tamilkurinji logo


 

பூப் பூவாய்ப் பூத்திருக்கு பூமியில்............!!! - கவியன்பன் கலாம்,




பூப் பூவாய்ப் பூத்திருக்கு பூமியில்............!!! - கவியன்பன் கலாம்

First Published : Friday , 9th March 2012 08:57:57 PM
Last Updated : Friday , 9th March 2012 08:57:57 PM




பூப் பூவாய்ப் பூத்திருக்கு பூமியில்............!!! - கவியன்பன் கலாம்,

படைத்தவன் படைத்த
பாமாலை
பாரெங்கும் பூத்திருக்கும்
 பூஞ்சோலை
 
கருப்பையின் கதகதப்பு
அன்னையின் அரவணைப்பு
அத்தனையும் வாடாத பூ
 
 
மனைவியின் இதழ்
மலரும் சிரிப்பு
மாதுளையின் பூ
 
மழலையின்
மாசிலாப் புன்சிரிப்பு
மல்லிகைப் பூ
 
காதலியின்
கன்னச் சிவப்பு
கவரும் ரோசாப் பூ
 
நண்பனின் நட்பு
நாளும் பாதுகாப்பு
அரிதாய்ப் பூக்கும்
குறிஞ்சிப் பூ
 
உறவென்பது
கதம்பப்பூ

 
அத்தனைக்கும்
ஆணிவேர் அன்பு
 
ஆனால்,
 
கல்லின் மீது
பூ வீசியவர்கள்
முதன் முதலாய்
ஒரு பூவின் மீது
கல்வீசினார்கள்
தாய்ஃப் நகரத்தில்
பூவொன்று
புயலானாதால்
வெறுப்பு
 
அப்பூவே

கற்களை வீழ்த்தியது
மாபெரும் வியப்பு!!


அரசியலார் அள்ளி வீசும்
வாக்குறுதி காகிதப் பூ
 
 
என்று மினிக்கும் இலக்கியம் போலவே
தென்றலும் பூவாசம் தூவிட- நன்றாய்
அகத்தி லிறங்கிடும் அப்பொழுதில் பூவின்
சுகந்தம் தருமே சுகம்.



    Tags :    
பூப் பூவாய்ப் பூத்திருக்கு பூமியில்............!!! - கவியன்பன் கலாம், பூப் பூவாய்ப் பூத்திருக்கு பூமியில்............!!! - கவியன்பன் கலாம், பூப் பூவாய்ப் பூத்திருக்கு பூமியில்............!!! - கவியன்பன் கலாம்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in