன்” கலாம்
வாய்க்கால் தண்ணீர் வந்திடும்      வாய்ப்பு மில்லை; பெய்திடும் பேய்போல் வெள்ளம் சூழ்ந்திடும்          பேரா பத்தால் நெற்கதிர் காய்த்து வந்தும் பொய்த்தது

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in