tamilkurinji logo


 

பிளஸ் 2 உயிரியல் பாடத்தில் நூறு சதவீத மதிப்பெண் பெறுவது எப்படி?,




பிளஸ் 2 உயிரியல் பாடத்தில் நூறு சதவீத மதிப்பெண் பெறுவது எப்படி?

First Published : Monday , 28th September 2009 08:53:07 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM




Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

பிளஸ் 2 உயிரியல் பாடத்தில் நூறு சதவீத மதிப்பெண் பெறுவது எப்படி?,
பிளஸ் 2 உயிரியல் பாடத்தில் நூறு சதவீத மதிப்பெண் பெறுவது எப்படி என்பது பற்றி ஆலோசனை தருகிறார், கோவை எஸ்.பி.ஓ.ஏ.,மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் உயிரியல் ஆசிரியையும் துணை முதல்வருமான ஜி.கீதா.


உயிரியல் பாடத்தில் நூறு சதவீத மதிப்பெண் பெற, தேர்வுக்கான பாடங்களை முதலில் திட்டமிட வேண்டும். பின் அதற்கேற்ப தயாராக வேண்டும். படித்த விடைகளை எழுதிப் பார்க்க வேண்டும்.


அன்றாட பாடங்களை அன்றே படித்து முடித்து விட வேண்டும். தேர்வுக்கென படிக்கும் போது, குறுந்தலைப்புகளை திரும்ப, திரும்ப நினைவுபடுத்தி பார்க்க வேண்டும். உயிரியல் பாடத்தை பொறுத்தவரையில் 30-40 சதவீத மதிப்பெண்கள் வரைபடத்துக்கு ஒதுக்கப்படுவதால், படம் வரைந்து பாகங்களை அடையாளப்படுத்த பயிற்சி பெற வேண்டும். நூறு சதவீத மதிப்பெண் பெற விரும்புபவர்கள், குறைந்தபட்சம் ஐந்து முறையாவது மாதிரி வினாத்தாள்களுக்கு விடையளித்து பயிற்சி பெற வேண்டும்.


கேள்வித்தாளின் முதல் பகுதியில், முதல் 30 வினாக்கள் ஒரு மதிப்பெண் கொண்டவை. இந்த வினாக்களுக்கு விடையளிக்கும் போது, கவனமாக சரியான வினா எண்ணை குறிப்பிட்டு அதற்குண்டான விடைகளை எழுத வேண்டும். இரண்டாவது பகுதியில் உள்ள மூன்று மதிப்பெண் வினாக்களுக்கு, குறைந்தபட்சம் கண்டிப்பாக மூன்று முக்கிய பாயின்டுகளை எழுத வேண்டும். அதற்குரிய உதாரணமும் குறிப்பிட்டால் முழு மதிப்பெண் உத்தரவாதம்.


மூன்றாவது பகுதியில் ஐந்து மதிப்பெண் வினாவும், நான்காவது பகுதியில் 10 மதிப்பெண் வினாவும் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த இரண்டு பகுதி வினாக்களுக்கும் விடை அளிக்கும் போது முதலில் முன்னுரையுடன் துவங்க வேண்டும். விடையை பாயின்ட் வாரியாக எழுதி, முக்கியமானவற்றை அடிக்கோடிட்டு காட்ட வேண்டும். "ப்ளோ சார்ட்' இருந்தால் தவறாமல் வரைய வேண்டும். வரைபடங்கள் தேவையான இடங்களில் தெளிவாக வரைந்து, அனைத்து பாகங்களையும் தெளிவாக குறிப்பிட வேண்டும்.


உயிரியல் பாடத்தில் பின்தங்கிய மாணவர்கள், வகைப்பாட்டியல், தாவர உள் அமைப்பியல், தாவர செயலியல், நுண்ணுயிரியல், நோய் தடை காப்பீடு இயல், மரபியல், சுற்றுச்சூழல் அறிவியல், பயன்பாடு உயிரியல், பரிணாம கோட்பாடுகள் ஆகிய பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து படிப்பது நல்லது. கட்டாயமாக பதில் அளிக்க வேண்டிய ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு தவறாமல் விடையளிக்க வேண்டும். உதாரணம் குறிப்பிட வேண்டிய வினாக்களுக்கு அவ்வாறே பதில் அளிக்க வேண்டும்.


தேர்வின் காலத்தை கணக்கில் கொண்டு, வினாக்களுக்கான விடைகளை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும். குறித்த காலத்துக்கு 10 நிமிடம் முன்னதாக விடைத்தாள்களை வரிசைப்படுத்தி, மீண்டும் ஒருமுறை விடைகளை சோதித்து பார்க்க வேண்டும். நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நூறு சதவீத மதிப்பெண் பெறுவது உறுதி.



    Tags :    
பிளஸ் 2 உயிரியல் பாடத்தில் நூறு சதவீத மதிப்பெண் பெறுவது எப்படி?, பிளஸ் 2 உயிரியல் பாடத்தில் நூறு சதவீத மதிப்பெண் பெறுவது எப்படி?, பிளஸ் 2 உயிரியல் பாடத்தில் நூறு சதவீத மதிப்பெண் பெறுவது எப்படி?,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பணிவோம், உயர்வோம்!
பிறர் தவறு செய்தால், ஏன் இப்படி செய்தார் என்று சிந்தித்து நேரத்தை வீணாடிக்கக் கூடாது.சோர்வடைந்து காணப்படும் எவரையும் பார்த்து ஏன் உடல்நலம் சரியில்லையா? என்ன ஆயிற்று என்றெல்லாம் கேட்கக் கூடாது.பிறர், உங்களுக்குச் செய்யும் உதவிகளை மனதில் வைத்து நன்றி பாராட்டுங்கள்.யாரிடமும் சம்பளம்

மேலும்...

 மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்
எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் சந்தோஷத்தை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்பதைத் தான் நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை. அதனால் தான்  நமக்குள்ளேயே இருக்கிற சந்தோஷத்தை வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்எப்போதும் சந்தோஷமாக, சிரித்துக் கொண்டு

மேலும்...

 திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்
 எப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள் கூட திருமணத்திற்கு பிறகு சதை போட்டு விடுகிறார்கள்.ஏன் ஒரு பெண் திருமணம் ஆன பிறகு மட்டும் குண்டாகிறாள்? இதற்காக ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 10 வருடங்களாக

மேலும்...

 முதுமை பற்றிய பொன் மொழிகள்
மூப்பை வெல்ல உண்மையான வழி, உள்ளத்தின் இளமையை போற்றிப் பாதுகாப்பதே.முதுமை எய்துவது ஒரு கெட்டப் பழக்கம். வேலையில் முனைந்திருக்கும் மனிதனுக்கு அதற்கு அவகாசம் இல்லைஇலக்கியங்கள் இளமையில் உற்சாகத்தையும், முதுமையில் மகிழ்ச்சியும் கொடுக்கின்றன.முதுமையை முன்னிட்டு முன்னதாகச் செய்யும் பாதுகாப்புகளில் சிறந்தது கல்வி.வாழ்நாட்களின் இனிய

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in