tamilkurinji logo
 

பள்ளிகள் ஓர் அனுபவப்பாடம் - ராஜேஸ்வரி,

பள்ளிகள் ஓர் அனுபவப்பாடம் - ராஜேஸ்வரி

First Published : Sunday , 22nd February 2009 07:52:52 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM







பெற்றவர்கள் தத்தம் பிள்ளைகள் நல்ல பள்ளியில் பயின்று, நல்ல கல்வி பயில வேண்டும் என்றே விரும்புவர்,அவர் பணக்காரராக இருந்தாலும் சரி,ஏழையாய் இருந்தாலும் சரி.ஆனால் அவர்களுக்கு ஒரு பள்ளியை பற்றி எவ்வாறு தெரியும்,கண்டிப்பாக அந்த பள்ளி அந்த வருடம் சென்டம் ரிசல்ட் வாங்கியதா ,ஏதாவது ஒரு பாடத்தில் முழு மதிப்பெண் வாங்கியதா என்பதை வைத்து தான் முடிவு செய்வார்கள் ..ஆனாலும் அதையும் தாண்டி சில விஷயங்கள் இருக்கின்றன என்பதை ஒரு முன்னாள் ஆசிரியை என்ற முறையில் பின்வருபனவற்றை கூறுகிறேன் ......

சென்னையில் B.Ed முடித்த பின்பு , சென்னேயிலேயே வேலை பார்க்கலாம் என்ற முடிவில் ,படித்து கொண்டிருக்கும்போதே போரூர் பள்ளியிலும் வேளச்சேரியில் உள்ள ஒரு பள்ளியிலும் appointment order வாங்கினேன் .ஆனால் வீட்டின் ,சில சூழ்நிலை காரணமாக , கடைசி நேரத்தில் ,சென்னைக்கு வர இயலாமல் போனது ..

ஆகவே வீட்டில் இருந்தபடியே அங்கே இருக்கும் சில பள்ளிகளுக்கு அப்ளை செய்திருந்தேன். அந்த நேரத்தில் தான் பிரபல பத்திரிக்கை ஒன்றில் வந்த விளம்பரம் என் கவனத்தை ஈர்த்தது .உசிலம்பட்டி அருகே எழுமலை என்ற ஊர் .அதன் பக்கத்திலேயே உள்ள ஒரு சிறு "......பட்டி " என்ற கிராமத்தில் இருந்த பள்ளியின் விளம்பரம் தான் அது.அதாவது "கடந்த பத்து வருடங்களாக பத்து மற்றும் +2 வில் முழு தேர்ச்சி " என்பதுதான் .இதை பார்த்ததும் சரி அங்கு சென்று பார்போம் என்று முடிவு செய்து , நேரடியாக வரச்சொன்ன நாளில் ,நானும் எனது அப்பாவும் கிளம்பினோம் .எங்கள் வீட்டில் இருந்து உசிலம்பட்டியை அடைய இரண்டு மணி நேரம் ஆகும் (பஸ்சில்)..

பஸ்சில் செல்லும் போது ஒரே கனவு ..சென்டம் ரிசல்ட் பள்ளி என்பதால் ,மாணவர்கள் நன்றாக படிக்ககூடியவர்கலாய் இருப்பார்கள் ,ஒழுங்கான வரைமுறைகளை பின்பற்றும் பள்ளியாய் இருக்கும் என்று பல பல ....

காக்க காக்க மாயா மாதிரி இல்லாவிட்டாலும், கடலோரக்கவிதைகள் ஜெனிபிர் மாதிரியாவது ஆகலாம் என்று நினைத்துக்கொண்டே ,உசிலம்பட்டியில் வந்து இறங்கினோம் ..நாங்கள் போகவேண்டிய .....பட்டிக்கு ,எந்த பஸ் என்று விசாரிக்க என் அப்பா சென்றார். அந்த சிறிது நேரத்தையும் நான் ஜெனிபெராக பயன்படுத்திக்கொண்டேன் .அப்பாவும் வந்தார் ,பஸும் வந்தது ...வண்டியும் கிளம்பியது ..

சில நொடிகளே ஆகியிருக்கும் ..நான் வானுக்கும் பூமிக்கும் பறந்து கொண்டிருந்தேன்.அட ,பாதை அந்த மாதிரிங்க ....

கனவு மெய்ப்பட வேண்டும் என்று பாரதி ஏன் வருந்தி பாடினார் என்பதன் விளக்கத்தை அன்று நான் அறிந்து கொண்டேன் ..."பச்சகிளி பாடும் பாட்டு ..பஞ்சு மெத்தை புல்ல பாரு ..மஞ்சளாறு பாயும் அந்த ஊரு " என்று கனவில் நான் பாடிக்கொண்டே வந்த அந்த பாடல் "காடு பொட்டக்காடு ,செங்காத்து வீசும் காடு என்று பாட வைத்தது.

என் கண் முன்னே போரூர் பள்ளியும் வேளச்சேரி பள்ளியும் நிழலாடின. ஆனாலும் புது புது அனுபவங்களே வாழ்க்கை என்று தேற்றிக்கொன்றே ,அப்பள்ளியின் வாசலில் வந்து இறங்கினோம்.மணி 10.30 interview என்பதால் நிறைய பேர் அங்கு உட்கார்ந்திருந்தனர் .நேரம் நகன்று கொண்டே இருந்தது ..ஆனால் interview எடுக்கவே ஆரம்பிக்கவில்லை .மணி 12.30.பசி வயிற்றை கிள்ளியது .

சரி சாப்பிட்டு விட்டு வரலாம் என்று கிளம்பியபோது, ஆபிசில் இருக்கும் ஒருவர் வந்து ,அனைவரும் விடுதியிலே சாப்பிட்டுக்கொள்ளுங்கள் என்றார் .சரி என்று நானும் இன்னும் சில ஆசிரியைகளும் பெண்கள் விடுதிக்கு சென்றோம் .அப்பள்ளி residential பள்ளி .உணவு அவ்வளவாக ஒன்றும் நல்லாயில்லை .

சாப்பிட்டு முடித்து ,மறுபடியும் எங்களது இருக்கைகளில் வந்து அமர்ந்துகொண்டோம்.அதற்குள் அனைவரும் நன்றாக பழக ஆரம்பித்து விட்டோம் .மணி3.30. Interview ஆரம்பித்தது ..என் டெர்னும் வந்தது .

தொடரும்.....
- ராஜேஸ்வரி

இவரது மற்ற பதிவுகளைக் காண :ரசனைக்காரி



    Tags :    
பள்ளிகள் ஓர் அனுபவப்பாடம்  - ராஜேஸ்வரி, பள்ளிகள் ஓர் அனுபவப்பாடம்  - ராஜேஸ்வரி, பள்ளிகள் ஓர் அனுபவப்பாடம்  - ராஜேஸ்வரி,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கேமரா முன்பு குழந்தை பெற்ற ஸ்வேதா மேனன் - வீடியோ
கேமரா முன்பு குழந்தை பெற்ற ஸ்வேதா மேனன் - வீடியோ பார்க்க இங்கே கிளிக்கவும்

மேலும்...

 ஹிந்து பத்திரிக்கையில் என்னை பாராட்டி வந்தக்கட்டுரை
இன்று ஹிந்து பத்திரிக்கையில் என்னைப்பற்றி ஒரு கட்டுரை வந்துள்ளது. காரணம் உலகசினிமா. ஆயிரக்கணக்கான சதுர அடியில் ஆடம்பரமான உள் அலங்காரங்கள் எதுவுமின்றி ஒரு பொட்டிக்கடை போன்று பத்துக்கு பத்தில் கடை நடத்தி வரும் எனக்கு இவ்வளவு பெரிய பாராட்டா !!!!!!!!!!!!!!!!! நான் ஒரு கதை சொல்லி. என்னிடம்

மேலும்...

 அன்புள்ள இயக்குனர் பாலா அவர்களுக்கு…
அன்புள்ள இயக்குனர் பாலா அவர்களுக்கு, உங்களின் படங்களை எப்போதும் ஆவலுடன் எதிர்பார்த்து ரசிக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவன். நான் அதிகம் ரசிக்கும் தலைவர் படத்திற்கு அடுத்த படியாக இருக்கும் படங்கள் உங்கள் படங்கள் தான். எப்போது உங்கள் படம் அறிவிப்பு வந்தாலும்

மேலும்...

 விந்துக்குள் விந்தை - நிலா மலர்கள்
இறைவனுடைய படைப்பில் எல்லாமே அதிஅற்புதமும் விந்தைகளும் நிறைந்தது, அதில் விந்து ஒரு விந்தையானது, இதைத்தான் இறைவன் கூறுகிறான் உன் பிறப்பை பற்றி நீ சிந்தித்தால் என்னைப் பற்றி அறிந்துக் கொள்வாய் என்று கூறுகிறான். இதில் ஆழமான அர்த்தம் உள்ளது.மனிதன் செழுத்தும் ஒரு சொட்டு விந்தில் பல்லாயிரக் கணக்கான

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in